வாழ்க்கை எனும் ஓடம் J K SIVAN
நான் புதிதாக ஒன்றுமே சொல்வ தில்லை. சொல்ல தெரியாது. உங்களுக்கு தெரிந்ததை ஞாபகப் படுத்துபவன் நான்.
நாம் கடவுளை வணங்குபவர்கள். அவனை அனுதினமும் அவனை நினைத்த்து பிரார்த்திக்க வேண்டும். இது ரொம்ப அவசியம். எது போல் என்றால் உடம்புக்கு உணவு போல், ஆத்மாவுக்கு பிரார்த்தனை.
கண்மூடி கண் திறப்பதற்குள் நமது வாழ்க்கை முடிந்து விடக்கூடியது. உலகத்தில் காலத்தின் வேக சுழற்சியில் நமது வாழ்க்கை பயணம் சீக்கிரமே முடியக்கூடியது. அதற்குள், இருக்கும் குறைந்த நேரத்தில் நல்லதையே நினைப்போம். நல்லதையே அன்போடு பேசுவோம். முடிந்தவரை நமது வாழ்க்கையை சிறப்பாக வாழ்வோம். ஆஹா, நாம் எல்லோரும் இப்படி நினைத்து இப்படி வாழ்ந்தால் இந்த உலகம் அப்போது எவ்வளவு பளிச்சென்று அழகாக இருக்கும் தெரியுமா? இப்படி வாழ வகை இருக்கும்போது எதற்கு ''கனியிருக்க காய் கவர்ந்தற்று'' சமாச்சாரங்கள்?
பணத்தை லட்சியமே பண்ண வேண்டும். காலுக்கு செருப்பு எவ்வளவு உதவியோ அதுபோல் வாழ கொஞ்சம் பணம் தேவை. அதிகம் வேண்டவே வேண்டா. பணம் கையைவிட்டு போய்விட்டதா? ரொம்ப சரி. சனி தொலைந்தது. என்று எடுத்துக் கொள்வோம். பணம் போனதினால் எதுவுமே நஷ்டமில்லை. மனப்பிராந்தி தான் இல்லாத ஏதோ ஒரு நஷ்டத்தை இருப்பது போல் காட்டும். ''செல்வம்'' என்று அதற்கு பெயர் அது நம்மை விட்டு செல்ல வேண்டும் என்பதற்கு தான்.
அதேசமயம் அதை தேடி அலைந்து, உருகி உடம்பை கெடுத்துக் கொண்டால் அது கோடி நஷ்டம்.
இந்த ரெண்டையும் விட நமது குணம் கெட்டுவிட்டால் அவ்வளவு தான். வேறே வினையே வேண்டாம். எல்லாமே தொலைந்து விடும்.
வாழ்க்கை நம்மை நடத்திச் செல்வதை விட நாம் வாழ்க்கையை அது எப்படி நடக்கவேண்டுமோ அப்படி நடத்திச் செல்லவேண்டும். நாம் தான் எஜமானன். அது அல்ல. இதை கோட்டை விட்டுவிட்டால் எடுப்பார் கை பிள்ளை ஆகிவிடுவோம். கண்ட்ரோல் நம்மிடம் இருக்கவேண்டும்.
இவ்வளவு வருஷம் வாழ்ந்திருக் கிறோமே. அதை திரும்பி பார்க்க வேண்டும் எப்படி. நன்றியோடு. அடடா எவ்வளவு சந்தோஷங்கள் சங்கடங்கள். எல்லாவற்றையும் ஒருவழியாக கடந்து வந்திருக்கிறோம். கிருஷ்ணா உனக்கு நன்றிடா. இனிவரும் காலம் நல்ல தாகவே அமையும் என்ற நம்பிக் கையோடு எதிர்காலத்தை சந்திப்போம்.
மனைவி மக்கள் பெற்றோர் மற்றோர் எல்லோரையும் அன்போடு அரவ ணைத்து வாழ்கிறோமே, அவர்கள் குற்றங்களையா பார்க்கிறோம்? அவர்களைக் கேட்டா ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செயகிறோம்? அவர்கள் தப்புகளில் சிக்கிக்கொண்டால் அந்த தப்புகளை தான் எதிர்க்கிறோம். அவர்களை அல்ல. தவறுகளை ஒப்புக்கொள்கிறோம். சால்ஜாப்பு சமாதானம் தப்புகளை சரி செய்யாது. என்றும் உதவி செய்யாது. சிக்கலை அதிகரிக்க செய்யும். தவறுகளை உணர்ந்தவனை உலகம் போற்றும். மீண்டும் செய்யாமல் பாதுகாக்கும்.
No comments:
Post a Comment