ரபீந்திர நாத் தாகூர் -- J.K. SIVAN
இது அவரே வங்காள மொழியில் எழுதி தானே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து. ஆகவே இடைச்செருகல் இருக்க வாய்ப்பே இல்லை. என் தமிழ் விளக்கம் கொஞ்சம் எல்லை மீறி இருக்கலாம். குறுக்கும் நெடுக்கும் ஓடலாம். ஆனால் பாதையை விட்டு விலகிச் செல்லும் வழக்கம் எனக்கு இல்லை.
When thou commandest me to sing it seems that my heart would break with pride; and I look to thy face, and tears come to my eyes.
All that is harsh and dissonant in my life melts into one sweet harmony---and my adoration spreads wings like a glad bird on its flight across the sea.
I know thou takest pleasure in my singing. I know that only as a singer I come before thy presence.
I touch by the edge of the far-spreading wing of my song thy feet which I could never aspire to reach.
Drunk with the joy of singing I forget myself and call thee friend who art my lord.
'' நீ பாடு என்று சொல்லி விட்டாய். நானா பாடவேண்டுமா?? என்ன ஒரு பெருமிதம் எனக்கு. எனக்கு எங்கோ ஆகாசத்தில் சஞ்சரிப்பதை போல் இருக்கிறதே. கண்களில் ஆனந்த கண்ணீர். முகம் நூறு சூரியனாகி விட்டதே.எத்தனை சொல்லொணா கஷ்டங்கள் ஏமாற்றங்கள் பார்த்து விட்டேன். எல்லாம் உருகி ஒன்றாய் சேர்ந்து விட்டது. அது எப்படி ஒரு இனிய கொழுக்கட்டையாகி விட்டது. நான் பெரிய சிறகடித்து பறக்கும் பறவையா?இவ்வளவு பெரிய கடலை சுலபத்தில் சந்தோஷமாக ரெக்கை அடித்து தாண்டிவிடுவேனே. ஏன் தெரியுமா இதெல்லாம் சொல்கிறேன்? உனக்கு என் பாட்டு பிடிக்கும். உன் எதிரே நானும் ஒரு பாடகன். பெரிய இறகோ சிறகோ எதுவாயினும் விரித்த அதன் நுனியால் உன் திருப்பாதங்களை தொடுவேன்.. ஆகா அவ்வளவு எளிதில் தொடமுடியுமா அதை! நான் பாடப்போகிறேன் என்ற ஆனந்தம் தலைக்கேறி விட்டது. என்னை மறந்தேன் அடே கிருஷ்ணா என் தோழா என்று உரிமையோடு உன்னை அணுக மனம் விரிந்து விட்டது என் தெய்வமே.
I know not how thou singest, my master! I ever listen in silent amazement.
The light of thy music illumines the world. The life breath of thy music runs from sky to sky. The holy stream of thy music breaks through all stony obstacles and rushes on.
My heart longs to join in thy song, but vainly struggles for a voice. I would speak, but speech breaks not into song, and I cry out baffled. Ah, thou hast made my heart captive in the endless meshes of thy music, my master!
நான் பாடுவது இருக்கட்டும். உன்னால் எப்படி இவ்வளவு அதிசயமாக அபூர்வமாக ஆனந்தமாக பாட இயற்கையாகவே முடிகிறது. அதை கேட்டு அசந்து சிலையாகி விட்டேன். நிச்சயமாக உன் கானத்தில் ஒரு ஒளி இருக்கிறது அது தான் இந்த பிரபஞ்சத்தையே பொன்மயமாக்குகிறது. உன் கானத்தின் உள் மூச்சில் உயிர் சக்தி இருக்கிறதே அது ஆகாயம், அதற்கு மேல் இன்னொரு ஆகாயம், இன்னும் மேலே இன்னுமே மேலே....எல்லையின்றி சொல்லமுடியாமல் பரவிக்கொண்டே இருக்கிறது. அந்த கான வெள்ளத்தின் முன் எதிற்பட்ட தடங்கல் எதுவெல்லாமோ தூள் தூளாக சுக்கு நூறாக சிதறுகிறது. என்ன சக்தி என்ன வேகம் ! என் இதயம் விம்முகிறது. உன் கானத்தோடு இணைய துடிக்கிறது. மயில் பாட ஆசைப்படலாமா. குரல் இல்லையே! பேச்சு மட்டும் ஏதோ வருகிறது. பேச்சு பாட்டாகுமா? அழுகை அழுகையாக வருகிறது. என்னை ஏன் இந்த இக்கட்டில் விட்டாய் கிருஷ்ணா.? ஏன் என்னை உன் கானாம்ருதத்தில் சிக்குண்டு அடிமையாக்கி விட்டாய் என் எஜமானே, நான் உன் அடிமையல்லவா?
