\
நீர் ஒரு புஷ்பம்...வளம் தரும்... J.K. SIVAN
நாம் அனைவரும் எல்லா சுப கார்யங்கள் நடக்கும்போதும், ஆலயங்களிலும், கேட்கும் ஒரு அருமையான ஸமஸ்க்ரித மந்திரம். வைதிகர்கள் லௌகீகர்கள் சேர்ந்து சொல்லும் செவிக்கினிய மந்திரம். அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டால் அதன் அருமை புரியும். விரும்பி மனப்பாடம் செய்ய தோன்றும்.
இது யஜுர்வேதத்தில் தைத்ரீய அரண்யகம் என்ற பகுதியில் வருகிறது. நீரின்றி அமையாது உலகம். எனவே எங்கும் நீர் வளம் பெறுக வேண்டும் மந்திரம். நீர் ஒன்றே சுபிக்ஷத்தின் அறிகுறி.
அந்த கால ராஜா கூட மந்திரியை தான் கேட்பான். ''மந்திரி நமது நாட்டினில் எங்கும், மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?''
यो॑உपां पुष्पं॒ वेद॑ पुष्प॑वान् प्र॒जावा॓न् पशु॒मान् भ॑वति ।
च॒न्द्रमा॒ वा अ॒पां पुष्पम्॓ । पुष्प॑वान् प्र॒जावा॓न् पशु॒मान् भ॑वति ।
य ए॒वं वेद॑ । योஉपामा॒यत॑नं॒ वेद॑ । आ॒यतन॑वान् भवति ।
Yopam puspam veda Puspavan prajavan pasuvan bhavati
Candramava Apam puspam Puspavan, Prajavan pasuman bhavati
Ya Evam Veda Yopa mayatanam Veda Ayatanamvaan bhavati.
யோ’உபாம் புஷ்பம் வேத’ புஷ்ப’வான் ப்ரஜாவா”ன் பஶுமான் ப’வதி |
சம்த்ரமா வா அபாம் புஷ்பம்” | புஷ்ப’வான் ப்ரஜாவா”ன் பஶுமான் ப’வதி |
ய ஏவம் வேத’ | யோஉபாமாயத’னம் வேத’ | ஆயதன’வான் பவதி |
நீர் ஒரு புஷ்பம். ஜலபுஷ்பம். இதை புரிந்து கொண்டவனிடம் புஷ்பங்கள் சேர்கிறது, பூக்காளாகிய குழந்தைகள் சேர்கிறது. சுபிக்ஷத்தின் சின்னமாகிய ஆநிரை, ஆடு என்று செல்வம் சேர்கிறது. சந்திரன் எனும் நிலவு, நீரின் குளுமையில் பூவாகிறது. பனி நீர் சுரக்க வைப்பது. இதை அறிந்தவன் மேற்கண்டவாறு நன்மை பெறுகிறான். நீரின் ஆதாரம் புரிந்தவன் நீரின் சுவையோடு இனிமையோடு வளத்தோடு கலந்த தன்னையே அறிந்த புண்யசாலி.
अ॒ग्निर्वा अ॒पामा॒यत॑नम् । आ॒यत॑नवान् भवति ।
यो॓ग्नेरा॒यत॑नं॒ वेद॑ । आ॒यत॑नवान् भवति ।
आपो॒वा अ॒ग्नेरा॒यत॑नम् । आ॒यत॑नवान् भवति ।
य ए॒वं वेद॑ । यो॑உपामा॒यत॑नं॒ वेद॑ । आ॒यत॑नवान् भवति ।
Agnirva Apamayatanam Ayatanavan Bhavati
Yo agnerayatanam Veda Ayatanavan bhavati
Apovagner ayatanam Ayatanavan bhavati
Ya Evam Veda Yopa mayatanam Veda Ayatanavan bhavati
அக்னிர்வா அபாமாயத’னம் | ஆயத’னவான் பவதி | யோ”க்னேராயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி | ஆபோவா அக்னேராயத’னம் | ஆயத’னவான் பவதி | ய ஏவம் வேத’ | யோ’உபாமாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |
நிறைய பேருக்கு நெருப்பிலிருந்து தான் நீர் தோன்றுவது தெரியாது. H2O என்பதே ஹைட்ரஜன், ஆக்சிஜன் எனும் உஷ்ணத்தின் காரணம் தான் நீர். நெருப்பு போன்ற உஷ்ணம் தான் குளிர்ந்து மழையாகி நீராகிறது. இதை அறிந்தவன் நீரை புரிந்தவன். நீரின் ஆதாரம் புரிந்தவன் நீரின் சுவையோடு இனிமையோடு வளத்தோடு கலந்த தன்னையே அறிந்த புண்யசாலி.
