மஹநீயர்கள் J.K. SIVAN
ஜெயதேவர்
அதில் தான் வித்துவான்கள் தனது கற்பனா சக்தி மந்திர தந்திர வித்தைகள் எல்லாம் நிறைய ஜனரஞ்சகமாக காட்டுவார்கள். நான் மறைந்த பாலமுரளி கிருஷ்ணாவுக்கு அடிமையானது அதில் தான்.
பூரி ஜகந்நாதர் பக்தர் ஜெகதேவர் என்று ஒருவர் மகள் பத்மாவதி . கிருஷ்ண பக்தை. ஆடல் பாடல்களில் தேர்ந்தவள். மூன்று ''ஜெ'' க்கள் இணைந்தன. பூரி ஜெகநாதன் ஜெகதேவன் கனவில் வந்து ''உன் மகள் பத்மாவதியை என் பக்தன் ஜெயதேவனுக்கு கொடு '' என்றான். ஜெகநாதன் உத்தரவை மீற முடியுமா?
அப்போதைய ஒரிஸ்ஸாவில் (இப்போது ஒடிஷா) போஜ தேவர் ஓர் பிராமணர். அவர் மனைவி ரமாதேவி. ஒரே மகன் ஜெயதேவர். அப்பாவிடம் அனைத்து சாஸ்திரங்களும் கற்றார். ஸ்ரீமத் பாகவதம் ரொம்ப பிடித்ததால் அன்றாட பாராயணமாயிற்று.
பூரி ஜகந்நாதர் பக்தர் ஜெகதேவர் என்று ஒருவர் மகள் பத்மாவதி . கிருஷ்ண பக்தை. ஆடல் பாடல்களில் தேர்ந்தவள். மூன்று ''ஜெ'' க்கள் இணைந்தன. பூரி ஜெகநாதன் ஜெகதேவன் கனவில் வந்து ''உன் மகள் பத்மாவதியை என் பக்தன் ஜெயதேவனுக்கு கொடு '' என்றான். ஜெகநாதன் உத்தரவை மீற முடியுமா?
''என்னுடன் வா'' என்று பெண் கையை பிடித்து அழைத்துக்கொண்டு ஊருக்கு கடைசியில் ஒரு குடிசை ஆஸ்ரமத்தில் இருந்த ஜெயதேவர் வீட்டுக்கு வருகிறார். வாசலில் திண்ணையில் பார்க்கிறார். அவரோ பேசாமல் எழுந்து நடந்து விட்டார்.
'இனி இதோ இவரே உன் பதி. அவருக்கு சேவை செய்து அவரை அடைவது உன் பாக்யம். இது ஜெகந்நாதன் அருள் '' என்று ஜெகதேவர் சொல்லிவிட்டு அவளை அங்கே விட்டு விட்டார். பத்மாவதி ஜெயதேவர் இல்ல நேரத்தில் அவர் ஆஸ்ரமத்தை சுத்தம் செயது அவருடைய பூஜைக்கு, பாராயணத்துக்கு எல்லா ஸாமக்ரியைகளும் எடுத்து வைத்து பூப்பறித்து, தொடுத்து, வாசல் பெருக்கி, நீர் தெளித்து, கோலமிட்டு, விளக்கேற்றி துப்புரவாக வைத்துக்கொண்டாள் . யாரோ பக்தர்கள் இதையெல்லாம் செய்வதாக நினைத்த ஜெயதேவர் ஒருநாள் பத்மாவதியை நேரில் பார்த்து அவள் தான் இதெல்லாம் செய் துவிட்டு தனது வீட்டுக்கு திரும்புகிறாள் தினமும் என்று அறிகிறார்.ஆச்சர்யத்தோடு இந்த பெண் யார்? எதற்கு ஒவ்வொருநாளும் இந்த ஆஸ்ரமத்திற்கு வந்து எனக்கு உபகாரம் செயகிறாள், என்று வியக்கிறார். அவளை நிறுத்தி, பேசுகிறார்:
‘‘நீ யாரம்மா? உனக்கு என்ன வேண்டும்? எதற்காக இதையெல்லாம் செய்கிறாய்?’’
‘‘நான் உங்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் இவ்வாறு பணி விடை செய்துகொண்டே இருக்க வேண்டும்; அதுவே என் பாக்கியம்”
நீ யார், உன் பெயர், உன் பெற்றோர்கள் யார் என்று சொல்?
''என் பெயர் பத்மாவதி, என் தந்தை ஜெகதேவர். இதே ஊர். பூரி ஜெகநாத பக்தர். எங்கள் குடும்பமே கிருஷ்ண பக்தி குடும்பம்.
நீ எதற்காக இங்கே வருகிறாய்?
''பூரி ஜெகந்நாதன் என்னை தங்களுக்கு திருமணம் செய்து வைக்க என் தந்தை கனவில் கட்டளை இட்டதால் முதலில் உங்களுக்கு பணிவிடை செய்ய என் தந்தையின் கட்டளை.''
இதுவும் ஸ்ரீபகவானுடைய விருப்பம்போலும் என்று நினைத்து பத்மாவதியோடு அவள் வீட்டுக்கு செல்கிறார். இருவரையும் கண்ட ஜெகதேவருக்கு பரம சந்தோஷம். ''ஜெகன்னாதா, இதை தானே நீ ஆசிர்வதித்தாய்'' என்று வணங்குகிறார். இதுவரை திருமணத்தை வெறுத்த ஜெயதேவர் பத்மாவதியை மனைவியாக ஏற்கிறார்.
இனி பூரி ஜெகநாதன் சும்மா இருப்பானா? ஜெயதேவருக்கு தன்னை பற்றி எழுத ஆர்வம் தருகிறான்.
ரிஷியும் ரிஷிபத்னியுமாக இல்லறம், தினமும் கிருஷ்ணனுக்கு பூஜை கைங்கர்யங்கள் பாராயணம் செய்து, அவரிடம் உபதேசங்கள் பெறுகிறாள். ப்ரேமையும் பக்தியாக இருவரும் க்ரிஷ்ண பக்தியோடு வாழ்கிறார்கள்.
கண்ணனும் ராதையுமாக அவர்களும் வாழ்கிறார்கள்.
கீத கோவிந்த காவியம் உருவாகிறது.
ஜெயதேவர் சகல சாஸ்திரங்களும் தெரிந்தவர். ஆதலால் இப்போது கண்ணன் ராதை இருவர் மீதும் ஒரு காவியத்தை இயற்றத் தொடங்கினார். அதுவே அஷ்டபதி என்கிற கீதகோவிந்தம் ஆகும்
தொடரும்
No comments:
Post a Comment