Monday, December 10, 2018

POVERTY



தமிழ்ப் புலவர்கள்
ராமச்சந்திர கவிராயர் J.K. SIVAN
ஏன் இப்படி படைத்தாய் அயனே ?

ராமச்சந்திர கவிராயருக்கு அடக்கமுடியாத கோபம். யார் மேல்?
எல்லாம் அந்த படைக்கும் கடவுள் ப்ரம்ம தேவன் மேல் தான்.

'ஹே ப்ரம்ம தேவனே, உனக்கு ஏதாவது கருணை கிருணை இருக்கிறதா சொல்?
இப்படி என்னை பசியால் வாட விட்டு விட்டாயே. காலையிலிருந்து அலைகிறேன் ஒரு பயல் ஒரு அணா கொடுக்க வில்லையே. கரடியாக கத்தி பாட்டெல்லாம் பாடினேன். ஏன் அவர்கள் மனம் இறங்கவில்லை. காசில்லாமல் கிடைப்பது ஏதாவது இருந்தால் அதையாவது தின்போமே என்று சுற்று முற்றும் பார்க்கிறேன். எங்கும் வனாந்தரம் கல் மண் தான் கண்ணில் படுகிறது. சரி தான்..

எங்கே பார்த்தாலும் நிறைய கல்லும் மண்ணுமாக இருக்கிறதே . அதையாவது தண்ணீர் விட்டு கரைத்து காய்ச்சி குடிக்க ஏன் சொல்லிக் கொடுக்கவில்லை நீ? இல்லாவிட்டால் நிறைய தங்க நாணயங்கள் பொற்காசுகள் மூட்டை மூட்டையாக தந்திருக்கவேண்டாமா? அதை வைத்துக்கொண்டாவது நான் பிழைத்திருப்பேனே.
இரவும் பகலுமாக நான் தவிக்கிறேனே. புல்லு தின்கிற மாடாக இருந்தா நல்லா இருந்திருப்பேனே .
இந்த பூமியில் நான் எல்லோர் கிட்டேயும் தலையை சொரிந்து கொண்டு பல்லைக்காட்டிக்கொண்டு நாணிக் கோணி நிற்க செய்து விட்டாயே அப்பா. நீ மட்டும் ஸ்வஸ்தமாக தாமரை மலர் மேல் உட்காந்துகொண்டிருக்கும் ப்ரம்ம தேவனே!


இது தான் கவிராயரின் அற்புத பாடல். பல நூறு ஆண்டுகளானாலும் எல்லோரும் விரும்பி படிக்கும் எளிய கவிதை. வறுமையை, பசியை இதைவிட எப்படி சார் சொல்ல முடியும். இல்லை பாட முடியும்?

''கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா
இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான் கொடுத்துத்தான் இரட்சித்தானா
அல்லைத்தான் சொல்லித்தான் அரைத்தானோ அத்தானையோ வெங்கும்
பல்லைத்தான் றிறக்கத்தான் பதுமத்தான் புவியிற்றான் பண்ணினானே.''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...