சிவவாக்கியர்
குமாரசாமி பேயாக அலைந்து எங்கெல்லாம் அடாவடியில் சொத்து சேர்க்கமுடியுமோ அதற்கெல்லாம் நேரம் செலவழித்தே வாழ்க்கை ஓடியது. தெரிந்து தெரியாமல் திருமணங்கள் குடும்பங்கள். பிள்ளை குட்டிக்கெல்லாம் வசதி. வீடுகள் கார் வாங்கி குவித்தான். தோட்டம் துறவு பண்ணை வீடு ... அது சரி இன்று காலை சித்ரகுப்தன் சில ஓலைகளை தூசு தட்டி கையில் எடுத்தபோது முதல் ஓலை குமாரசாமி. ஆள் அனுப்பி விட்டான். சாம்பாரில் வடை தோய்த்து விழுங்கிய குமாரசாமிக்கு தொண்டை அடைத்தது. விழி பிதுங்கியது. மூச்சு திணறியது. வியர்த்தது. தவித்தான். தலை சாய்ந்தது. .... இப்போது அவனுக்கு என்ன மதிப்பு? ''எப்போ பாடி எடுக்கிறாங்க?'' சிலர் கேட்கிறார்களே. இதை தான் சிவவாக்கியர் அழகாக சொல்கிறார்:
''வீடெடுத்து வேள்வி செய்து மெய்யினோடுபொய்யுமாய்
மாடு மக்கள் பெண்டீர் சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள்நாடு பெற்ற நடுவர் கையில் ஓலை வந்து அழைத்திடில்
ஓடு பெற்ற அவ்விளை பெறாது காண் இவ்வுடலமே.
சிலருக்கு சாமியே கிடையாது. ஆசாமிகளுக்கு அவர்கள் ஆதரவும் மட்டுமே தாம் ஆள்வதற்கும் தமது சுக வாழ்க்கைக்கும் வேண்டும். சிலருக்கு தாம் வணங்கும் தெய்வம் ஒன்று தான் உண்டு. மற்றதெல்லாம் இல்லை. சிலருக்கு உங்கள் தெய்வம். எங்கள் தெய்வம் என்று பாகுபாடு வேறுபாடு. ஒன்று இரண்டாகுமா? வேறாகுமா? காற்றை சூரிய ஒளியை கூறு, பங்கு, போட முடியுமா? ஆதி பரமன் ஒருவனே என்று அறியாமல் பேசுவார்கள் வாய் புழுத்து மடிவார்கள் என்கிறார் சிவவாக்கியர். அருமையான .எளிமையான பாடல் இது.
''எங்கள்தேவர் உங்கள்தேவர் என்றிரண்டு தேவரோ
இங்குமங்கு மாய் இரண்டு தேவரே இருப்பரோ
அங்குமிங்கு மாகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ
வங்கவாரஞ் சொன்னபேர்கள் வாய்புழுத்து மாள்வரே.''
இங்குமங்கு மாய் இரண்டு தேவரே இருப்பரோ
அங்குமிங்கு மாகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ
வங்கவாரஞ் சொன்னபேர்கள் வாய்புழுத்து மாள்வரே.''
No comments:
Post a Comment