Friday, February 22, 2019

DHYAN CHAND - HOCKY LEGEND



த்யான் சந்த் J.K. SIVAN
உலகப்புகழ் பெற்ற ஹாக்கி வீரர்.

உலகம் நல்லவனை மட்டும் அல்ல, ரொம்ப கெட்டவனையும் மறப்பதில்லை. ஹிட்லர் பல லக்ஷம் நிரபராதியான உயிர்களை ஈவு இரக்கமின்றி கொன்ற கொலையாளி. அவன் ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருக்கும்போது உலக ஹாக்கி இறுதிப் போட்டி பெர்லின் மைதானத்தில் ஜெர்மனிக்கும் இந்தியாவுக்கும், அவன் முன்பு நடந்தது.அதில் இந்தியா ஜெர்மனியை வென்றது. இதை தாங்குவானா ஹிட்லர். கண்களில் தீப்பொறி பறக்க, பாதி ஆட்டத்தில் எழுந்து போனான்.

''ஏன் நமது வீரர்களால் வெல்ல முடியவில்லை?'' கோபத்தோடு சம்பந்தப்பட்ட விளையாட்டு நிர்வாகிகளை சாடினான் ஹிட்லர். என்ன காரணம் சொல்லுங்கள் என் எதிரே இந்த மௌனம் இன்னும் என்னை அதிகம் கோபம் கொள்ளச்செய்யும்''

''இந்தியாவின் விளையாட்டு வீரர்களில் ஒருவன் மட்டுமே நமது தோல்விக்கு காரணம்''

''யார் அவன்.என்ன செய்தான் ?''

''அவன் கையில் ஹாக்கி கம்பு ஒரு மந்திரக்கோல். அவனிடம் பந்து அகப்பட்டால், எத்தனை பேர் எதிர்த்தாலும் அத்தனை போரையும் தாண்டி பந்தை லாகவமாக கொண்டு சென்று கோல் போட்டு விட்டுவிடும் சாமர்த்திய சாலி.''

''ஓ அப்படியா. அவனை என் முன்னே கொண்டு வாருங்கள்''

''இந்திய ஹாக்கி வீரர் த்யான் சந்த் விஷயம் கேட்டு நடுங்கினார். வியர்த்தது. ஹிட்லர் பற்றி நன்றாக தெரியும். என்ன நடக்குமோ'' மார்பு படபடக்க ஹிட்லர் முன்னே நின்றார் த்யான சந்த். கொடும்புலியின் மஞ்சள் கண்கள் அவரது கருப்பு விழிகளை சந்தித்தன. ஜெர்மன் பாஷையில் கேள்வி கேட்டான் ஹிட்லர். ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் ஒருவர்.

''ம்ம் உன் பெயர் என்ன?

''த்யான் சந்த்''

''ஹாக்கி விளையாட்டு நிபுணன் என்று அறிந்தேன்.ஹாக்கி விளையாடாதபோது என்ன செய்கிறாய்? ஹிட்லரின் கண்கள் த்யான் சந்த் அணிந்திருந்த ஏழ்மையான, மாட்டராக கான்வாஸ் காலணிகளை நோக்கின.

''நான் இந்திய ராணுவத்தில் பணி புரிகிறேன்.''

''என்ன அந்தஸ்து, அந்த ராணுவ உத்யோகத்தில், என்னவாக இருக்கிறாய் அதில்?''

''லான்ஸ் நாயக்'' உத்யோகம். Lance Nayak என்பது அடிப்படை ராணுவ வீரனின் சாதாரண உத்யோகம்.

''ஜெர்மனிக்கு வருகிறாயா.உன்னை படைத்த தலைவனாக நியமிக்கிறேன். Field Marshal ஆக்குகிறேன்'' என்றான் ஹிட்லர்.

த்யான் சந்துக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. தலை சுற்றியது. ஆனாலும் தைர்யம் இருந்தது. மனதில் தெளிவாக இருந்தார்.

''இந்தியா எனது தாயகம். நான் அங்கே நன்றாக இருக்கிறேன்''

''சரி... அது உன் விருப்பம் .. ம்ம் '' ஹிட்லர் மனமுடைந்தான்.

இப்போதுள்ள எந்த விளையாட்டு வீரனாவது ஹிட்லர் முன்னே தேசப்பற்றோடு இப்படி பதில் சொல்லி இருப்பானா? அப்படிப்பட்ட தேசபக்தி கொண்ட தியாகி த்யான் சந்தை எத்தனை பேருக்கு தெரியும்....? த்யான் சந்த் என்ற அபூர்வ மனிதர் பற்றிய சிறு குறிப்பு:

ஹாக்கி விளையாட்டின் முடிசூடா மன்னன் த்யான் சந்த் இந்திய தங்க மெடல்கள் மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகளில் வெல்ல காரணமானவர். 1928 முதல் 1964 வரை எட்டு ஒலிம்பிக் போட்டிகளில் ஏழு முறை இந்தியா வென்றது அவரால் தான். 1936ல் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஜெர்மனியை 8–1 என்று வீழ்த்தியது. ஹிட்லர் அசந்து போனான். 185 போட்டிகளில் 570 கோல் போட்ட வீரர். நிபுணர். மந்திரவாதி என்றெல்லாம் புகழப்பட்டவர். பத்ம பூஷன் பதக்கம் பெற்றவர். பாரத ரத்னா விருதுக்கு அவர் பெயர் தகுதி பெற்று பரிசீலிக்கப்பட்டது. ஆனால் சச்சின் டெண்டுல்கர் பெயரும் அதில் அகில உலக இந்திய கிரிக்கெட் வீரர் என தகுதி பெற்றவராக அறிவிக்கப்பட த்யான் சந்த் இந்த போட்டியில் மட்டும் தோற்றார். சச்சின் வெற்றி பெற்றார்.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...