Thursday, December 6, 2018

THE FALSE LIFE

                                                   அசலும்   நகலும்

 சிடி பாங்கில் ......
நமஸ்காரம்  சார்
நமஸ்காரம். நமஸ்காரம்...   யாரு  தெரியல்லியே?
நான்  சுப்பண்ணா,  உங்க  தெருவிலே  தான்   இருக்கேன்.
அப்படியா,  சந்தோஷம்.  நான்  உங்களை கவனிச்சதில்லை.மன்னிக்கணும்.
நீங்க  தானே அந்த   சிகப்பு  காரிலே தினமும்  வித விதமா வெவ்வேறே கலர்லே   டீ  ஷர்ட் டுல்லாம்  போட்டுண்டு  தினமும்  போவேள் ?
ஓ.. ஆமாம் ... என் பையன் கார்..''

***********
டெலிபோன்  பில்  கட்டும்  ஆபிசில்......பச்சை புடவை கூலிங்கிளாஸ்  குண்டு குள்ள மாமி .
மாமா நீங்க  அந்த   வெள்ளை பங்களாவிலே.. குப்புசாமி  தெரு  திரும்பும்  அந்த  கோடி பெரிய வீட்டிலே  இருக்கேள்?
ஆமாம் '
டிரைவர்  வேலைக்காரா எல்லாம்  இருக்கும்போது  கூட  நீங்களே வந்து  ரொம்ப  சிம்பிளா எல்லா வேலையும்  செய்றேளே .  கிரேட்  சார்.
அப்படியெல்லாம்  இல்லை. நாம்ப  வேலையை   நாம்ப  தானே செய்யணும்.
நான்  உங்களை   பார்க்க ரெண்டு  தரம்  வந்தும்   பாக்க முடியலை.
தெரியாதே.  எப்போ ?
அது  கொஞ்ச   நாளைக்கு முன்னாலே.
 என்ன விஷயமாக?.
உங்க கிட்ட  எங்க ஊர்  பத்தமடை, முருகன்  கோவில்  விழாவுக்கு டொனேஷன்  வாங்க என்   தங்கை வந்தா..
அப்படியா  .ஞாபகம் இல்லை.
அவள்  சொன்னா   ஆயிர  ரூபா  எதிர்பார்த்தேன்,  மாமா  எங்கிட்ட  இது தான்  இருக்குன்னு  நூறு  ரூபா தான் கொடுத்தான்னு.
இருக்கலாம், எங்கிட்ட  அதான்  இருந்துருக்கும் அப்போ. .
மாமி அவரை ஒரு  புழுவாக அருவருப்போடு எற இறங்க பார்த்துவிட்டு  நகர்ந்தாள்
++++


அமெரிக்க பேங்க் ஒன்றில்  பெரியவர் நுழைந்து குடையை மடக்கி வைத்து விட்டு கவுண்டரில்  செக் டெபாசிட்  சலான் தேடுகிறார்.
''மார்னிங் சார்'குட் மார்னிங்''
''உங்களை  உள்ளே  சீனியர்  மேனேஜர்  கூப்பிடறார்.  அதோ   அந்த கேபின்லே.
''ராம சேஷன்   ஐ பிலீவ்''
''எஸ். யூ   ஆர் ரைட்.
'' வாட் வுட் யு  ஹேவ்.  காபி  ஆர்  கூல் ட்ரிங்க்ஸ்
''நோ  சார்  ஐ  ஹேவ் ஆல்ரெடி டேகன்  மை  மார்னிங்  டீ '  தேங்க்  யூ ''
ரொம்ப ப்ராம்ப்டா  மாசா  மாசம்  ஆறு ஏழு தேதிக்குள்ளே பெரிய அமவுண்ட்  பணம் கட்டிடுறேளே. உங்க  மாதிரி  ரொம்ப பெரிய  கஸ்டமர்களை  கவனிக்க  தான்  பெர்சனலா  கூப்பிட்றது .
தேங்க்ஸ்.
என்ன  உத்தியோகமாயிருந்தேள்
கும்பகோணத்திலே  ரிடைர்ட் ஹை  ஸ்கூல் டீச்சர்.
ஏற இறங்க  பார்த்த  மேனேஜர்  ''சாரி  உங்களை மறுபடியும்  பாக்கிறேன்.  வேறே  யாரோ  போன்லே கூப்பிடறா''.  ராமசேஷன்  வெளியே  நகர்கிறார். .
+++
''சாமி  நீங்க  தினம்  தினம்   பொறுப்பா  செடிக்கேல்லாம்  தண்ணீ  ஊத்தறீங்க .   எவ்வளவு ஆசை ஆசையாக  செடி  வளக்கிறீங்க ''
''ம்ம்ம்''
''உங்களுக்கு  ரொம்ப  செடிங்கன்னா   அத்தனை விருப்பமுங்களா   --   எதித்த  வீட்டு   வேலைக்கார அம்மா  கேட்டாள்
அப்படின்னு  இல்லை. ..இருக்கிறதை   நான்  ஜாக்ரதையாக  பாத்துக்க வேண்டாமா .
+++++
''சார்  நான்   எப்பங்க மறுபடி வரணும்.  முன்னாலேயே  சொல்லிடுங்க வழக்கம்போல். பெரிய இடத்து மனுஷங்க  நீங்க   சொன்னா நான்   உடனே வந்துடுவேன்.  காரைத்தொடச்சி  உள்ளே உட்டிருக்கிறேன்.''
''சரிப்பா.  சொல்றேன்.  கிட்ட எங்காவது   போகணும்னா எங்கிட்ட  சைக்கிள்  இருக்கு.
ஆமாங்க. சமயத்திலே உங்களை  சைக்கிள்ளே  போவ   சொல்ல பாத்திருக்கேன்.
'அப்படியா 
''ரொம்ப  ரொம்ப  பெரிய  பணக்காங்க  இப்படி  சிம்பிளா  நடக்கிறது  ஆச்சர்யம்  சார்.
....

''டாக்டர் இதுக்கு  என்னன்னு  நீங்க  கண்டிப்பா  பார்த்து  மருந்து கொடுக்கணும்.  சோர்ந்து சோர்ந்து உட்காருது.  சாப்பாடு சரியா  சாப்பிடறதில்லை.
'
'நாளைக்கு  நான்  சாயங்காலம்  வரேனே.
''இல்லே டாக்டர்   எனக்காக தயவு செய்து இன்னிக்கு   இப்போவே வாங்களேன்.
''கார் இல்லை.    டாக்சிலே தான்  வரணும்.
''  டாக்டர்  ப்ளீஸ்....நான்  உங்களுடைய  டாக்சி  பணம்  தந்துடறேன் பீஸ் உடன் சேர்த்து தரேன்''
''சரி  இன்னும்   அரைமணியிலே வந்துடறேன்.  ''பைரவனுக்கு ''   பால்  மட்டும்  கொஞ்சம்  குடுங்க குடிக்கிறானான்னு  பாருங்க. நான்  வந்து  மீதியை  கவனிக்கிறேன்.

 ++
மூணாம்   வீட்டிலே  இருக்காளே அந்த  மாமா ரொம்ப ஸ்டைல் டா. கோபு
அப்படி    என்ன  பண்றார்.
தினம்   ஒரு டி  ஷர்ட், பேன்ட், ஷர்ட்  அரைக்கை,  முழுக்கைன்னு   மாத்தி மாத்தி  போட்டுண்டு  மினுக்கிறார்.
நிறைய  துணிக்கு  செலவழிப்பாரோ  என்னவோ. சில  பேர் அந்த  மாதிரிதாண்டா  சீனு.  நமக்கும் அப்பான்னு  ஒத்தர்  இருக்காரே.  தீவுளிக்கு தீவுளிக்கு  சட்டை  ஒண்ணு  வாங்கி தந்துண்டு.
எங்கப்பா ரொம்ப   மோசம் டா.  அவர் விலை பார்த்து  தான்  எனக்கு ஷர்ட் பேண்ட்   கலர் செலக்ட்  பண்றார்.  அழுக்கு   தெரியாத, கரை  தெரியாத, பழுப்பு   கலரா  இருந்தா  சலவைக்கு அடிக்கடி  துணியை     போடவேண்டாமாம். தோச்சு  இஸ்திரி  பண்ணிண்டா போரும்கிறார்.
மூணாம்  வீட்டு மாமா  கொடுத்து வச்சவர்.
+++++.
எதுத்தாத்து மாடி  கிழவருக்கு  என்ன  நடு ராத்த்ரி நிறைய நேரம்  டெலிபோன்  கால்  வருது.  ரொம்ப  நாழி யாரோடையோ  பேசிண்டே  இருக்காரே.
அவரோட  பிள்ளை  அமரிக்காலே  இருக்கானாம். மாட்டுபொண்ணும்   பிள்ளையும்  மாத்தி மாத்தி  அடிக்கடி   மாமாவோட பேசறா. மாமா  பாரு   ரொம்ப   பாசமா  அவா  கூப்பிடும்போதெல்லாம்  ரெடியா இருந்து சில சமயம்   தினமும்  ரெண்டு  மூணு  தடவை கூட  பேசறார்.  பகல் ராத்ரி பார்க்கறதில்லே  பணம்  வச்சிருந்தா  கூட  பாசம்  வேண்டுமே.   இந்தக்காலத்தில் யார் அப்படி.''
ரொம்ப  நல்ல ஒத்துமையான குடும்பம்.  மாமா  எவ்வளவோ பெரிய  பணக்காரன் .  ரொம்ப  சிம்பிள்.  பாரேன்.  தெரு  முக்குலே காலம்பர,  சாயந்தரம்  சைக்கிள்ளே  போய்  டீ  குடிக்கிறார்.
ரெண்டு நாள்   முன்னாலே  பிஸ்கட்  பன் வாங்கி  டீயிலே தோச்சு  சாப்பிட்டிண்டிருந்தார்.  பால் வாங்க  போனேனா.  என்ன சார்  இங்கே காலம்பர? என்று கேட்டதற்கு. டிபன் பண்ணலே.  இது  போதும்னார்.
