Monday, April 23, 2018

ADHI SANKARA


''பவானித்வம்” 2 - J.K. SIVAN

BHAVANI ASHTAKAM BY ADHI SANKARA

ஆதி சங்கரர் தன்னை எப்படியெல்லாம் தாழ்த்தி சொல்லிக்கொள்கிறார் என்றால் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்று புரிகிறதா?. மிக அழகான, பக்தி ரசம் பொங்கும் இந்த எட்டு ஸ்லோகங்கள் பவானி அஷ்டகம் என்று நமக்கு கிடைத்திருப்பவை. பொக்கிஷம் என்று சொல்வதில் பிழை உண்டா? இன்று மற்றுமொரு மூன்று ஸ்லோகங்களை பார்ப்போம். நாளை நிறைவு செய்கிறேன்.

न जानामि पुण्यं न जानामि तीर्थ
न जानामि मुक्तिं लयं वा कदाचित् ।
न जानामि भक्तिं व्रतं वापि मातर्गतिस्त्वं
गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि ॥४॥

ந ஜானாமி புண்யம் ந ஜானாமி தீர்த்த
ந ஜானாமி முக்திம் லயம் வா கதாசித் |
ந ஜானாமி பக்திம் வ்ரதம் வாபி மாதர்கதிஸ்தவம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானீ ||4||

Na Jaanaami Punnyam Na Jaanaami Tiirtha
Na Jaanaami Muktim Layam Vaa Kadaacit |
Na Jaanaami Bhaktim Vratam Vaapi Maatar-Gatis-Tvam
Gatis-Tvam Gatis-Tvam Tvam-Ekaa Bhavaani ||4||


I have no knowledge of any deed of virtue, have not proceeded on pilgrimage anywhere, have no knowledge of Moksha or Mukthi, and cannot concentrate on any holy topic or understand it. I have not been a devotee and am not a religious person and holy but you, my divine Mother, gracious Bhavani, I seek refuge in you.


அம்மா, பராசக்தி, பவானி அம்பா, உன்னையன்றி வேறே யாரம்மா எனக்கு ஆதரவு, எனக்கு என்ன தெரியும், புண்யத்தை கண்டேனா, திவ்ய க்ஷேத்ர யாத்திரை சென்றேனா, மோக்ஷம், கைலாசம், வைகுண்டம் ஏதாவது தெரியுமா, எதையாவது படித்தேனா, பாராயணம் செய்தெனா, எந்த கோவிலுக்காவது சென்றேனா, பக்தி கிலோ என்ன விலை என்று கேட்பவன். இதெல்லாம் என் குறை என்று தெரிந்துகொண்டேன் அது ஒன்றே என் நிறை. உன் பாதமே கதி என்று சரணடைந்து விட்டேன் தாயே. என்னைக் காத்தருள்.


कुकर्मी कुसङ्गी कुबुद्धिः कुदासः
कुलाचारहीनः कदाचारलीनः ।
कुदृष्टिः कुवाक्यप्रबन्धः सदाहं
गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि ॥५॥

குகர்மீ குஸங்கீ குபுத்தி: குதாஸ:
குலாசாரஹீந: கதாசார லீன: |
குத்ருஷ்டி: குவாக்ய ப்ரபந்த: ஸதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானீ ||5||

Ku-Karmii Ku-Sanggii Ku-Buddhih Kudaasah
Kula-[Aa]caara-Hiinah Kadaacaara-Liinah |
Ku-Drssttih Ku-Vaakya-Prabandhah Sada-[A]ham
Gatis-Tvam Gatis-Tvam Tvam-Ekaa Bhavaani ||5||

I have been a bad man, did bad deeds a lot in company with bad people, always thought bad, never been honest, failed in doing my duties fully engaged in bad thoughts and deeds only, every crooked thought entered my mind on seeing anything, I used only bad language and yet you are my Goddess, who alone can save me. Please show mercy on me my Goddess Bhavanima.

உலகத்திலேயே மோசமான கடைநிலை ஜீவன் ஒருவனைக்காண எங்கும் செல்லவேண்டாம். இதோ எதிரிலேயே நிற்கிறேனே . எவ்வளவு பாதக செயல்கள், தீய எண்ணங்கள், கெட்ட சகவாசம், தவறான செயல்கள் புரிகின்றேன். என் வாயில் வரும் வார்த்தைகளைக் காட்டிலும் மோசமான மொழி, சொல், இன்னும் பிறக்கவில்லையே. இப்படிப்பட்ட நான் உன்னைக் கண்டு கொண்டேன். என் தாயே. நீயே அடைக்கலம்.
என்னைக்கு காத்தருள் தாயே, ஓ அம்பா பவானி மாதா. உன் பாதாரவிந்தங்களே சரணம்.

प्रजेशं रमेशं महेशं सुरेशं
दिनेशं निशीथेश्वरं वा कदाचित् ।
न जानामि चान्यत् सदाहं शरण्ये
गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि ॥६॥

ப்ரஜேசம் ரமேசம் மஹேசம் ஸூரேசம்
திநேஷம் நிஸிதேஸ்வரம் வா கதாசித் |
ந ஜானாமி சாந்யத் ஸதாஹம் சரண்யே
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானீ ||6||

Who is Brahmaa or Rama, Vishnu or Siva, or the astral deities, the devas, the sun god or the moon god. I don't know any of them. I have no knowledge of any God but I know you and have come to you only as my last resort, my Goddess, and there is none but you to me, the divine Mathaji O Bhavani ma

இதோ உன் முன்னே நிற்கிறேன் என்னை அறிமுகம் செய்து கொள்ளவேண்டாமா? ஒரு கெடுகெட்ட பிறவி, இந்திரன், சந்திரன், ராமன், சோமன், ஹரனோ, ஹரியோ தேவர்களோ ரிஷிகளோ, ஒருவரையும் எனக்கு தெரியாதே. ஆனால் எப்படியோ நான் செய்த ஒரே ஒரு நல்ல காரியம், உன்னைத் தெரிந்து கொண்டது. அதுவே போதும் என் தாயே, என்னை நல்வழிப்படுத்து. உன் சரணங்களை கெட்டியாக பிடித்துக் கொண்டுவிட்டேன். என்னைக் காப்பாற்றுவது உன் கடமையாகி விட்டதல்லவா?. அம்மா தாயே, பவானி, வேறே யார் எனக்கு துணை?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...