Tuesday, February 5, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்  J.K. SIVAN 
மகா பாரதம் 
                                                                   
     
      ராம ராவண யுத்தம் 

மார்க்கண்டேய ரிஷி  யுதிஷ்டிரனுக்கு  ராமாயணத்தை போதிக்கிறார்.  கும்பகரணனை  தூக்கத்திலிருந்து எழுப்புவது  பற்றி சிறு வயதில் நிறைய படித்து வியந்திருக்கிறேன்.   ஒவ்வொரு தமிழ் வாத்தியாரும் வெவேறு  புதிய புதிய  கற்பனை பிரயோகங்களை  உபயோகித்து அவனை எழுப்புவது பற்றி சொன்னார்கள்.  தூக்கத்தை விட்டு  கும்பகர்ணனை துயில் எழுப்புவதே ஒரு பெரிய யுத்தம் என்று சொல்லும் அளவிற்கு பாடுபட வேண்டுமே.   (இன்று  தான் கும்ப கர்ணன் தூக்கத்தை, அவனை எழுப்புவதை கம்பர் எப்படி வர்ணிக்கிறார் கம்ப ராமாயணத்தில் ஏறி தனியாக ஒரு கட்டுரை எழுதினேன்!!)

ஒருவழியாக துயிலெழுப்பி ராமன் வருகை, லங்காவில் கொந்தளிப்பு, அவன் போரிட வேண்டிய அவசியம் எல்லாம் எடுத்து சொல்லப்பட்டது. சீதையை அபகரித்து வந்தது, அவளை மீட்க ராமன் வானர சைன்யத்தோடு வந்தது  எதுவுமே அவனுக்கு தெரியாதே.  

மார்கண்டேய ரிஷி  பிறகு  எப்படி கும்பகர்ணனை வானர  சைன்யம் சூழ்ந்தது. அவன் எப்படி அநேக வானரர்களை கொன்றான். லக்ஷ்மணன் அவனை கொல்கிறான் .

அநேக ராக்ஷசர்களும்  மாள்கிறார்கள். கும்பகர்ணனின் மறைவுக்கு பிறகு  இந்திரஜித்  போரிடுகிறான். நேரடியாக  போரிட்டு வெல்லமுடியாது என்று உணர்ந்த இந்த்ரஜித் மாயாவியாக  தாக்கி, பலத்த சேதம் விளைவிக்கிறான். இந்திரனையே ஜெயித்து  இந்திரஜித் என்ற பெயர் வாங்கிய மேகத்தில் மறையக்கூடிய  மேகநாதன் வானரங்களை துன்புறுத்தினான். ஒரு நேரத்தில் ராம லக்ஷ்மணர்களையே மயங்கி மூச்சு பேச்சின்றி சலனமின்றி செய்ய விபீஷணன் இந்த்ரஜித்தை அறிவான் ஆகையால்  குபேரனிடம் பெற்ற மந்திர ஜலத்தை ராம லக்ஷ்மணர்களுக்கு  அளித்து மாயமாக  மறையும்  இந்த்ரஜித் கண்களில் தெரிகிறான்.

இதை அறியாத இந்த்ரஜித் ராவணனிடம் சென்று தனது வீர சாகசத்தை சொல்லி மீண்டும் யுத்த களம் திரும்புகையில்  லக்ஷ்மணன் கண்ணுக்கு தென் படுகிறான். பலத்த யுத்தம் நிகழ்ந்து முடிவில்  இந்த்ரஜித்தை கண்ட துண்டமாக்கி கொல்கிறான் லக்ஷ்மணன்.  ராவணன் தனது வீராதி வீர மகன் மரணம் அறிந்து அவன் கோபம் சீதை மேல் பாய்கிறது. சீதையைக் கொல்ல  முயன்றபோது அவிந்த்யா அவனை தடுத்து இவள் ஏற்கனவே செத்தவள் தானே, எப்போது உன்னுடைய அடிமையாகி சிறைபட்டாளோ அவள்  உடல் தான் இங்கிருக்கிறது உயிரும் உள்ளமும் ராமனிடம் இருக்கிறது,  ''நீ  வீரன்,  ஒரு  பெண்ணை கொல்வதை விட அவள் கணவன்  ராமனைக் கொல். அவனைக் கொன்றால் அவளைக் கொன்றது ஆகும்'' என தடுக்கிறான்.

