ஜீஜாபாய் தனக்கு ஒரு புத்ரன் வேண்டும் என்று சக்தி தேவி சிவை யை வேண்டி பெற்ற அருந்தவ புதவனுக்கு அந்த தெய்வத்தின் பெயரையே சிவாஜி என்று வைத்தாள். பலமிகுந்த முகலாய சாம்ராஜ்யத்தை வென்று வீழ்த்தி ஹிந்து மராத்திய சாம்ராஜ்யத்தை உருவாக்க முயன்றவர். பெண்களுக்கு மரியாதை, மதிப்பு பாதுகாப்பு அளிக்க பாடு பட்டவர்.
தனது அப்பா ஷாஜி காலத்தில் இருந்த 2000 போர்வீரர்களை ஐந்து மடங்கு அதிகமாக 10000 வீரர்களாக வளர்த்த போர்வீரன்.
தெற்கே வேலூரிலும் செஞ்சியிலும் கூட அடில்ஷா கோட்டைகளை தகர்த்தவர் சிவாஜி. 52 வயதிலேயே மறைந்ததால் ஒரு சிறந்த தலைவனை ஹிந்து தேசம் இழந்தது. துக்காராம் மகாராஜ், சமர்த்த ராமதாஸ் சிஷ்யராக பக்தியில் திளைத்தவர். சென்னை காளிகாம்பாள் கோவிலில் சிவாஜி மகாராஜாவின் வீரவாள் வைத்திருக்கிறார்கள். எத்தனை பேர் பார்த்திருக்கிறீர்கள்?
No comments:
Post a Comment