ஐந்தாம் வேதம்
மஹா பாரதம்
மஹா பாரதம்
அப்பாடா வனவாசம் ஒருவழியாக முடிந்தது....!
இது வரை அப்பப்பா... கிட்டத்தட்ட ஐந்து வருஷங்கள் முடிந்துவிட்டதா நாம் வனவாசம் ஆரம்பித்து. பதினோரு வருஷம் தாண்டிவிடும் போல் இருக்கிறதே என்றான் பீமன். ஆமாம் அர்ஜுனன் திரும்பி வந்ததே எனக்கு ஒரு புது தெம்பை கொடுக்கிறது என்றான் யுதிஷ்டிரன். அர்ஜுனா உன் அனுபவங்களை சொல் என்றாள் திரௌபதி. தொண்டையை கனைத்துக் கொண்டான் அர்ஜுனன். ஐந்து வருஷ அனுபவங்களை சுருக்கமாக சொல்கிறான். நான் மறுபடியும் ஒரு மஹாபாரதம் எழுதி மாட்டிக்கொள்ளாமல் ஓரிரு வார்த்தைகளில் அதை சொல்கிறேன். அதற்கிடையில் என்னை மன்னித்தேன் என்று அனைவரும் உரக்க சொல்லுங்கள்.
துரியோதனனை, சகுனியை விட கொ டியவனாக உங்களை இத்தனைகாலம் எங்கெங்கோ மலைகள், நதிகள், காடுகள், ரிஷிகள் ஆசிரமங்கள் எல்லாம் இழுத்து சென்று காய் கனி கிழங்குகள் சாப்பிட வைத்தேனே. பாவம் நீங்கள் சொக்கட்டான் ஆடவில்லை, தோற்கவில்லை, இருந்தும் இந்த தண்டனை தந்துவிட்டேன். க்ஷமிக்கவும்.
''அண்ணா தங்கள் உத்தரவுப்படி நான் பிருகுதுங்க வனம் சென்றேன்'' என்று ஆரம்பித்து, பிறகு கடுந்தவம் புரிந்து இந்திரலோகம் அடைந்தது, சிவ பெருமானை வேடனாக சந்தித்தது இந்திரனோடு சரி சமானமாக அமர்ந்தது, ஊர்வசி சாபம் அனைத்தும் விவரிக்கிறான் அர்ஜுனன். .
''அர்ஜுனா, நீ வெற்றியோடு நமக்குத் தேவையையான சக்தி வாய்ந்த ஆயுதங்களை தெய்வங்களிடமிருந்தே பெற்று வந்தது நாம் துரியோதனாதிகளை வென்றது போன்ற உணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் தருகிறது.'' என்றான் யுதிஷ்டிரன். ''இப்போது இருளாகி விட்டது. நாளைக் காலையில் சூரிய ஒளியில் நீ நிவத கவசர்களை எல்லாம் கொன்று வீழ்த்தி இந்திரனை மகிழ்வித்த அந்த தெய்வீக ஆயுதங்களை எல்லாம் பார்க்கிறேன் ''.
மறுநாள் காலையில் பாண்டவர்கள் ரிஷிகள், முனிவர்கள், யோகிகள், பிராமணர்கள் ஆகியோர் அங்கு அர்ஜுனனை சூழ்ந்து கொண்டு அவனது காண்டீவம், தேவதத்தம் என்கிற சங்கு, மற்றும் அஸ்திரங்களை எல்லாம் காட்டி, விவரமாக அவன் எடுத்து சொல்ல, எவரும் அடையமுடியாத அவற்றைக் கண்டு அதிசயிக்கிறார்கள். அர்ஜுனனைத் தவிர எவராலும் தொடக் கூட முடியாத அவற்றின் மகத்வம் அறிகிறார்கள்.
வனவாசம் பதினொரு வருஷம் இவ்வாறு ஓடிவிட்டது.'
' அண்ணா, இன்னும் சில காலமே. கடைசி ஒருவருஷத்தையும் துரியோதனனின் ஆட்கள் எவர் கண்ணிலும் படாமல் நாம் கழித்தால் பிறகு அவனை சந்தித்து போரிட்டு வென்று அவர்களைக் கொண்டு, நமது ராஜ்யத்தை மீட்போம்'' என்று அர்ஜுனன் கூறுகிறான்.
அர்ஜுனன் வந்துவிட்டதால் எல்லோரும் ரிஷி அர்ஷ்டிசேனரின் கந்தமாதன ஆஸ்ரமத்திலிருந்து புறப்படுகிறார்கள். பறவைகளும் மான்கள், மயில்கள் மற்றும் அவர்களோடு வாழ்ந்த விலங்கினங்களும் ஏக்கத்தோடு பாண்டவர்களை பிரிய மனம் இன்றி, கண்ணீரோடு பார்த்து மௌன விடை கொடுக்க அங்கிருந்து சென்றார்கள்.
கடோத்கஜனும் அவனது ராக்ஷசர்களும் அனைவரையும் தூக்கிச் செல்வதால் பிரயாணம் தடைப் படவில்லை. வரும் வழியில் ஒரு இரவு வ்ரிஷபர்வர் ஆஸ்ரமத்தில் தங்குகிறார்கள்.
மலைப்பாதையை கடந்ததும் கடோத்கஜனும் அவன் ராக்ஷசர்களும் நன்றியோடு திருப்பி அனுப்பப்பட்டு, யமுனை நதிக்கரையை அடைகிறார்கள்.
அடர்ந்த வனப்ரதேசமான சித்ரரத காட்டில் சில காலம் கழிகிறது. கடைசி வனவாச வருஷம் தொடங்கியதை அங்கேயே கழிக்க திட்டமிட்டார்கள்.
சரஸ்வதி நதி பிரதேசம் தாண்டி த்வைதபாண ஏரி அடைந்தது வசதியாக இருக்கிறது. அங்குள்ள பிராமணர்கள் ரிஷிகள் பாண்டவர்கள் வருகையை அறிந்து உபசரிக்கிறார்கள்.
வ்ரிஷபர்வர் ஆஸ்ரமத்தில் இருந்தபோது ஒரு அதிசய சம்பவம் நிகழ்ந்தது.

No comments:
Post a Comment