வண்ணக் கண்ணன்கள் J.K. SIVAN
22.12.2018 சனிக்கிழமை மாலை 3மணிக்கு ஒரு திணறல் எனக்கும் ஸ்ரீ சுந்தரம் ராமச்சந்திரனுக்கும் (ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா நிறுவன செயலர்). ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டோமோ?
ரஞ்சனி ஹால், நங்கநல்லூர் நிறைந்திருந்தது. நிறைய சிறுவர்கள் சிறுமிகள் கூடி விட்டனர்.
ஒரு போட்டி அவர்களுக்குள். ராதைகளும் கிருஷ்ணர்களும் மேடை பூரா அமர்ந்து யார் கிருஷ்ணனை நன்றாக வண்ண மயமாக காட்ட முடியும் என்று ? . ஒரு மணி நேரம் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்று ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா நிறுவனம் கூறி முடிவெடுக்க வண்ணம் தீட்டும் போட்டி துவங்கியது.
ஐந்து வயதிற்கும் குறைவான குழந்தைகள் கூட இதில் பங்கேற்றனர். பெற்றோர்கள் ஆர்வத்தோடு ஒத்துழைத்து குழந்தைகளை நாங்கள் கொடுத்த கிருஷ்ணன் உருவத்திற்கு வண்ணம் தீட்டும் முயற்சியில் ஈடு படுத்தி அவர்கள் சிறப்பாக கிருஷ்ணனை அழகு படுத்த ஊக்குவித்தனர். முடிவில் 18 வண்ணக் கண்ணன்கள் எங்கள் கையில் படமாக கிடைத்தனர். அத்தனை கண்ணன்களையும் மேடையில் சுவற்றில் அலங்கரித்தோம்.
எந்த கண்ணனை சிறந்தவன் என்று சொல்வது? எல்லோரும் ஒரே மாதிரியும் இருந்தனர். வித்தியாசமாகவும் காணப்பட்டார்கள். எந்த கோணத்தில் கண்ணன் அழகன்? குழந்தைகளே தெய்வங்கள் தானே? அவர்கள் இப்படித்தான் எனக்கு கண்ணன் தெரிந்தான் என்று சொல்லும்போதும் இல்லை என்று யாராலும் விடை அளிக்க முடியாதல்லவா? ஆகவே இந்த கண்ணனுக்கு வண்ணம் தீட்டும் போட்டியில் அனைத்து குழந்தைகளுக்கும் புத்தக பரிசளித்தோம், எல்லா குழந்தைகளுக்கும் கண்ணன் நீல நிற மேனியன் என்று தெரிந்திருக்கிறதே. பரவாயில்லை. அது எப்படி ஒரு குழந்தை கண்ணனுக்கு பொருத்தமாக ஒரு ''நீல நிற பசு'' வை தீட்டியிருக்கிறது. அதன் கண்ணுக்கு அப்படி தோன்றி இருக்கலாம். நீல பசு இருந்ததாகவே ஏற்றுக்கொள்வோம். ஆஹா ஒரு மணிநேரமாவது கிருஷ்ணனை குழந்தைகளும் அவர்கள் பெற்றோர்களும் நினைக்க ஒரு வழி கிடைத்ததே என்று சுந்தரம் ராமச்சந்திரனும் நானும் ஒருவவரை ஒருவர் முதுகில் தட்டிக்கொடுத்துக் கொண்டோம்.
No comments:
Post a Comment