சோகம் தந்த ராகம் J.K. SIVAN
கர்மவினைப் பிடி
பூந்தானத்தின் ஞானப்பான எனும் மலையாள அற்புத காவியத்தை அவ்வப்போது ரசித்து மகிழ்கிறோமே. அவற்றையெல்லாம் முடிந்தபோது ஒரு தொகுப்பாக சேமித்து வைத்து நேரம் கிடைத்த போதெல்லாம் படித்து அதன் தத்துவார்த்தத்தை ரசிக்கவேண்டும். நான் அப்படி தான் செய்கிறேன். எந்த மொழியானாலும் அற்புதங்களை நாம் தவற விடக்கூடாது. செல்வம் இதை நமக்கு வழங்காது. சிந்தையை மகிழ்விக்க காந்தி பட காகித கத்தை உதவாது. அதிக பக்ஷம் உடல் சுகத்துக்கு தான் அது உதவலாம். அதை அதிகம் சேமித்து வைத்தால் அதற்கும் ஆபத்து. சேமித்தவனுக்கும் உபத்திரவம் பல திசைகளிலிருந்து வந்து சேரும்.
ഭക്തന്മാര്ക്കും മുമുക്ഷുജനങ്ങള്ക്കും
സക്തരായ വിഷയിജനങ്ങള്ക്കും
ഇച്ഛിച്ചീടുന്നതൊക്കെക്കൊടുത്തീടും
വിശ്വമാതാവു ഭൂമി ശിവ ശിവ!
Bakthanmarkkum mumukshu janangalkkum,
Saktharaya vishayee janangalkkum,
Ichicheedunnathokke kodutheedum,
Viswa mathavu bhoomi siva! Siva!
ஹே பரமேஸ்வரா, நீ இந்த விஸ்வத்துக்கே, இந்த பிரபஞ்சத்துக்கு மாதா. தாய்போன்றவன். தாயுமானவன். மாத்ருபூதேஸ்வரன். உன்னை நாடிவரும் பக்தர்களுக்கும் இந்த உலகத்தையே துறந்து மோக்ஷம் நாடும் ஞானிகளுக்கும் அவரவர் விரும்புவதை, வேண்டுவதை, அது உலக இச்சையை தீர்க்கும் பொருள் வஸ்துவாகட்டும், ஞான மார்க்க தத்வ உபதேசமாகட்டும் எதையும் தந்து மகிழிவிப்பவன். சிவ சிவா உன் ஐந்தெழுத்தை ஓம் நமசிவாய என்று வாய் மணக்க கூறுகிறேன்.
കര്മ്മങ്ങള്ക്ക് വിളഭൂമിയകിയ
ജന്മദേശമീഭൂമിയറിഞ്ഞാലും
കര്മ്മനാശം വരുത്തേണമെങ്കിലും
ചെമ്മേ മറ്റെങ്ങും സാധിയാ നിര്ണ്ണയം
Karmangalkku vilabhoomiyaakiya,
Janama desamee bhoomi yennarinjalum,
Karma nasam varuthenam engilum,
Chemme mattengum sadhiya nirnayam.
இது கர்ம பூமி. இதை விட்டால் வேறே இடம் கிடையாது.பண்ணின பாவங்களை தொலைக்க நல்ல விதைகள் இங்கே தான் பயிரிட வழி உண்டு. பாவம் அகல நிவர்த்திகளை இங்கே தான் பண்ண முடியும். சந்தர்ப்பத்தை நழுவ விடாதே. அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது என்று ஒரு கிழவி முன்பே சொல்லிவிட்டு போனது ஞாபகம் இருக்கட்டும்.
അത്രമുഖ്യമായുള്ളോരു ഭാരതം
ഇപ്രദേശമെന്നെല്ലാരുമോര്ക്കണം.
Athra mukhya mayulloru Bharatha
Ipradesamennellaaru morkkanam.
இப்படிப்பட்ட ஒரு முக்யமான, வேறெங்கும் காணமுடியாத, பாரததேசத்தை விட்டு வேறு எங்கும் நமது கர்மத்தை தொலைக்க வழியே இல்லை. ஒவ்வொருவனும் அவனது கர்ம பலனை அனுபவிக்காமல் தப்பவே முடியாதே. இந்த நாலு யுகத்தில் கலியுகம் ஒன்றே சிறந்ததாக அதனால் தான் விளங்குகிறது. இதில் தான் கர்மாவை நாசம் செய்து கர்மாவுக்கேற்ற பலனை அனுபவித்து அதை முடித்து சத் கர்ம பலனாக மோக்ஷமடைய இந்த பாரத தேசத்தில் வழி வகுத்திருக்கிறான்'' என்கிறார் பூந்தான நம்பூதிரி.
