Friday, April 27, 2018

SUBASHITHAM



நீதி சதகம். J.K. SIVAN சுபாஷிதம். ஆள்பவனுக்கு அறிவுரை பர்த்ருஹரி ஒரு திருவோடு ஏந்தி சுற்றும் பரதேசி, சந்நியாசி மட்டும் அல்ல. ஒரு பெரிய சாம்ராஜ்ய மஹாராஜாவாக இருந்தவன். ஞானவான் . அவன் முற்றும் துறந்த துறவியாகியது அவனது வைராக்கியத்தை காட்டுகிறது. அவன் தான் வைராக்கியத்தை பற்றி பேச தகுதி கொண்டவன். राजन् दुधुक्षसि यदि क्षितिधेनुमेनां तेनाद्यवत्समिव लोकममुं पुषाण । तस्मिंश्च सम्यगनिशं परिपुष्यमाणे नाना फलं फलति कल्पलतेव भूमिः ॥ Raajan dudhukshasi yadi kshitidhenumenaam, Tenaadya vatsamiva lokamamum pushaana Tasmishcha samyaganisham paripushyamaane Naanaaphalam phalati kalpalateva bhoomih 1.44 அடே மஹாராஜா, நீ ஒன்றை முக்கியமாக புரிந்து கொள் . இந்த பூமி, அது தான், நீ ஆளும் ராஜ்ஜியம், இருக்கிறதே, அது ஒரு பசு மாதிரி. அந்த பசுவிடம் நன்றாக நிறைய பால் கறக்கவேண்டும் என்றால் முதலில் அதை பேப்பர், போஸ்டர் திங்க விடக்கூடாது. நிறைய புல், கீரை, தீவனங்கள் போடவேண்டும்.அதன் கன்றுக்குட்டியை வைக்கோல் அடைத்து நாலு குச்சியில் நடக்கக்கூடாது. கொழு கொழு வென்று கிருஷ்ணன் கால பிருந்தாவன கன்றுக்குட்டி போல் வளர்க்க வேண்டும். அதுவும் ஒரு குழந்தை தானே. அதன் அழகை விளையாட்டை பார்த்து தாய்ப்பசு நிறைய பால் தரும். நீயும் அதுபோலவே உன் நாடு பிரஜைகளை க்ஷேமமாக அவர்கள் தேவைகளை அறிந்து பூர்த்தி செயது அவர்கள் சந்தோஷமாக வாழ வழி வகுக்க வேண்டும். தாய்ப்பசு போல் ;உன் ராஜ்யம் செழித்து ஓங்கும். அனைத்து பிரஜைகளும் இப்போது போல் பல அல்ப கட்சிகள் போல் பிரியாமல் எல்லோரும் ஒற்றுமையாக உன்னை போற்றி பணிந்து ஒத்துழைப்பார்கள். நாடு வளரும். சுபிக்ஷம் எங்கும் நிறையும். आज्ञा कीर्तिः पालनं ब्राह्मणानां दानं भोगो मित्रसंरक्षणम् च । येषामेते षड्गुणाः न प्रवृत्ता: कोऽर्थस्तेषां पार्थिवोपाश्रयेण ॥ Aajnaa keertih paalanam brahmanaanaam Daanam bhogo mitrasamrakshanam cha Yeshaamete shadgunaah na pravruttaah Ko’rthasteshaam paarthivopaashrayena 1.47 ஒரு ராஜாவுக்கு, பக்க பலமாக, உறுதுணையாக இருப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? பதவியில் அதிகாரம், புகழ், ஏழைகள், பிராமணர்களை ரக்ஷிப்பது, தான தர்மம் செல்வத்தை சரியானபடி செலவழித்து நல்லது செய்வது, ஜனங்களை, நண்பர்களை காப்பது இதெல்லாம் செய்யவேண்டும். அப்படி இல்லை என்றால், தனக்கு, தனது குடும்பத்துக்கு, நெருங்கியவர்களை மட்டும் உதவுபவனுக்கு பொது சேவை செய்ய என்ன அருகதை இருக்கிறது. அவனை பொது சேவையில் வைப்பது தான் பெருந் தவறு. இதை