ஐந்தாம் வேதம். J K SIVAN
யக்ஷப்ரச்னம்.
7. அவசர கேள்வியும் அவசிய பதிலும்
யக்ஷன் யுதிஷ்டிரனை கேள்வி கேட்ட காலத்தில் ஐநூறு, ஆயிரம், ரெண்டாயிரம் ரூபாய் கஷ்டம் இல்லாமல் மக்கள் வாழ்ந்தார்கள் என்பதால் யக்ஷன் யுதிஷ்டிரனை கேள்வி கேட்டுக்கொண்டிருந்தபோது யுதிஷ்டிரன் அதைப் பற்றி கவலைப் படாமல் சரியான பதிலை அளித்துக்கொண்டிருக்கிறான். நாம் எப்போது வங்கிகள் திறக்குமோ, அதுவரை காத்திருந்து, இந்த கேள்வி பதிலையாவது சற்று கவனிப்போம்.
91. எந்த வியாதிக்கு நிவர்த்தியே இல்லை ?
பேராசைக்கு
92. எவன் புனிதன் ?
எவன் அனைத்துயிர்களிடம் அன்புடன் பழகி நன்மையே புரிகிறானோ அவனே உத்தமன்.
93. எவனை நாம் தூயவன் இல்லை என்போம்?
மனதில் அன்பு என்பதே தெரியாது, அறியாது வாழ்பவனை.
94. எது அறிவு பூர்வமற்ற செயலாகும் ?.
அதர்மம் அநீதியான சிந்திக்காத மனம்போனபடி செய்த செயல்.
95. பெருமை என்றால் என்ன?
ஒவ்வொருவனின் உள்ளேயும் தானே வளரும் சுய கர்வமும் எதிர்பார்ப்பும் தான் .
96. எதை சோம்பேறித்தனம் என்று சொல்லலாம்?
ஸ்வதர்மத்தையும் தனது அன்றாட கடமைகளையும் செய்யாததை.
97. எது உண்மையிலேயே துயரம்?
அறியாமை
98. எதை ரிஷிகளும், ஞானிகளும் சாஸ்வதம் என்பார்கள்?
விடாப்பிடியாக தனது கர்மானுஷ்டனங்களை செய்வதை, ச்வதர்மத்தின் படி ஒழுகுவதை.
99. எது தைர்யம் எனப்படும்?
ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வது.
100. எது உண்மையிலேயே நல்ல ஸ்நானம் ஆகும்?
மனசிலிருக்கும் அழுக்காறுகளை நீக்குவது.
(சபாஷ். மேக்ஸ்வெல் மாதிரி செஞ்சரி போட்டுவிட்டாயே, யுதிஷ்டிரா, சரியான விடைகளை என் நூறு கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிட்டாயே. இன்னும் கொஞ்சம் இருக்கிறது. பார்ப்போம் என்ன செயகிறாய் என்று ?' )
101. எதை ஒருவன் சிறந்த தர்மம் எனலாம்?
மற்றவரைக் காத்து ரக்ஷிப்பது
102. எவன் உண்மையிலேயே கற்றுணர்ந்தவன்?
தர்மத்தை அறிந்தவன், புரிந்தவன்.
103. எது நாத்திகம்?
தன்னையே அறியாது, நம்பாது, இயற்கையின் ரகசியத்தை புரிந்துகொள்ளாது. தன்னால் எல்லாம் தெரியும், முடியும் என கனவு காண்பது.
104 . எதை ஒருவனின் ஆர்வம் எனலாம்?
எதன் மூலம் ஒருவன் அடுத்தடுத்து பிறப்பு இறப்பு அடைய நேரிடுகிறதோ அதை.
105. எதை செய்வதை |ஒவ்வாத போட்டி மனப்பான்மை என்கிறோம்?
எதைச்செய்ய நினைத்தாலும், செய்தாலும், மனதை அடுத்தவர் செய்வதிலேயே செலுத்தி, மனதைப்
பாழ்படுத்திக்கொள்வதை.
106. எது டம்பம்?
அறியாமை.
No comments:
Post a Comment