+++++
பெரியவர்  வெகுநாளைய ஸ்கூல் நண்பன்  சுப்புசாமியோடுபார்க்கில் .....
''ராமசேஷா .. எப்படி போயிண்ட்ருக்கு வாழ்க்கை ?
''என்ன இருக்கு   போக ?
''பிள்ளை  மருமகள் இப்பவும்  தினமும்   பகல்லே  ராத்திரிலே  போன் பண்றாளா?
''ஆமாண்டா   சத்தே கூட கண் அயர முடியலே .
''போன் பண்ணி  தினமும்  அந்த  பேங்கு போ. இங்கே போ.   நாங்க   கேக்கும்போது  கரெக்ட் பேலன்ஸ் சொல்லணும்.  காரை  மூணு நாளைக்கு  ஒரு  தரம் மட்டும்  எடுத்து  ஒரு  அரை  மணி  நான் சொல்ற  இடத்துக்கு  போகணும். டிரைவர் கிட்ட  நான் சொல்ற  இடம் மட்டும்   போக சொல்லு. எல்லாத்துக்கும்   கார்  வேணாம்.  உன்  சைக்கிள்லே  போ.  வீட்டை க்ளீனா  வச்சுக்கோ செடிக்கேல்லாம்   தினமும் தண்ணி  ஊத்தணும்.   கவனமா   வாடாம பாத்துக்கோ. என்னோடைய  டி ஷர்ட்  ஷர்ட்   எல்லாம் உனக்கு  சரியாக இருக்கும்.  அதை   யூஸ்  பண்ணு.   புதிசா வாங்க வேணாமே..  பைரவனை ஜாக்கிரதையாக  கவனி.  கமலாவுக்கு அவன் (PET )பெட் . வழக்கமான துரை சாமி டாக்டர் கிட்ட காட்டு. பணம் அனாவசியமா செலவு பண்ணாதே''........ இன்னும்  என்னன்னவோ .. சொன்னான். எழுதி வச்சுண்டு  அப்படியே  பண்றேன்.

''ராமசேஷா ,அப்போ  நாம்ப  ரெண்டு பெரும்    தஞ்சாவூர்  எல்லாம்  சுத்தி பார்க்க  எப்போ போறோம்?
''அவா  எப்ப  சொல்றாளோ  அப்போ  தான் கிளம்பணும் 
''ரெண்டு பேரும்  பஸ்லேயே  போலாம்  என்ன ராமு?
'' எவ்வளவு ஆகும்?.
''ஆளுக்கு  ஐநூறு  ரூபா  போரும்.  அஞ்சு நாள் சுத்திப்பாக்கலாம்.''
''சரி  நானும்  அதுக்குன்னே பென்ஷன்லே சேர்த்து  வச்சிருக்கேன்.   போன  மாசம்  என்   பென்ஷன்லே கொஞ்சம் சேர்த்து வச்சதை   யாராவது  வந்து என்னை  ரொம்ப  பெரிய மனுஷனா  நினைச்சுண்டு  டொனேஷன் கேக்கறா.  கஷ்டமா இருக்கு.   என்னாலே முடிஞ்சதை  பென்ஷன்லே  செலவை   சுருக்கிண்டு அம்பது,  நூறு  கொடுத்தா  வினோதமா  பாக்கறா.  காது  கேக்க  ''இவ்வளவு  பெரிய  பணக்காரன்  குடுக்கறதை பாரு. கஞ்சன்ன்கிரானுங்க.'' பைரவன்  நாய்க்கு  உடம்பு படுத்தறது  கிழ  நாய்.  அதுமேலே   இருக்கிற   அக்கறை கூட  என்  மேலே இல்லைடா சுப்பு.

''என்னடா ராமு    இப்படி  ஒரு  ரெட்டை வாழ்க்கைலே மாட்டிண்டுட்டே.!!

நிறைய பேர் வாழ்க்கை  இந்தியாவில் இப்படி இருப்பது நமது துரதிர்ஷ்டம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...