Life of my life, I shall ever try to keep my body pure, knowing that thy living touch is upon all my limbs.
I shall ever try to keep all untruths out from my thoughts, knowing that thou art that truth which has kindled the light of reason in my mind.
I shall ever try to drive all evils away from my heart and keep my love in flower, knowing that thou hast thy seat in the inmost shrine of my heart.
And it shall be my endeavour to reveal thee in my actions, knowing it is thy power gives me strength to act.
நான் முடிவெடுத்து விட்டேன் கிருஷ்ணா. என் உயிரின் உயிரே, என் உடலை தேகத்தை பரிசுத்தமாக வைத்துக் கொள்வேன். ஆமாம் உன் விறல் படும் அங்கமல்லவா இது. என் எண்ணங்களில் உண்மையல்லாததை மொத்தமாக மூட்டை கட்டி வெளியே எறிவேன். நீ தான் அந்த சத்யம், உண்மை, என் அறிவை இயக்குபவன். என் மனத்தை செலுத்துபவன். என் இதயத்தில் இருந்து தீயவை எல்லாம் விரட்டப்படும். என் அன்பு மலரும். ஆமாமப்பா, அது உன் ஆசனம் நீ அமருமிடம். இதய பீடம். உள்ளமெனும் கோவில். என் ஒவ்வொரு செயலிலும் எண்ணத்திலும் கிருஷ்ணா நீ தான் வெளிப்படுவாய். அந்த சக்தியை கொடுத்ததே நீ தானே கிருஷ்ணா!
I ask for a moment's indulgence to sit by thy side. The works that I have in hand I will finish afterwards.
Away from the sight of thy face my heart knows no rest nor respite, and my work becomes an endless toil in a shoreless sea of toil.
Today the summer has come at my window with its sighs and murmurs; and the bees are plying their minstrelsy at the court of the flowering grove.
Now it is time to sit quite, face to face with thee, and to sing dedication of live in this silent and overflowing leisure.
நான் உன் பக்கம் ஒட்டிக்கொண்டு உட்காரவேண்டும். நான் செய்ய வேண்டிய வேலைகளை பற்றி எனக்கு ஒரு கவலையும் மில்லை. அதெல்லாம் அப்பறம். உன் முகம் காண முடியாத பொது என் மனம், இதயம் படும் பாடு உனக்கு தெரியாது. அப்பப்பா, நான் அப்போது ஈடுபடும் எந்த செயலும் கரையேற்ற கடலாக நீள்கிறது. ஆயாசம் தருகிறது. வெயில் காலம் சுள்ளென்று சூரிய வெப்பத்தை கோடி காட்டுகிறது. ஜன்னலை திறந்தால் அனல் உள்ளே குட் மார்னிங் சொல்லிக்கொண்டு நுழைகிறது. பனி விலகுகிறது மறைகிறது. வெப்பம் ஆரம்பத்தில் சுகம் தருகிறது. பின்னால் சூடு ஏறும். தோட்டத்தை பார்க்கிறேன். ஆஹா எத்தனை வண்டுகள் ரோய்ங் என்று ஏதோ ஸ்வரத்தில் சுற்றி சுற்றி வந்து மலர்களுக்கு பாடிக்காட்டுகிறது. நான் இதோ அமைதியாக அமர்ந்து விட்டேன். உன் முகம் தெரிகிறதே. எதிரும் புதிருமாக நாம் கண் கொட்டாமல். அமைதியான சூழ்நிலை. நிறைய நேரம் இருக்கிறது. பாடவேண்டியது தானே?

No comments:
Post a Comment