Tuesday, January 7, 2020

NATARAJA PATHTHU



நடராஜ பத்து                                      J.K. SIVAN

                                                            

       
       2     ஆடுவது நீ பாடுவது மனம்

உலகம் என்றாலே இயக்கம், அசைவு என்று தான் பொருள். அசையாமல் இருந்தால் ஜடம். உயிரற்றது. இந்த உலகத்தின் எண்ணற்ற உயிர்கள் ''நடமாடுகிறார்கள்''  என்று சொல்கிறோம்.   நடம்  என்றால்  நடனம்,  ஆடல்,  ஆடுவது என்பது அசைவு.  அந்த அசைவை ஏற்படுத்துபவன், தருபவன் ஆடலரசன். நடமாடும் ராஜன்.  நடராஜன். காலைத்தூக்கி நின்றாடும் தெய்வமே என்றும் இடது பதம் தூக்கி ஆடும் என்றும் போற்றுகிறோமே  அந்த பரம சிவன்.

நான் அசைந்தால் அசையும் இந்த அகில மெல்லாமே என்று சிவாஜி கணேசன் பெரிய விழிகளை உருட்டி வெள்ளித்திரையில் பெரிய முகமாக பார்த்தது மறந்து போய்விட்டதா?  என்ன ஒரு அற்புதமான பக்தி காட்சி அது.

சிவன் ஆடினால் வேறென்ன எல்லாம் ஆடும்? அவர் ஏந்திய மான், மழு, பிறை சந்திரன், கங்கை, உடலில் பாதியான சிவகாமி, அவரே தன்னுள்ளான திருமால், வேதங்கள், சாஸ்திரங்கள், கடல், படைக்கும் கடவுளான பிரமன், தேவாதிதேவர்கள், பிரபஞ்சம் பூராவும், சகல லோகமும், விக்னேஸ்வரன்,சுப்ரமணியன், அஷ்ட திக் பாலகர்கள் பதினெட்டு சித்தர்கள், ரிஷிகள், முனீஸ்வரர், நந்தி தேவன், பூத கணங்கள்,  சகல தாவர
 ஜங்கம வஸ்துக்கள், அரம்பையர்கள் எல்லாமே, ஒன்றுவிடாமல் அந்த அசைவில் உண்டு.

ஆகவே ஆனந்த நடேசா ,உனைப்பாடுகிறேன், என் கர்ம வினையும் என்னை விட்டு ஓடட்டும். ஓடுவதும் ஒரு ஆட்டம் தானே, வா வா சிவனே, வா, ஆடி வருவாய் உமேசா இப்போதே வா. இந்த வேளையே வா

என்று பக்தர் பாடினால் சிவன் வராமல் போவானோ?  சிதம்பரேசன் மேல் இவ்வாறு பக்தி கொள்ளவேண்டும்.
கிருஷ்ணன்  ஆடமாட்டான், ஆட்டிவைப்பவன்.  ''ஆட்டுவித்தால்   யாரொருவர்  ஆடாதாரே  கண்ணா?'' அதனால் தான்  ஆனந்தமாக  பாடுகிறோம்.

பாடல் : 2

மானாட, மழுவாட, மதியாட, புனலாட, மங்கை சிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட, மறை தந்த பிரம்மனாட,
கோனாட வானுலகக் கூட்டமெல்லாமாட, குஞ்சர முகத்தனாட,
குண்டலம் இரண்டாட, தண்டைபுலி உடையாட, குழந்தை முருகேசனாட,
ஞான சம்பந்தரோடு ‏ இந்திரர் பதினெட்டு முனி அட்ட பாலகருமாட,
நரைதும்பை அறுகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட,
வினையோட உனை பாட, எனை நாடி இ‏துவேளை, விருதோடு ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீ‎ன்ற தில்லைவாழ் நடராஜனே.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...