1. விவேகம் - இதன் மூலம் தான் எது நித்யம் எது அநித்தியம் என்று கண்டு கொள்வது.
2. விஷயானுபவங்களிலிருந்து விலகி இருப்பது தல் - இப்போதோ, எப்போதோ வரும் சுகத்தில் மனம் ஈடுபடாமல் இருப்பது.
3. ஷட் குணங்கள் - ஆறு குணங்கள் சம, தம, உபரதி, திதிக்ஷா, சமாதான, ஸ்ரத்தா ஆகியவைகளை கடைபிடிப்பது. ஆறு குணங்கள் என்ன வென்று கொஞ்சம் விளக்குகிறேன்.

* சம - மனக் கட்டுப்பாடு - எதையும் உணர்ச்சி வசப்படாமல் சமமாக பாவிப்பது.
* தம - புலன்கள் நம்மை அவை போன போக்கில் இழுத்துச் செல்லாதவாறு அடக்கி வைத்தல்.
* உபரதி - பந்தங்களில் இருந்து விடுதல் - குலம் , கோத்ரம், ஜாதி, மதம், குடும்பம் போன்ற பற்றுகள் விலகுவது.
* திதிக்ஷா - உணர்ச்சிகளை மதிக்காமல், அவற்றிற்கு இணங்காமல், மோக்ஷத்தில் நாட்டம் கொள்வது..
- சமாதானம் -- ஞானிகள், யோகிகள், வேத சாஸ்திரங்கள் காட்டிய வழியில் மனதை உண்மையில் ஈடுபடச் செய்தல்
- ஸ்ரத்தா --- குருவின் மீதும் சாஸ்திரங்கள் மீதும் பரிபூர்ண நம்பிக்கையோடு அவர்கள், அவை, கூறியபடியே பிசகாமல் பிறழாமல் நடப்பது.
எல்லோருக்கும் தெரிந்த ஒரு சின்ன உண்மை. -- யாருமே, எதிலுமே முழுமையாக புரிபடாமல் எந்த செயலிலும் ஈடுபட்டால் அது நிறைவேறாது. நிறைவு பெறாது. மேற்கண்டவைகளை யாரும் திடீர் 777 சாம்பார், ரசம் மாதிரி பெற முடியாது. கொஞ்சமாவது கஷ்டப்பட வேண்டாமா?. அப்படி திடீரென்று ஞானம் பெறுபவன், ஏற்கனவே முற்பிறவிகளிலேயே தயார் நிலையில் உள்ளவன். அவனுக்கு பசி தாகம், தொந்தரவோ, உஷ்ணம், குளிர்ச்சி, மழை வெயில், வியாதி, சுக துக்கம், மனிதர்களிடமோ விலங்குகளிடமோ பயம், எதுவும் இல்லை. சகலமும் துறந்தவன். இனி பிறவி இல்லாதவன்.
அவனது நாட்டம் பரத்திலேயே உள்ளதால் இக வாழ்க்கையில் எந்த பந்தமும் நெருங்காது காற்றில் திசை மாறி சுற்றும் பஞ்சு போல் நாம் தவிக்கிறோம். ஞானி மனதை கட்டுப்படுத்தி ஆத்ம விசாரத்தில் ஈடுபடுபவன். பிரம்மத்தில் நாட்டம் கொள்பவன். பிறவிப்பிணியில் இருந்து தப்புபவன். தேகம் ,ஆத்மா அல்ல, அழியும் மண் பாண்டம். காற்றடைத்த பை என்று அறிந்தவன். நமது கஷ்டங்கள், துன்பம் எல்லாமே எதையோ எதிலோ தவறாக அறிந்து மாயையை நிஜமென்றும் சாஸ்வதம் என்றும் எண்ணி ஏமாந்து திணறுவதால் தான். கயிறு பாம்பாக கண்ணுக்கு தோன்றி,நாம் உளறிக்கட்டி, வியர்த்து,பயந்து, நடுங்கி, மார்பு படபடவென்று துடிக்க தவிக்கிறோம். பாம்பல்ல கயிறு என்று தெரிந்ததும் மூச்சு வருகிறதே.

ஞானி கயிறுகளை பாம்புகளிலிருந்து வேறு என்று சரியாக அறிபவன்.
No comments:
Post a Comment