''எனது தேர் தயாராகட்டும். நானே   போருக்கு செல்கிறேன்''  என கர்ஜித்தான் ராவணன்.

மார்க்கண்டேய ரிஷி யுதிஷ்டிரனுக்கு பத்து தலை ராவணன் கோபத்தோடு, தனது வீர மகனைக்கொன்ற  ராம லக்ஷ்மணர்கள் மீது ஆத்திரத்தோடு ராக்ஷசர்கள்  புடை சூழ  படையோடு கிளம்பினான்.  வானரப்படைகள் தனது ராக்ஷசர்களைக் கொல்வது  கண்டு  தனது உடலிலிருந்தே அநேக  ராக்ஷசர்களை ஆயுதங்களோடு  உருவாக்கி  எதிர்த்தான். ராமன்  அந்த ராக்ஷசர்களை எல்லாம் வதம்  செய்தான்.

சில மாய  ராக்ஷசர்கள்  ராமன்  உருவிலேயே  இருந்ததால் அவர்களை கொல்வது கடினமாயிற்று. இந்திரன் தனது தேரையும் தேர்ப்பாகன் மாதலியையும் அனுப்ப  ராமன் ராவணனின்  படையை எதிர்கொண்டான்.  அஸ்திரமழை பொழிந்தது.   ராக்ஷசபடை சுருங்கியது. ராவணன் தேர், படை, எல்லாமே  நிர்மூலமாகி கடைசியில் ராவணனும் கொல்லப்பட்டான். விபீஷணன்  இலங்கேசன் ஆனான். சீதையை  அசோகவனத்தில் கண்டான். 

''உன்னை காப்பாற்றி மீட்க வேண்டிய கடமை முடிந்துவிட்டது. இனி நீ எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக செல்லலாம். பிறனால் கவரப்பட்ட  உன்னை  ஏற்பது சரியல்ல.''  ராமனின்  சொல் அனைவரையும் சிலையாக்கியது.
'ஒ ராமா,  பஞ்ச பூதங்கள் சாட்சியாக நான் நிரபராதி. பரிசுத்தமானவள். உன்னைத்தவிர  வேறு எந்த நினைவும் இல்லாதவள்'' என்கிறாள் சீதை.

வாயு  அக்னி வருண  பிரம்மாதி தேவர்கள் அனைவரும்  ''ஆம்.    ஸ்ரீ  ராமா.   சீதை நிஷ்களங்கமானவள் . ராவணனை ஒரு சமயம்  குபேரனின் புத்திரர்கள்  நள குவேரர்கள்     ' நீ,  விருப்பமில்லாத பெண்ணை நெருங்கினால் உன் தலை  நூறு சுக்கலாக வெடித்து மடிவாய்'''    என சபித்ததால்,   சீதைக்கு   ராவணனால் எந்த  ஆபத்தும் இல்லை. ஏற்றுக்கொள்'' என்று சாட்சி சொன்னார்கள். ராமனின் தந்தை தசரதனும் தேரில் வந்து வாழ்த்தி   '' ராமா, நீ  சீதையை ஏற்று அயோத்தி மன்னனாக ஆட்சி பொறுப்பும் ஏற்றுக் கொள்''  என்று ஆணையிட்டார்'.

மார்க்கண்டேய ரிஷி இவ்வாறு ராமாயணத்தை  யுதிஷ்டிரனுக்கு உபதேசிக்கிறார்.
   

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...