சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய காரியத்தை செய்து முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். இதுவரை இல்லாத ஒன்றை செய்யவேண்டும். எல்லோருக்கும் உதவி, ஆனால் எவரிடத்தும் நெருங்காத ஒரு சிறந்த ப்ரம்மஞானியை படமாக்கி பட்டிதொட்டிகளுக்கும் புரிய செய்யவேண்டும். எல்லோருக்குமே அவரை தெரியப் படுத்த வேண்டும் என்ற ஒரே எண்ணமே தவிர இதில் காசு பார்க்க அல்ல என்று அந்த இளைஞர்கள் என்னிடம் ரெண்டு நாட்களுக்கு முன் கூறினார்கள்.
அந்த ப்ரம்ம ஞானியை படமாக்குவது என்றால் ஒரு தகுந்த மனிதர் அந்த பாத்திரமேற்க வேண்டுமே கிடைப்பாரா என்று கேட்டபோது, ஒருவரை தேர்வு செய்தாகி விட்டது என்கிறார்கள். பணம் வேண்டாம் என்று நடிப்பவர்கள், இயக்குபவர்கள், அல்லது குறைந்த சம்பளத்துக்கு உழைப்பவர்கள் என்று சிலரை அடையாளம் கண்டு சமீபத்தில் வந்த ப்ரம்மஞானியின் பிறந்தநாள் அன்று பூஜை போட்டு விட்டார்கள். ஒரு காட்சி வந்தவாசியில் படமாக்கியும் விட்டார்கள்.
சேஷாத்திரி ஸ்வாமிகள் பக்தர் ஒருவர் இதில் முனைந்து செயல்
படுகிறார் என்ற செய்தியே எனக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. இதற்கும் சேஷாத்திரி ஸ்வாமிகளின் அருள் இருந்தால் தான் இப்படி ஒரு எண்ணமே அவரை படமாக்க தோன்றும். அது வெற்றியும் பெறும் .
படுகிறார் என்ற செய்தியே எனக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. இதற்கும் சேஷாத்திரி ஸ்வாமிகளின் அருள் இருந்தால் தான் இப்படி ஒரு எண்ணமே அவரை படமாக்க தோன்றும். அது வெற்றியும் பெறும் .
மிக கடினமான ஒரு திட்டம் இது. ஜாக்கிரதை எங்கும் எதிலும் தவறு இல்லாமல் அற்புதமாக அவரை மக்களுக்கு அளியுங்கள் என்று வாழ்த்தி அனுப்பினேன். எல்லாம் அவன் செயல். நல்லிதயம், நல்லெண்ணம் கொண்டவர்கள், சேஷாத்திரி ஸ்வாமிகள் பக்தர்கள் தூக்கி விடட்டும். ஒருவேளை இது ஒரு சிறந்த படமாக அமையலாம் அவர் அருளால். நல்லதையே நினைத்து உதவுவோமே . ஸ்வாமியின் பக்தர்கள் அவர்களை அணுகி நல்ல விதமாக அவர்கள் பணி சிறக்க எல்லாவிதத்திலும் உதவி செய்வார்கள் என்று எனக்குள் ஒரு சிறிய குரல் சொல்கிறது.
No comments:
Post a Comment