वा॒युर्वा अ॒पामा॒यत॑नम् । आ॒यत॑नवान् भवति ।
यो वा॒योरा॒यत॑नं॒ वेद॑ । आ॒यत॑नवान् भवति ।
आपो॒ वै वा॒योरा॒यत॑नम् । आ॒यत॑नवान् भवति ।
य ए॒वं वेद॑ । यो॑உपामा॒यत॑नं॒ वेद॑ । आ॒यत॑नवान् भवति ।
Vayurva Apamaya tanam Ayatanavan bhavati.
Yova Yorayatanam Veda Ayatanavan bhavati|
Apovai va yorayatanam Ayatanavan bhavati.
Ya Evam veda Yopamayatanam Veda Ayatanavan Bhavati
வாயுர்வா அபாமாயத’னம் | ஆயத’னவான் பவதி | யோ வாயோராயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி | ஆபோ வை வாயோராயத’னம் | ஆயத’னவான் பவதி | ய ஏவம் வேத’ | யோ’உபாமாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |
வாயு எனும் காற்றும் நீருக்கான ஆதாரம். காற்று தான் நீராவியாக மேலே மிதந்து சென்று மழை பொழியும் மேகமாகி நீரை அளிக்கிறது. இதை அறிந்தவன் மேற்கண்டவாறு நன்மை பெறுகிறான். நீரின் ஆதாரம் புரிந்தவன் நீரின் சுவையோடு இனிமையோடு வளத்தோடு கலந்த தன்னையே அறிந்த புண்யசாலி.
अ॒सौ वै तप॑न्नपा॒मायत॑नम् आ॒यत॑नवान् भवति ।
यो॑உमुष्य॒तप॑त आ॒यत॑नं वेद॑ । आ॒यत॑नवान् भवति ।
आपो॑ वा अ॒मुष्य॒तप॑त आ॒यत॑नम् ।आ॒यत॑नवान् भवति ।
य एवं वेद॑ । यो॑உपामा॒यत॑नं॒ वेद॑ । आ॒यत॑नवान् भवति ।
Asowvai tapanna pamayatanam Ayatanavan bhavati
Yo musya tapata Ayatanan Veda Ayatanavan bhavati
Apova Amusyatapata Ayatanam Ayatanavan bhavati
Ya Evam Veda Yopa mayatanam Veda Ayatanavan bhavati
அஸௌ வை தப’ன்னபாமாயத’னம் ஆயத’னவான் பவதி |
யோ’உமுஷ்யதப’த ஆயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |
ஆபோ’ வா அமுஷ்யதப’த ஆயத’னம் |ஆயத’னவான் பவதி |
ய ஏவம் வேத’ | யோ’உபாமாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |
சுட்டெரிக்கும் சூரியனே நீரின் ஆதாரம். நீரே சுட்டெரிக்கும் சூரியனின் ஆதாரம். இதுவே உண்மை. இதை அறிபவன் தன்னைத் தானே அறிகிறான். நீரின் ஆதாரம் புரிந்தவன் நீரின் சுவையோடு இனிமையோடு வளத்தோடு கலந்த தன்னையே அறிந்த புண்யசாலி. CLICK THE LINK TO LISTEN TO THE MANHRA https://youtu.be/-yS-Jky997Y
தொடரும்
No comments:
Post a Comment