மஹான்கள் J K SIVAN
லீலா சுகர்
8 கிருஷ்ண கர்ணாம்ருதம்
सार्धं समृद्धैरमृतायमानै
राध्यायमानैर्मुरलीनिनादैः ।
मूर्धाभिषिक्तं मधुराकृतीनां
बालं कदा नाम विलोकयिष्ये ॥ १.२३॥
sardham samriddhair amritayamanair
atayamanair murali-ninadaih
murdhabhishiktam madhurakritinam
balam kada nama vilokayishye
சார்த்தம் ஸம்ருதை ரம்ருதய மாநை-
ஆராத்மய மனைர்ர் முரளி நினதை
முர்தபிஷிக்தம் மதுர க்ருதீனம்-
பாலம் கதா நாம விலோக்யிஷ்யே–1–23-
ஒரு தடவையாவது அந்த பால கிருஷ்ணனை கண்ணால் தரிசிக்க வேண்டுமே! என்ன ஒரு அழகு அந்த பயலுக்கு. அதோடு அவன் தலையை அசைத்து, அசைக்கும்போது அந்த மயிற்பீலி நடனமாடும்போது, காது குண்டலங்கள் சேர்ந்து ஆடும்போது, அவன் அரைக்கண் மூடி ரசித்தவாறு, மூச்சை இழுத்து அந்த புல்லாங்குழலின் துளைகளில் தனது உயிர்மூச்சை செலுத்தும்போது அவனது புற அழகு அக அழகு இரண்டுமே இனிய தேன் இசையாக தென்றலாக வெளியே காதில் விழ எத்தனை பேர் புண்யம் பண்ணி இருந்தார்களோ. அத்தனை பேருக்கும் சாஷ்டாங்க நமஸ்காரம்.
शिशिरीकुरुते कदा नु नः
शिखिपिञ्छाभरणश्शिशुर्दृशोः ।
युगलं विगलन्मधुद्रव
स्मितमुद्रामृदुना मुखेन्दुना ॥ १.२४॥
shishiri-kurute kada nu nah
shikhi-piccha-bharanah shishur drishoh
yugalam vigalan-madhu-drava-
smita-mudra-mriduna mukhenduna
சிசிரீ குருதே கதா நுனா -
சிகி பிஞ்ச ஆபரண சிசுர் த்ருசோ-
யுகளம் விகளான் மது திரவ -
ஸ்மித முத்ர ம்ருதுநா முகேந்துநா —1–24
இப்படி ஒரு சிறுவனை எவருமே கண்டதில்லையே. கருநீலத்துக்கு இத்தனை எழிலா. சாதாரண மயில் இரவுக்கு இவ்வளவு அழகா? அது அவன் சிரத்தில் குடிகொண்டதாலா? எப்படி அதை அணிய அவனுக்கு தோன்றியது? அருள் வெள்ளம் என்பார்களே அது அவனிடமிருந்து தான் பிறந்ததோ? கடலாக பெருகி அனைவரையும் மகிழ்விக்கிறதே. கண்ணா உன்னை காண்பதெப்போ? இந்த ரெண்டு கண்கள் உன்னழகை காண எப்படி போதும் கண்ணா?
कारुण्यकर्बुरकटाक्षनिरीक्षणेन
तारुण्यसंवलितशैशववैभवेन ।
आपुष्णता भुवनमद्भुतविभ्रमेण
श्रीकृष्णचन्द्र शिशिरीकुरु लोचनं मे ॥ १.२५॥
karunya-karbura-kataksha-nirikshanena
tarunya-samvalita-shaishava-vaibhavena
apushnata bhuvanam adbhuta-vibhramena
shri-krishna-candra shishiri-kuru locanam me
காருண்ய கர்பூர கடாக்ஷ நிரீக்ஷணேன
தருண்ய சம்வலித சைஸவ வைபாவேந
அபுஷ்ணத புவனா மத்புத விப்ரமேன
ஸ்ரீ கிருஷ்ண சந்திரா சிசிரீ குரு லோசனம் மே -1–25-
கிருஷ்ணா நீ யாரென்று அறிவேன். இந்த பிரபஞ்சத்தை காக்கும் தெய்வம் ஸ்ரீ மந் நாராயணன் நீயே தான். கிருஷ்ணனாக வந்து எங்களோடு வாழ்ந்ததும் உன் காக்கும் தொழிலை தொடர்வதற்கு தான். உன்னுடைய சிறப்பே உன் கருணை, காருண்யம் தான் கண்ணா. கிருஷ்ணா நீ சந்திரன். உன் கடைக்கண் பார்வையாலே சகலமும் குளிர்விப்பவன். உன் கருணை பல வண்ணங்கள் கொண்டது. உன் சிரத்தில் அழகூட்டும் மயிவிறகு போல. வைத்த விழி மாறாமல் கண்டு மனம் களிக்க வைக்கும் மனமோஹனாங்
கன் அல்லவா நீ?அதற்கு மெருகூட்டும் பால்ய .உருவம் வேறு.! உன்னை நினைத்தாலே இனிக்கிறது கிருஷ்ணா.
कदा वा कालिन्दीकुवलयदलश्यामलतराः
कटाक्षा लक्ष्यन्ते किमपि करुणावीचिनिचिताः ।
कदा वा कन्दर्पप्रतिभटजटाचन्द्रशिशिराः
किमप्यन्तस्तोषं ददति मुरलीकेलिनिनदाः ॥ १.२६॥
kada va kalindi-kuvalaya-dala-shyamalatharaa
kataksha lakshyante kim api karuna-vici-nicitah
kada va kandarpa-pratibhata-jata-candra-shishirah
kimapyantas tosham dadhati murali-keli-ninadah
கதா வா காளிந்தீ குவளய தள ஷ்யாமள தர
கடாக்ஷ லக்ஷ்யந்தே கிம் அபி கருணா வீசி நிச்சித
கதா வா கந்தர்ப்ப ப்ரதி பட ஜட சந்திர ஷிஷிரா
கமப்யந்த ஸ்தோஷம் ததாதி முரளீ கேளி நிநாத-1–26-
இந்த யமுனை இருக்கிறதே ரொம்ப பொல்லாத நதி. கண்ணனைப் போலவே கருப்பாக ஒரு நீர் புஷ்பம் அதில் உற்பத்தியாகிறது.பார்க்க அழகாக இருக்கும் கரும் புஷ்பம். கரு நெய்தல் என்பார்கள். படர்ந்திருக்கும். அதை பார்க்கும்போதெல்லாம் கிருஷ்ணனின் கரு விழிகள் வரும். இன்னும் கருப்பு அவன் கண்கள். அதை சுழற்றி அவன் கடைக்கண் பார்வை எங்கு படிந்தாலும் அங்கே கருணை வெள்ளம் திக்கு முக்காட செய்யும். கண்ணா எனக்கு என்று அது கிடைக்கும்? ஒரு வேடிக்கை பார்த்தாயா.மன்மதனை நெற்றிக்கண் தீயினால் எரித்து சாம்பலாக்கின சிவன் தலையில் குளுமையான .பிறை சந்திரன்! அதைக் காணும்போது உன் காருண்ய குளிர்ந்த கடைக்கண் பார்வை என் மனதை ஆக்கிரமிக்கிறது. என்றும் என்மனதில் நிரந்தரமாக உன் கடைக்கண் பார்வையின் குளுமை நிலைக்குமா?
No comments:
Post a Comment