ஐந்தாம் வேதம் J K SIVAN
யக்ஷ ப்ரச்னம் - மஹாபாரதம்
2 அவசர கேள்வியும் அவசிய பதிலும்.
யக்ஷ ப்ரச்னம் - மஹாபாரதம்
2 அவசர கேள்வியும் அவசிய பதிலும்.
அவசர கேள்வியும் அவசிய பதிலும்'' என்ற தலைப்பில் மஹா யக்ஷ ப்ரச்னம் தொடர்கிறது.
16. க்ஷத்திரியனுக்கு எது பாபம்?
தன்னை நம்பி வந்தவனுக்கு பாதுகாப்பு அளிக்க தவறும்போது.
தன்னை நம்பி வந்தவனுக்கு பாதுகாப்பு அளிக்க தவறும்போது.
17. அக்னி ஹோமங்களுக்கு எது சாம வேதம்?
ஆன்மா ஒன்றே.
ஆன்மா ஒன்றே.
18 யாக யஞத்தில் முக்யமான ரிக் எது தெரியுமா?
மனசு ஒன்று தான் அதி முக்ய ரிக்
மனசு ஒன்று தான் அதி முக்ய ரிக்
19 எதால் அக்னி யாக ஹோமம் நடைபெறும்?
ரிக் வேத மந்த்ரம் போதும்
ரிக் வேத மந்த்ரம் போதும்
20. அக்னி, யாகம் இவை எதில் கட்டுப்படுகிறது?
ரிக் வேத மந்திர பலத்தில்
ரிக் வேத மந்திர பலத்தில்
21.(தர்மா நீ சளைத்தவனே அல்ல. உன்னை இப்போது வேறு வித கேள்விகள் கேட்கிறேன்.) உழவனுக்கு, விவசாயிக்கு எது முக்கியம்?
மழை
மழை
22. விதை நடுவதற்கு எது அவசியம்?
நல்ல, நம்பகமான விதை ஒன்று தான்.
நல்ல, நம்பகமான விதை ஒன்று தான்.
23. நிரந்தர வாழ்வுக்கு எது செல்வம்?
ஈடற்ற செல்வம் பசுக்களை வளர்த்து பரமாரிப்பதுவே.
ஈடற்ற செல்வம் பசுக்களை வளர்த்து பரமாரிப்பதுவே.
24. பெற்றவருக்கு எது சிலாக்யமாக கருதப்படுகிறது?
பிறந்தது பிள்ளையானால் பெற்றவனைக் கையில் பிடிக்க முடியாதே.
பிறந்தது பிள்ளையானால் பெற்றவனைக் கையில் பிடிக்க முடியாதே.
25 ( யுதிஷ்டிரா அற்புதமாக பதில் சொல்கிறாய். இதற்கு பதில் சொல் பார்க்கலாம். )
எந்த பலசாலி, பணக்காரன், கெட்டிக்காரன் மூச்சிருந்தும் இல்லாதவன்?
எந்த பலசாலி, பணக்காரன், கெட்டிக்காரன் மூச்சிருந்தும் இல்லாதவன்?
இறைவன் இவ்வளவு கொடுத்தும், எவன் இறைவனையோ, முன்னோரையோ, தனக்கு வரும் விருந்தின
ரையோ, உதவும் பணியாளர்களையோ, தன்னையோ மதிக்காது, நினைக்காது, கவனிக்காது திரிகிறானோ அவன் மூச்சிருந்தும் பிணமே .
ரையோ, உதவும் பணியாளர்களையோ, தன்னையோ மதிக்காது, நினைக்காது, கவனிக்காது திரிகிறானோ அவன் மூச்சிருந்தும் பிணமே .
26 பூமியை விட பொறுமையான, வலிவான ஒன்று சொல் ?
தாய் தான். வேறு யார்?
தாய் தான். வேறு யார்?
27. ஆகாசத்தை விட உயர்ந்தது?
தந்தை.
தந்தை.
28. காற்றிலும் வேகமானது?
மனோ வேகம்.
மனோ வேகம்.
29. எங்கும் காண்கிறதே புல், அதனிலும் அதிகம் எது?
மனித மனதில் கவலைகள்.
மனித மனதில் கவலைகள்.
30. கண் மூடாமல் உறங்குவது?
மீன்.
யக்ஷனின் கேள்விகளும் ய;யுதிஷ்டிரன் பதில்களும் தொடரட்டும்.
மீன்.
யக்ஷனின் கேள்விகளும் ய;யுதிஷ்டிரன் பதில்களும் தொடரட்டும்.
No comments:
Post a Comment