Sunday, April 1, 2018

VIVEKACHOODAMANI



ஆதி சங்கரரின் விவேக சூடாமணி
J.K. SIVAN
सर्ववेदान्तसिद्धान्तगोचरं तमगोचरम् । गोविन्दं परमानन्दं सद्गुरुं प्रणतोऽस्म्यहम् ॥ १ ॥

sarvavedāntasiddhāntagocaraṃ tamagocaram |
govindaṃ paramānandaṃ sadguruṃ praṇato'smyaham || 1 ||

கோவிந்தா என்கிற உன் பேருக்கு ஒரு வாழ்நாள் பூரா அர்த்தம் சொன்னாலும் நிறைவு பெறாத. பேரானந்தமே கோவிந்தா, ஸத்குருவே, எல்லா வேதங்களையும் கசக்கி பிழிந்து வடிக்கட்டினால் நீ கிடைப்பாயா? எண்ணத்துக்கும் சொல்லுக்கும் அப்பாற்பட்ட உன்னை மனத்தில் நிரப்பி துதிக்கிறேன்.

इतः को न्वस्ति मूढात्मा यस्तु स्वार्थे प्रमाद्यति ।
दुर्लभं मानुषं देहं प्राप्य तत्रापि पौरुषम् ॥ ५॥

itaḥ ko nvasti mūḍhātmā yastu svārthe pramādyati .
durlabhaṁ mānuṣaṁ dehaṁ prāpya tatrāpi pauruṣam –5

நிறைய காது பொங்கி வழிய கேட்கிறேன். படிக்கிறேன், நினைக்கிறேன். ஆனால் இன்னும் உணரவில்லை. இந்த பிறவி எனக்கு கிடைக்க நான் எத்தனை புண்யம் செயதிருக்க வேண்டும் என்று எவன் அய்யா நினைக்கிறான். மின் விசிறியில் துணியை போட்டு தொங்க நினைக்கும் முட்டாள்களே, கொஞ்சம் ஒரு கணம் யோசியுங்கள். வாழ எவ்வளவு வழி இருக்கிறது, அதை விட்டு ......?? நீ உருவாக்காததை அழிக்க உனக்கு உரிமையில்லை என்பதாவது தெரியகவேண்டாமா?

वदन्तु शास्त्राणि यजन्तु देवान् कुर्वन्तु कर्माणि भजन्तु देवता: ।
आत्मैक्यबोधेन विनापि मुक्ति: न सिध्यति ब्रह्मशतान्तरेऽपि ।।6।।

vadantu śāstrāṇi yajantu devān
kurvantu karmāṇi bhajantu devatāḥ
Atmaikyabodhena vināpi muktiḥ
na sidhyati brahmaṣatāntare api --6

எத்தனை யாகம் செய்தால் என்ன, எத்தனை நூல்கள் படித்தால் என்ன, கோவில் படிகள் நடந்து தரிசனம் செய்தால் தான் என்ன, எப்போது நமது உள்ளே இருக்கிற ஆத்மா தான் அந்த பரமாத்மா என்று புரிந்து கொள்ளாதவன் எத்தனையோ ப்ரம்மா வருஷங்கள் கடந்தாலும் (நமது ஒரு வருஷம் ப்ரம்மாவின் ஒரு நாள் .....இது போல் பல ப்ரம்மா யுகங்கள்!!!) முக்தி அடையப்போவதில்லை. ஆத்மாவை உணர்வது தான் ஆத்ம ஞானம் என்பது.

अमृतत्त्वस्य नाशास्ति वित्तेनेत्येव हि श्रुतिः । ब्रवीति कर्मणो मुक्तेरहेतुत्वं स्फुटं यतः ॥ ७॥
अतो विमुक्त्यैप्रयतेत विद्वान् सन्न्यस्तबाह्यार्थसुखस्पृहः सन्। सन्तं महान्तं समुपेत्य देशिकं तेनोपदिष्टार्थसमाहितात्मा ॥ ८॥
amR^tatvasya naashaasti vittenety eva hi shrutiH
braviiti karmaNo mukter ahetutvaM sphuTaM yataH. 7

துட்டு சேர்ப்பது தான் பிரதானம் என்று வாழும் புழுக்களே , காதற்ற ஊசியும் வாராது காண் கடை விழிக்கே கொஞ்சம் புரியட்டும். வேத சாஸ்திரங்கள், புராணங்கள் இதிகாசங்கள் நிரூபணத்தோடு புட்டு புட்டு வைக்கிறதே. செவி மடுக்க வேண்டாமா. முக்தி மோக்ஷம் எல்லாம் மணியால் (MONEY ) கிடைக்காது.

अतो विमुक्त्यै प्रयतेत विद्वान्
सन्यस्तबाह्यार्थसुखस्पृहःसन्।
सन्तं महान्तं समुपेत्य देशिकं
तेनोपदिष्टार्थसमाहितात्मा ॥८॥

ato vimuktyai prayatet vidvaan
saMnyastabaahyaarthasukhaspR^haH san
santaM mahaantaM samupetya deshikaM
tenopadishhTaarthasamaahitaatmaa. 8

ஆகவே மானுடர்காள், முக்தி தேடவேண்டுமானால், வெளியுலக ஈடுபாடுகள் ஆசைகள், எதிர்பார்ப்புகள், இன்பம் போல் தோன்றும் துன்பங்கள் அனைத்திலிருந்தும் எப்படியோ விடுபட்டு, நல்ல சத்குரு ஒருவரின் துணையோடு வழிகாட்டலோடு அதை பெறுவீர். மாயையில் உழன்று அழியும் உலக விவகார வஸ்துகளில் மனம் செலுத்தாமல், பிறவிப் பெருங்கடலை கடக்க , நல்ல ஒரு குருவை அடைந்து மோக்ஷ மார்கத்தை அறிந்து பிரழாமல் அதை கடைப் பிடித்து வாழ்வீர். நல்லதும் கெட்டதும் நம் கையிலே தானே.

चित्तस्य शुद्धये कर्म न तु वस्तूपलब्धये ।
वस्तुसिद्धिर्विचारेण न किञ्चित्कर्मकोटिभिः ॥ ११॥\

chittasya shuddhaye karma na tu vastuupalabdhaye
vastusiddhir vichaareNa na kiMchit karmakoTibhiH. 11



நமது செயல்கள் யாவுமே, மனதை தூய்மைப் படுத்துபவையாக தான் இருக்கவேண்டும். எதையோ தெரிந்து கொள்ள, புரிந்துகொள்ள பலன் எதிர்பார்த்ததாகவோ இல்லை. எதையும் பகுத்துணர்ந்து எதைக் கொள்ள வேண்டுமோ அதை மட்டுமே புரிய வேண்டும். இதற்கு சிறந்த சக்திவாய்ந்த மனக் கட்டுப்பாடு வேண்டும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...