இதை கதையாக கொள்ளாமல் ஒரு படிப்பினையாக கொண்டு நமது தவறுகளை திருத்திக்கொள்ள முயன்றால் இந்த கதையை எழுதியதற்கு , படித்ததற்கு ஏதோ ஒரு பயன் ஏற்படும்.
ஒரு இரவு. கடைக்காரன் கதவை மூடும் நேரம் ஒரு நாய் வந்து நின்றது. வாயில் ஒரு பை . அதில் சாமான் லிஸ்ட். பணம். அந்த லிஸ்டில் இருந்த சாமான்களை பையில் போட்டு அதற்கான காசு போக மீதியையும் பையில் போட நாய் அதை கவ்விக்கொண்டு திரும்பியது. கடைக்காரனுக்கு ஆச்சர்யம். இப்படி ஒரு நாயா? இது எங்கே போகிறது.? யார் இதை இப்படி வளர்த்தவன்? என தெரிந்துகொள்ள பின்னாலேயே போனான். ஒரு பஸ் ஸ்டாண்டில் நாய் நின்றது. பஸ் வந்ததும் உள்ளே ஏறி, தனது கழுத்து பட்டையை கண்டக்டரிடம் காட்ட, அவன் காசு எடுத்துக் கொண்டு டிக்கெட்டை அதில் நுழைத்தான். எங்கு இறங்கவேண்டும் என்று நாய்க்கு தெரியும். அந்த இடம் வந்ததும் கதவருகே நின்று வாலை ஆட்ட பஸ் நின்றது. இறங்கியது.பின்னாலேயே கடைக்காரனும் இறங்கி நடந்தான். நாய் ஒன்றிரண்டு தெரு தாண்டி ஒரு வீட்டு வாசலில் நின்றது. முன்கால்களால் கதவை தட்ட. உள்ளே இருந்து ஒருவன் வந்து கதவை திறந்தான். வந்தவன் கையில் இருந்த கம்பினால் நாயை அடித்தான்.
திடுக்கிட்ட கடைக்காரன் ''ஏன் ஐயா இவ்வளவு நல்ல உபகாரம் செய்யும் நாயை அடிக்கிறாய்?'' என்று கேட்டபோது அந்த மனிதன்... '' சே, என்ன முட்டாள் நாய் இது. போகும்போது வீட்டு சாவியை எடுத்துக் கொண்டு போயிருக்க வேண்டாமா? தூங்கிக் கொண்டிருந்த என்னை எதற்காக பாதியில் எழுப்ப வேண்டும்.?''' என்றான்..... கடைக்காரன் மயங்கி கீழே
விழுந்தான்.
நீதி: மனிதனின் எதிர்பார்ப்புகளுக்கு எல்லையே இல்லையே . நல்லதெல்லாம் மறந்து விடுகிறது. இல்லாத தப்பு மட்டும் கண்ணில் படுகிறது . ஆபீஸ்களில் வீடுகளில், அதிகாரிகள் எஜமானர்கள், இப்படித்தான் ஊழியர்களிடம் இன்னும் நிறைய வேலை செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment