Thursday, December 27, 2018

TEACHERS




       என் கேள்விக்கென்ன பதில்?
                            J.K. SIVAN 

வெளியே கீழே  பெரிய தெருவில்  பேய்க்  கூட்டம்.  சந்தடி. வண்டிகள் கத்திக்கொண்டு, சீறிக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் பறக்கிறதா, பாய் கிறதா? போகிறதா?  சப்தமே எதுவும் கேட்காமல்   ஏழாவது மாடியில் ஒரு குளிர் அறையில்  சில பெரியமனிதர்கள். ஒரு பெரிய மேசை நிறைய குளிர் பானங்கள், தின்பண்டங்கள், பழ வகைகள்.

வாழ்க்கையை பற்றி ஒரு  வழுக்கை தலை பேசுகிறது. பெரிய  கம்பனி ஒன்றின் தலைமை நிர்வாகி.
''என்னது பெரிய  படிப்பு? குழந்தைகள் வாத்தியாரிடம் என்ன தெரிந்து கொள்ள முடியும்? ஒன்றுக்கும்   உதவாதவன், வேலை கிடைக்காதவன் தான் வாத்தியாராக பள்ளிக்கூடத்தில் காலம் தள்ளுகிறான்''

வழுக்கையின்  எதிரே சுப்புசாமி. ஒரு நண்பன். ஏழை வாத்யார். '' சுப்பு  நீயே ஒரு உபாத்தியாயர்.  உண்மையாக  சொல்லப்பா. நீ என்ன .சாதித்தாய்?

'' சோமு, (வழுக்கையின் பெயர்), உண்மையாகவே சொல் என்கிறாயா? சரி சொல்கிறேன்.''   

குழந்தைகள் நன்றாக படித்து மக்காக இல்லாமல் உயர வழி சொல்லித்தருகிறேன். 
 ஐந்து நிமிஷங்கள் பெற்றோரால் வீட்டில் சும்மா உட்கார வைக்க முடியாத குழந்தைகளை  ஒவ்வொரு வகுப்பிலும் மணிக்கணக்காக உட்கார வைக்கிறேன்.  அதுவும்   ஐபாட், செல் , போன், டிவி,   வீடியோ   எதுவுமில்லாமல்.விளையாடாமல்.
அவர்களை அதிசயிக்க வைக்கிறேன், யோசிக்க வைக்கிறேன்.  மன்னிப்பு கேட்க வைக்கிறேன்.  செய்த தவறுகளை ஒப்புக்கொள்ள வைக்கிறேன். எழுத படிக்க வைக்கிறேன். கணக்கு போட வைக்கிறேன். கால்குலேட்டர் இல்லாமல் கூட்ட, கழிக்க,  ,பெருக்க, வகுக்க.  கடவுள் கொடுத்த மூளையை உபயோகிக்க வைக்கிறேன். அவரவர் தாய் மொழி மறக்காமல் இருக்க மற்றவர் தாய் மொழி தெரியாததால், எல்லோரும் சம்பாஷிக்க ஆங்கிலம் சொல்லி தருகிறேன்.
என் வகுப்புகளில் நிர்பயமாக  குழந்தைகள் இருக்க உதவுகிறேன்.
எல்லோரும் வகுப்பில் நின்று மார்பில்  இதயத்தை தொட்டு  தேசிய கீதம் ஒற்றுமையாக பாட செயகிறேன்.ஒன்றே குலம்  ஒருவனே தேவன் புரிய வைக்கிறேன்.
கடவுள் பரிசளித்த புலன்களை சரியான வழியில் பயன் படுத்தி, இதயத்தை விசாலமாக்கி, உழைத்தால்  வாழ்வில்  வெற்றி கிடைக்கும் என அறிவுறுத்துகிறேன்.
...அப்புறம்....  சுப்புசாமி  பேச்சை நிறுத்தி எல்லோரையும் ஒரு கணம் பார்க்கிறார். பிறகு தொடர்கிறார்.
  பிறர் அவர்களை   ''நீ பணமில்லாதவன் என்ன பெரிதாக சாதித்துவிட்டாய்  என்று எவராவது கேட்கும்போது தலையை நிமிர்த்தி அறியாமையில் திணறும்  அவர்களை ஏளனமாக பார்க்க செய்கிறேன். ஆகவே எல்லோரையும் நல்ல மாற்றம் அடைய செயகிறேன்.  சரி நான் என்ன சாதித்து விட்டேன் என்று கேட்டாயே சோமு.  நீ பணக்காரனாக என்ன சாதித்து விட்டாய். ?''
சோமுவின் கண்களில் கண்ணீர் மட்டுமே பதில் சொல்லியது. மற்றவர்கள் எல்லாவற்றையும் பேசாமல் கேட்டு சிந்தித்தார்கள்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...