Sunday, December 23, 2018

QUIZ AT VAALADI




         



























வாளாடியில் இதிஹாஸ  வினாடி வினா

16.12.2018   அன்று  மாலை திடீரென்று   சாயந்திரம்  நாலு மணிக்கு  அமைதியாக இருந்த அந்த அக்ரஹாரம்  ஒரு  புத்துயிர் பெற்றது. 'ஹலோ  மைக் டெஸ்டிங்  என்று ஒருவர்  கரகரவென்று  சப்தம் எழுப்ப,  சற்று நேரம் க்ரீச்  கீச்  சப்தங்கள். அப்புறம் பிளாஸ்டிக் நாற்காலிகள் நகரும் சப்தம்.  வண்ண வண்ண சேலைகள், எழுப்பிய கலகல  பேச்சு...  எங்கிருந்து இவ்வளவு பேர்  வந்து சேர்ந்து விட்டார்கள்.


ஓஹோ  இன்று அல்லவோ  வாளாடி அக்ரஹாரம்  அரங்கராஜன்  குமாரமங்கலம் இளைஞர் நற்பணி மன்றம்  அக்ராஹார லக்ஷ்மிநாராயண பெருமாள் கோவில்   வாசலில் திறந்த வெளி கூட்டத்தில்  இதிஹாஸ வினாடிவினா நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.  அதற்கு தானே  தலைமை தாங்கி  சிறப்பு உரை ஆற்ற  நான் வாளாடி  வந்திருக்கிறேன் என்ற நினைப்பு வந்தது.  எனக்கு வாளாடியிலும்  அண்டை அசல் ஊர் கோவில்களுக்கு சென்று வந்த சந்தோஷத்திலும்  உலகமே மறந்து போய் விட்டதே .

இந்த இதிஹாஸ வினாடி வினா நிகழ்ச்சி அமைப்பாளர் ஸ்ரீ  வி. சீதாராமன் எனக்கு ஏற்கனவே பரிச்சயமானவர். எங்கள் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா நிறுவனத்தில் ஒரு நிகழ்ச்சியில்  அவருடைய  இதிகாச  வினாடி வினா கேட்ட அற்புத நினைவு இன்னும் இருக்கிறது.அதுவும் அவர் வாளாடிகாரர் வேறு. மிக சிறப்பாக  ரெண்டு மணி நேரத்திற்கும் மேலாக  அற்புத நிகழ்ச்சியை நடத்தில் அக்ரஹாரத்தை  அளவற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.'சீதாராமனுக்கு  இவ்வளவு விஷயம் எப்படி தெரிந்தது என்று யோசிப்பதற்கு இடமளிக்காமல்  அவரது தந்தையர் வரதராஜ சாஸ்திரிகள்  ஏற்க்கனவே    பிரஸ்தான த்ரயம் எனப்படும் ப்ரம்ம சூத்ரம், பகவத் கீதை உபநிஷத்  எல்லாவற்றையும் நிறைய கரைத்து குடித்து விட்டிருந்தது தான்.


எனக்கு தெரியாத எத்தனை விஷயங்களை நொடிப்பொழுதில் கற்று கொடுத்தார்.  இது போன்ற உணர்வு பூர்வ உபயோகமான நிகழ்ச்சிகள் எல்லா  கிராமங்கள், நகரங்கள் எல்லா இடத்திலும் நடக்க வேண்டும். தேவையற்ற விஷயங்களில் மனம் ஈடுபட எத்தனையோ  விஷயங்கள் இருக்கிறதே.  டிவி  யூட்யூப்,  வாட்சப்  வாராந்திர  தின சஞ்சிகைகள்.  அதெல்லாம் விட  நேருக்கு நேர்  நடக்கும் இந்த நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு மிக மிக அவசியம்.  வாளாடி மக்கள் கொடுத்து வைத்தவர்கள்..

அக்ராஹாரம் தெரு முடக்கி ஞான மழை பொழிந்தது. பொழிந்தவர்  சீதாராமன். அதில் நனைந்தவர்கள்,  ஐந்து வயது முதல் என்போன்ற  80கள்  வரை எத்தனையோ பேர். எவ்வளவு ஆர்வத்தோடு  விடை அளித்தார்கள். எல்லோருக்கும்  ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா நிறுவனம் தங்களது புத்தகங்களை பரிசாக அளித்ததில் அளவு கடந்த மகிழ்ச்சி.  பிறவி எடுத்த பயன் சற்று புரிந்தது.


  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...