நானா எழுதுகிறேன். ராஜா பர்த்ருஹரி புட்டு புட்டு பல நூறு வருஷங்களுக்கு முன்னாலேயே தமிழ் நாட்டுக்கு வருவதற்கு முன்பே எழுதியிருக்கிறார் பாருங்கள். रे रे चातक! सावधानमनसा मित्र क्षणं श्रूयतां अंभोदा बहवो हि सन्ति गगने सर्वेऽपि नैतादृशाः । केचिद्वृष्टिभिरार्द्रयन्ति वसुधां गर्जन्ति केचित् वृथा यं यं पश्यसि तस्य तस्य पुरतो मा ब्रूहि दीनं वच: ॥ Re re chataka saavadhaanamanasaa mitra kshanam shrooyataam Ambhodaa bahavo hi santi gagane sarve’pi naitaadrushaah Kechit vrishtibhiraardrayanti vasudhaam garjanti kechit vruthaa Yam yam pashyasi tasya tasya purato maa broohi deenam vachah 1.50 ஓ, சாதக பக்ஷியே, நான் சொல்வதை கேட்டுவிட்டு பற. மேலே மேகங்கள் இடையே பறக்கிறாயே. நீ பார்ப்பவை எல்லாமே ஒரே மாதிரி மேகங்கள் இல்லை. சிலது தான் அவற்றில் மழையை சூல் கொண்டவை. அவற்றால் தான் பூமி நனையும். மற்றது வெத்து வேட்டு . டமால் டுமீல் என்று இடி இடித்து விட்டு காணாமல் போகும். ஒரு சொட்டு மழைத் தண்ணீர் கூட வெளியே வராது. ஒவ்வொரு மேகத்திடமும் ''ஒரு சொட்டு மழை நீர் தா '' என்று கெஞ்சாதே. நல்ல ராஜா தான் குடிமக்களை காப்பான். மழை மேகம் போல். மற்றது எல்லாம் எலெக்ஷன் ப்ராமிஸ். अकरुणत्वमकारणविग्रहः परधने परयोषिति च स्पृहा । स्वजबन्धुजनेष्वसहिष्णुता प्रकृतिसिद्धमिदं हि दुरात्मनाम् ॥ Akarunatwamakaaranavigrahah paradhane parayoshiti cha sprihaa Swajana bandhujaneshwasahishnutaa Prakritisiddhamidam hi duraatmanaam 1.51 எல்லாறையும் நன்றாக அலசு. கவனி. பாதிக்கு மேல் கொடூரம், சண்டைக்கோழிகள், எதற்கெடுத்தாலும் ஒரு விதண்டா வாதம், பிறர் சொத்துக்கு செல்வத்துக்கு, ஆசை, பேராசை, பிறர் நன்றாக இருந்தால் பொறாமை, தூக்கமின்மை. இப்படிப்பட்ட கெடு மதிகொண்டவர்கள் குணம் இப்படித்தான் இருக்கும். அவர்கள் நடவடிக்கை பேச்சு நடத்தை இதிலிருந்தே அவர்களை நீ புரிந்து கொள்ளலாம். दुर्जनः परिहर्तव्यो विद्ययाऽलंकृतोऽपि सन् । मणिना भूषितः सर्पः किमसौ न भयंकरः ॥ Durjanah parihartavyo vidyayaa’lamkrito’pi san Maninaa bhooshitah sarpah kimasau na bhayamkarah? 1.52 ரொம்ப படித்து, பட்டங்கள் வாங்கியவன், தலை கர்வம் பிடித்தவனாக இருந்து என்ன பயன். தீயவனின் படிப்பு அங்கே பயனற்றதாக போகிறது. கொடிய விஷ நாகத்தில் முடியில் நாக மாணிக்கம் இருந்து யாருக்கு பயன். கிட்டே போகமுடியுமா? அது போல தான். தீயவர் நட்பு நெருக்கம் கூடவே கூடாது. ராஜா பர்த்ருஹரீ ரொம்ப விவேகமான துறவி ராஜா. நிறைய கேட்போம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...