அவசர கேள்வியும் அவசிய பதிலும்
யக்ஷப்ரச்னம் J K SIVAN
ப்ருந்தாரண்ய கிருஷ்ணன்
5.3. 2017 அன்று விடியற்காலை எங்கள் ஊர் நங்கநல்லூரில் இருந்து ரெண்டு பஸ்கள் புறப்
பட்டது. சென்னையை அடுத்த திருமால் பூர் போகும் வழியில் பள்ளூர் என்று ஒரு அமைதியான கிராமம். அதில் நுழைந்தால் இன்னும் சிறிய ஒரு கிராமத்திற்கு கொண்டு செல்லும். அதற்கு எதற்காக போகவேண்டும்.? பிருந்தாரண்யம் என்று ஒரு சிறு துளசி செடிகள் வனமாக மலிந்த சூழலில் ஒரு குட்டி கிருஷ்ணன் கோவில் கொண்டு இருக்கிறானே. திரு நரசிம்மன் என்கிற சென்னை அண்ணாநகர் பக்தர் அமைத்திருக்கிறார். அந்த ப்ருந்தாரண்ய கிருஷ்ணனுக்கு அன்று வருஷாந்திர திருமஞ்சனம், அபிஷேகம், ஆரத்தி செய்ய ரெண்டு பஸ் நிறைய ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா குழு நண்பர்கள், ISKCON பக்தர்கள், எல்லோருமாக நிறைய துளசி, புஷ்பங்கள், பூஜை அர்ச்சனை, அபிஷேகத்துக்கு தேவையான சாமான்கள் எடுத்துக்கொண்டு சென்றோம். நரசிம்மன் ஒரு கோபூஜைக்கு ஏற்பாடு செயதிருந்தார். மதுராந்தகம் ஸ்ரீ ரகுவீர பட்டாச்சார்யாரை அழைத்து விசேஷ பேச்சாளராக கிருஷ்ணன் பற்றி பேச வைத்தோம். போதாதற்கு ஸ்ரீ ராதாகிருஷ்ணன் எனும் 400 பசுக்களை வைத்து கோவிந்தன் கோசாலை நடத்தும் அன்பரும் மதுராந்தகரம் அருகே இருக்கும் எண்டத்தூர் எனும் ஊரிலிருந்து வந்திருந்தார். அனைவருக்கும் காலை உணவு. தொடர்ந்து ISKCON பஜனை. கோபூஜை, பிருந்தாரண்ய க்ரிஷ்ணனுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்ய அருகில் இருக்கும் ராமர் கோவில் நிர்வாகிகள் பட்டாச்சார்யர்கள் வந்திருந்து ரகுவீரருக்கும் உதவினார்கள். தொடர்ந்து கோமஹிமை பற்றி ஸ்ரீ ராதா கிருஷ்ணன்,
கிருஷ்ணன் மஹிமை பற்றி ரகுவீர பட்டாச்சாரியார் ஆகியோர் பேசினார்கள். ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் செய்யும் சேவைகள் பற்றி நானும் பேசினேன். மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது. பிறகு அருகில் இருந்த கிராம பள்ளி சிறுவர் சிறுமிகளை எல்லாம் அழைத்து அனைவருக்கும் ஒரு சிறிய வினாவிடை நிகழ்ச்சி நடத்தினோம். அவர்கள் அத்தனைபேருக்கும் எழுதும் கருவிகள், பென்சில், பேனா, நோட்டுப்புத்தகங்கள் நரசிம்மன் வழங்கினார். அன்று மாலை தான் ரகுவீர பட்டாச்சார்யார் கைகளால் நான் எழுதிய ''அவசர கேள்வியும், அவசிய பதிலும் '' என்ற யக்ஷ ப்ரச்னம் நூல் வெளியிடப்பட்டு அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.
அது தான் இனி கேள்வி பதிலாக தொடர்கிறது. அதையே ஆங்கிலத்திலும் பின்னர் ETERNAL QUESTIONS AND EVERLASTING ANSWERS என்ற பெயரில் எழுதி வெளியிட்டேன். அது பற்றி பின்னால் சொல்கிறேன்.
No comments:
Post a Comment