Wednesday, February 6, 2019

PARASURAMAN



பரசுராமன்    J.K. SIVAN 

             1   பாரதத்தில் ஒரு துளி 


ஹிந்துக்கள்  அறிந்த மூன்று விஷ்ணு அவதாரமாகிய ராமர்கள்.  எல்லோரும் அறிந்த  தசரதன்  பிள்ளையாக ஸ்ரீ விஷ்ணு அவதரித்த  ஸ்ரீ  ராமர் ஒன்று. அடுத்தது  கிருஷ்ணன் சகோதரராக  பலராமர் என்ற அவதாரம். இதுவும் அநேகர் அறிந்தது.  மூன்றாவது விஷ்ணு எடுத்த ஆறாவது அவதாரம்.  பரசுராமர், நிறைய பேருக்கு பரசுராமனை முழுமையாக தெரியாது.

ரிஷி  ஜமதக்னிக்கும் ரேணுகாவுக்கும் மகன் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று நிரூபித்தவர்.  சிரஞ்சீவிகளில் ஒருவர். மகேந்திர மலையில் என்றும் தவம் செய்து கொண்டிருப்பவர். 

புராணம் என்ன சொல்கிறது? பிரம்மதேவனின்  பிள்ளை  அத்திரி மகரிஷி. . அவர் மகன் சந்திரன். சந்திரன்  27 நட்சத்திரங்களின் தலைவன்.  சூரியன் சந்திரன் இருவரின் வம்சத்தில் அநேக ராஜாக்கள் பிறந்திருக்கிறார்கள்.  நாம் பிறந்ததும் ஒரு நக்ஷத்திரத்தில் தான். 
மகா பாரதத்தில் ஒரு கதை வரும். 

சந்திரகுல ராஜா  காதி என்பவனுக்கு  சத்தியவதி என்று  ஒரு பெண்.  அவளை  எனக்கு மணம் செய்து கொடு என்று  ரிஷி பிருகுவின் மகன் ரிசிகன் கேட்கிறான்.  காதிக்கு இதில் இஷ்டம் இல்லை.  ஆகவே ஒரு நிபந்தனை விதித்தான்.   ''என் மகள் உனக்கு வேண்டுமானால்  நீ போய்  நல்லதாக  ஆயிரம் குதிரைகள் சம்பாதித்துக் கொண்டு வா.  ஒரு விஷயம். அந்த உயர்ந்த ஜாதி குதிரைகளுக்கு  ஒரு காது பச்சை நிறத்தில் இருக்கும்.  உடம்பு  பூரா வெள்ளை நிறம்.  அவை இங்கே உன்னோடு வந்தால்  என் மகள் சத்யவதி உன் மனைவி.''  என்றான் காதி. இந்த கண்டிஷன் ரிசிகனை காணாமல் போக  செய்துவிடும் என்று நினைத்தான்.   ரிசிகன்  வருணனை நோக்கி ஜபம் செய்து  ஆயிரம் குதிரைகள் பெற்றுவிட்டதால்  காதி  அதிசயித்தான்.  இவன் சாதாரண ரிஷி குமரன் அல்ல என்று புரிந்து கொண்டு  சத்யவதி ரிசிகன் மனைவி ஆகிறாள். 

வம்சம் வளர ஒரு புத்ரன் வேண்டும் என்று சத்யவதி வேண்டுகிறாள். சத்யவதியின் தந்தை காதிக்கும் புத்ர பாக்யம் இல்லையே. எனவே அவள் தாய்க்கும் ராஜ்யத்தை ஆள மஹா வீரனாக ஒரு  புத்ரன் வேண்டும் என்றும்  ரிசிகனை  கேட்கிறாள்.  ஒரு  பெரிய  யாகத்தை ரிசிகன் வளர்க்கிறான். அந்த யாகத்தில் தேவர்கள் அளித்த பிரசாதமாக இரு கவளம் அன்னம் பெறுகிறான்.  ஒரு கவளம் உத்தம ஞானியாக  ஒரு குழந்தையை அளிக்கும்.  மற்றது அதி  தீர சூர வீரனாக ஒரு பிள்ளையை அளிக்கும் படியான சக்தியை கொண்டது.

ரிசிகன்  சத்யவதிக்கு முதல் கவளத்தை தந்து ''இதை சாப்பிடு என்கிறான்'. மற்றதை அவள் தாய்க்கு கொடுத்து   ஒன்றை தன் மாமியாரிடம் கொடுக்கும்படி சொன்னான். 

ரிசிகனுக்கும் சத்யவதிக்கும்  ரிஷி ஜமதக்னி பிறக்கிறார். ரேணுகாவை மணக்கிறார். பிள்ளைகள் பிறக்கிறார்கள். அவர்களில்  இளையவன்  ராமன்.  சிவபெருமானை நோக்கி தவம் இருந்து  பரசு என்கிற கோடாலியை ஆயுதமாக பெற்றதால் பரசு ராமன் என்ற பெயர் நிலைத்து விட்டது.அப்பா அம்மாவிடம் அளவற்ற பக்தி கொண்ட மகன்.

பரசுராமன் தாய் ரேணுகா தினமும் ஆற்றில் மூழ்கி சுத்தமான மண்குடத்தில் நீர் கொண்டு வந்து  கணவர் ரிஷி ஜமதக்னியின்  பூஜைகளுக்கு தருவாள்.  

ஒரு நாள்  என்ன நடந்தது என்று அறியுமுன் நான் உங்களுக்கு  இன்னொருவனை  அறிமுகப்படுத்த வேண்டி இருக்கிறதே. அவன் தான் கார்த்தவீர்யார்ஜுனன்.......

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...