അത്രമുഖ്യമായുള്ളോരു ഭാരതം
ഇപ്രദേശമെന്നെല്ലാരുമോര്ക്ക
പൊന്നിന് ചങ്ങലയൊന്നിപ്പറഞ്ഞതി
ലൊന്നിരുമ്പുകൊണ്ടെന്നത്രെ ഭേദങ്ങള്.
[Ponnin changala onnee paranjadhil,
Onnil irumbu kondathre bedangal]
கட்டுப்பட்டவன் இதில் கட்டுப்பட்டால் என்ன. தங்கச் சங்கிலியால் கட்டப்பட்டதால் அவன் சுதந்திரமானவனா. உடம்பெங்கும் தூக்க முடியாமல் தங்கத்தை சுமப்பது ஒரு வித சிறை தண்டனை தான். இந்த காலத்தில் இந்த சங்கிலியினால் உயிருக்கும் ஆபத்து தான். இரும்புச் சங்கிலி தரும் துன்பத்தை விட தங்கச்சங்கிலி தருகிறது. கட்டுப்படுவது என்று பேசும்போது ரெண்டு சங்கிலியும் ஒன்று தான்.
രണ്ടിനാലുമെടുത്തു പണിചെയ്ത
ചങ്ങലയല്ലോ മിശ്രമാം കര്മ്മവും.
[Randinalumeduthu pani cheytha,
Changala yallo mishramum karmavum.]
ஒன்று புரிந்துகொள்கிறாயா? கர்மா சங்கிலி தொடர் போல் நம்மை பின் தொடர்கிறதே. அது ஜீவன் ஆத்மா ரெண்டையுமேவா பாதிக்கிறது. இப்படி கேட்போருக்கு ஒரு விஷயம். ரெண்டுமாக சேர்ந்து தான் இருக்கிறதே தவிர ஆத்மா எந்த காலத்தில் இதில் சம்பந்தப்பட்டு பாதிக்கப்படாது. உடம்பும் ஜீவனும் சேர்ந்து ஆடுகிற நாடகத்தின் காட்சிகள் தான் கர்மா. கர்ம வினை எனும் சங்கிலி நமது ஜீவன் ஆத்மாவை உலக பந்தங்கள், வேட்கையில், விருப்பு வெறுப்பில் ஈடுபடுத்தும்போது தான் அதன் துன்பம் புரியும்.
ബ്രഹ്മവാദിയായ് ഈച്ചയെറുമ്പോളം
കര്മ്മബദ്ധന്മാരെന്നതറിഞ്ഞാലും
[Brahma vadiyayi chayirumbolum,
Karmabadhanmar ennatharinjalum]
அப்பனே, நீ நினைக்கலாம். நாம் தான் சாஸ்வதமான சத்தியத்தை தேடும் வழியில் செல்கிறோமே நம்மை எதுவும் நெருங்காது என நினைப்பவனே உனது கர்மாவின் பலனை நீ அனுபவிக்காமல் ஓட முடியாது.
ഭുവനങ്ങളെ സൃഷ്ട്ടിക്കയെന്നതു
ഭുവനാന്ത്യപ്രളയം കഴിവോളം
കര്മ്മപാശത്തെ ലംഘിക്കയെന്നതു
ബ്രഹ്മാവിന്നുമെളുതല്ല നിര്ണ്ണയം
Bhuvanangale srishtikka ennathu,
Bhuvananda pralayam kazhivolam,
Karma pasathe langikkunnathu,
Brahmavinnum eluthalla nirnayam,
அப்பப்பா , இந்த உலக சோதனைகள் வாதனைகள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கும். வெவ்வேறு ரூபத்தில், அளவில், பெயரில் வந்து கொண்டே இருக்கும். மஹாப்ரளயம் வந்து அனைத்தும் அழிந்து மீண்டும் ஒரு புது யுகம் தோன்றும் வரை என்று கூட சொல்லலாம். நீயோ நானோ மட்டுமல்ல தம்பி, ஆனானப்பட்ட அந்த ப்ரம்ம தேவனே கூட கர்மவினைப் பிடியிலிருந்து தப்புவது சுலபமல்ல.
No comments:
Post a Comment