ஒரு இலங்கை தேச தமிழ் தம்பதி நண்பர்கள்
நேற்று தமிழ் வருஷம் விளம்பி பிறந்து எல்லோரும் இனிப்பாக சாப்பிட்டு வரவேற்றோம். சில புத்தகங்கள் படித்தேன். உங்களுக்கு ஆதி சங்கரரின் ''மாத்ரு பஞ்சகம்'' அம்மா பாச ஐந்து ஸ்லோகங்களை பற்றி சொன்னேன். ஒரு அற்புத சம்பவம் ஒன்றும் நடந்தது. புது வருஷபரிசாக அதை நினைவு கூர்கிறேன்.
இலங்கையில் சில சிவஸ்தலங்களை பற்றி ரெண்டு மூன்று நாட்களுக்கு முன்பு எழுதினேன். அங்கேயிருந்து ஒரு சிவகுமார் என்னை பறந்து வந்து நங்கநல்லூர் கன்னிகா காலனியில் சந்திப்பார் என்று கனவிலும் நினைக்கவில்லை.
திரு சிவகுமார் ராமபத்ரா கும்பகோணத்துக்காரர். ரெண்டு மூன்று தலைமுறையாக இலங்கையில் வெள்ளைக்காரர்கள் காலத்தில் குடியேறி அங்கேயே வாசம். சிவகுமார் சிங்கள மொழி தாய் பாஷையாக கொண்டாலும் ரத்தத்தில் உளறி தமிழை மறக்கவில்லை, படிக்கிறார் பேசுகிறார். அவரது மனைவியும் அந்த தேசத்திலேயே பிறந்த ஒரு பெண்மணி. தமிழ் நன்றாக பேசுகிறார். என்னுடைய முகநூல் நண்பர்கள் உங்களில் அவர்களும் உண்டு என்பதால் சென்னை வரும் ஒரு சந்தர்ப்பத்தில் என்னை சந்திக்க முடிந்தது எனது அதிர்ஷ்டம் என்பேன்.
நிறைய புத்தகங்கள் தந்தேன். எனக்கு ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா சங்க இலவச நூல் வெளியீடுகளை நன்கொடை கொடுத்தார். மிகவும் சந்தோஷமாக சில மணிநேரங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நான் கம்ப்யூட்டரில் ''மாத்ரு பஞ்சகம் '' 2ம்பகுதியாக மீதி நான்கு ஸ்லோகங்களை எழுதிக்கொண்டிருந்தேன். அவற்றை படித்துக் காட்டினேன். இன்று அது முகநூலில் வாட்ஸாப்ப் பில் வெளியிட்டேன். அதைப் பார்த்துவிட்டு இப்போது
அவர் எழுதிய வாசகம் எனக்கு புத்தாண்டு பரிசு: அவர்களுடன் எடுத்துக்கொண்ட ஞாபகார்த்த புகைப்படம் இத்துடன் இணைத்திருக்கிறேன்.
நண்பர்களே எவ்வளவு பேரை நான் சந்திக்கமுடியுமோ அது எனக்கு நீங்கள் தரும் ஊக்கம். அதைவிட 80ல் எனக்கு வேறெதுவும் மகிழ்ச்சி தருமா என்று நீங்களே யோசியுங்கள்.
No comments:
Post a Comment