சோதனை மேல் சோதனை போதுமடா சாமி J.K. SIVAN
சோதனை என்றால் என்ன?
ஒரு பரிக்ஷை.
பள்ளிக்கூடத்தில் மட்டும் பாடத்தில் எவ்வளவு தூரம் கற்று இருக்கிறோம், அடுத்த மேல் வகுப்புக்கு போக தகுதியா? என்ற சோதனை மட்டும் தான் அங்கே. வருஷத்தில் ஒரு தடவை மட்டும் தான்.
வாழ்க்கையில் அப்படியல்ல. எப்போது பரிக்ஷை, எந்த மாதிரி, இதெல்லாம் முன்கூட்டி தெரியாது. திடீர் தோசை திடீர் சாம்பார் மாதிரி. அதில் தேற நாம் நம்மை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பள்ளிக்கூடத்தில் பரிக்ஷை எப்போது என்ன கேட்பார்கள் என்று தெரியும், அதை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக்கூட வாத்தியார்கள், பள்ளிக்கூடத்திலும், வெளியே காசுக்கும் (ட்யூஷன் பீஸ்) கிடைப்பார்கள். வாழ்க்கையில் நாமே சில நேரம் வாத்தியாரும் கூட. பழைய தவறுகளை செய்யக்கூடாது. மற்றவர் பெற்றவர் மூலம் படித்த, கேட்ட, கிடைத்த பாடம் உதவும். அதுவும் போதாது. பெரிய பெரிய வாத்யார் கிருஷ்ணன், கீதாச்சார்யன் சொன்னதெல்லாம் மனதில் இருத்திக் கொண்டு வாழ்க்கை நடத்தினால் சோதனைகளை கடக்க முடியும். வாழ்க்கை பரிக்ஷையில் எல்லோருக்கும் ஒரே syllabus இல்லை. மாறி மாறி வரும். ஒரே மனிதனுக்கே புதிது புதிதாக இருக்கும். எதிர்கொள்ளவேண்டும்.
இதெல்லாம் எதற்காக?. நம்மை சீராக்க! தங்கத்தை நெருப்பில் வாட்டி அடித்து நீட்டி உருட்டி, மடித்து வளைத்து நசுக்கினால் தானே ''எப்படி வாங்கினே இந்த புது நெக்லஸ்?''-- நண்பிகள் கேட்கும்போது எவ்வளவு சந்தோஷம்.
வாழ்க்கை பரிக்ஷையில் சோதனைகளில் முக்கியமானவை வியாதி, துக்கம், முதுமை, நரை திரை, வறுமை,
''கஷ்டங்களை மேலே மேலே எனக்கு கொடுத்துக்கொண்டு இரு கிருஷ்ணா நான் அப்போது தான் உன்னை எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்க முடியும். நீ என்னருகில் இருப்பதை உணரமுடியும்'' என்றாள் குந்தி. நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் பாடம் இது.
உடல் பாதையில் ஐந்து நாள் படுத்திருந்தேன். எழுத முடியாவிட்டால் என்ன? எண்ணங்கள் மனதில் கோயில் கட்டி கண்ணனை உட்கார்த்தி வைத்து கும்பாபிஷேகமே பண்ணி விட்டது. ஆறுநாட்களாக வேளச்சேரி குரு நானக் காலேஜில் ஹிந்து சனாதன தர்ம கண்காட்சியில் பங்கு கொண்டு முடிந்தவரை அங்கே சில மணி நேரங்கள் அமர்ந்து எத்தனையோ நண்பர்களை சந்திக்கவும் முடிந்தது. நேற்று இரவோடு அந்த அற்புத சந்தர்ப்பம் இந்த வருஷம் முடிந்து வீட்டுக்கு திரும்பும்போது மணி 10.

No comments:
Post a Comment