விதுர நீதி 2 J.K. SIVAN
மஹா நீதிமான், ஞானவான் விதுரர் திருதராஷ்டிரனுக்கு அறிவுரை செயகிறார். அது திருதராஷ்டிரனுக்கு பயன்படவில்லை என்பதை நான் மஹாபாரதத்தில் அறிவோம். நமக்காவது பயன்படட்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன். நிறைய திருதராஷ்ட்ரர்கள் நம்மில் இருக்கிறார்களே.
निश्चित्वा यः प्रक्रमते नान्तर्वसति कर्मणः ।
अवन्ध्यकालो वश्यात्मा स वै पण्डित उच्यते ॥
Nishchitwaa yah prakramate naantarvasati karmanah
Avandhyakaalo vashyaatmaa sa vai pandita uchyate
கருமமே கண்ணாயினார் என்று ஒரு அருமையான சொல் தமிழில் எனக்கு ரொம்ப பிடிக்கும். எவன் ஒருவன் தான் எடுத்த காரியத்தை செவ்வனே முடிக்காமல் தூங்கமாட்டானோ, இளைப்பாற மாட்டானோ, நேரத்தை வீணடிக்கமாட்டானோ அவன் தான் திட சித்தம் கொண்டவன். பாரதி சொன்ன மனதில் உறுதி வேண்டும் இது தான்.
न हृष्यत्यात्मसम्माने नावमानेन तप्यते
गांगो ह्रद इवाक्षोभ्यो यः स पण्डित उच्यते
Na hrishyatyaatmasammaane naavamaanena tapyate
Gaango hrada ivaakshobhyo yah sah pandita uchyate
எவன் உணர்ச்சைகளை வெளிக்காட்டமாட்டானோ, எவன் பெருமை சிறுமைகளை சமமாக பாவிக்கிறானோ, எந்த நிலையிலும் களங்காதவனோ, அவன் தான் புத்திசாலி. அறிஞன்.
போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும், போகட்டும் கண்ணனுக்கே... சமாச்சாரம்.
अर्थं महान्तमासाद्य विद्यामैश्वर्यमेव वा ।
विचरत्यसमुन्नद्धो यः स पण्डित उच्यते ॥
Artham mahaantamaasaadya vidyaamaishwaryameva vaa
Vicharatyasamunnaddho yah sah pandita uchyate
ஊரிலே பெரிய பணக்காரன் என்றிருந்தாலும், எத்தனையோ பேருக்கு எஜமானராக இருப்பவர் என்றிருந்தாலும் ''இவரா, சாதாரண தோட்டக்காரன் மாதிரி இருக்கிறாரே'' என்று சொல்லும்படி எளிமையாக, அமைதியாக இருப்பவன், தனது வேலையை தொடர்ந்து தானே செய்பவன், தான் அறிவாளி, புத்திசாலி.
अमित्रं कुरुते मित्रं मित्रं द्वेष्टि हिनस्ति च
कर्मचारभते दुष्टं तमाहुर्मूढचेतसं ॥।
Amitram kurute mitram mitram dweshti hinasti cha
Karma chaarabhate dushtam tamaahurmooddha chetasam
எதை தொட்டாலும் தப்பாகவே செய்பவர் சிலர் உண்டு. எதிரியை நண்பனாகக் கொள்வான். நல்ல நண்பனை கொன்று விடுவான். பிரகிருதி என்று சொல்வோமே சிலரை அவர்கள் தான் இவர்கள்.
सम्सारयति कृत्यानि सर्वत्र विचिकित्सते।
चिरम् करोति क्षिप्रार्थे स मूढो भरतर्षभ
Samsaarayati krityaani sarvatra vichikitsate
Chiram karoti kshipraathe sa mooddho bharatarshabha
சந்தேகப்பிராணிகள் நம்மிடையே சிலர். அவர்களிடம் மாட்டிக்கொண்டால் அவ்வளவு தான் பிழிந்து எடுத்து விடுவார்கள். உடனே செய்ய வேண்டியதை தாமதிப்பார்கள், செய்ய விட மாட்டார்கள், சொல்லமாட்டார்கள், ஆயிரம் எண்ணங்கள் உதயமாகும் மனதில். அவர்கள் சந்தேகங்களை பிரம்மதேவன் கூட தீர்க்க முடியாது. ஏன் இவனைப் படைத்தேன் என்ற சந்தேகம் தான் பிரமனுக்கு வரும்.
क्षिपत्यन्यान् हि दोषेण वर्तमान स्वयम् तथा।
यश्च क्रुद्धत्यनीशानः स च मूढतमो नरः॥
Kshipatyanyam hi doshena vartamaanah swayam tathaa
Yashcha krudhatyaneeshaanah sa cha mooddhatamo narah
ரொம்ப சுலபமாக மற்றவர் மேல் குறை கண்டுபிடிப்பவன் உண்டு. அவனிடம் அதே குறை ஆயிரம் இருப்பதை அறியமாட்டான். பிறத்தியாரை அடக்கமுடியாத நிலையில் அவர்கள் மேல் கோபம் பொங்கி வரும்.. வேடிக்கையான முட்டாள் மனிதர்கள்.
न वैरमुद्दीपयति प्रशान्तं
न दर्पमारोहति नास्तमेति ।
न दुर्गतोऽस्मीति करोत्यकार्यं
तमार्यशीलं परमाहुरार्याः ॥
Na vairamuddeepayati prashaantam
Na darpamaarohati naastameti
Na durgatosmeeti karotyakaaryam
Tamaaryasheelam paramaahuraaryaah
எப்போதாவது யார்மீதாவது கோபம், ஆத்திரம் வரலாம். காலப்போக்கில் அது அடங்கி உள்ளே மனதில் எங்கோ ஒளிந்திருக்கும். அதைப் போய் கிளறி பொங்கச்செய்து மீண்டும் வெளிக் கிளப்புவது தவறு என்று உணர்ந்தவன், தன்னையே இழிவு படுத்திக் கொள்ளாதவன், நான் கஷடப்பட்டதால் அதை செய்தேன் என்று தனது தவறான செய்கைக்கு சப்பைகட்டு கட்டாதவன் தான் உண்மையிலேனே நல்ல குணமுடையவன்.
एकश्चार्थान् न चिन्तयेत्
Ekashchaarthaan na chintayet
பெரியோரை, அனுபவஸ்தர்களை ஆலோசிக்காமல் எவரும் எந்த காரியத்திலும் புதிதாக தானாகவே இறங்கக்கூடாது. செயல்படக்கூடாது.
क्षमागुणोह्यशक्तानां शक्तानां भूषणं क्षमा ।
Kshamaa gunohyashaktaanaam shaktaanaam bhooshanam kshamaa
''நான் அவர்கள் செய்த காரியத்துக்கு ஒன்றும் பதிலுக்கு செய்யாமல் விட்டுவிட்டேன்'' இப்படி கூறுபவன் சக்தியில்லாதவனாக இருந்தால் உலகம் சிரிக்கும். சிறந்த பலசாலி, செல்வாக்கு கொண்டவன் இப்படி சொன்னால் அது அவன் பெருந்தன்மையை மன்னிக்கும் பண்பை காட்டும். அது அவனுக்கு ஆபரணம்.
द्वे कर्मणी नरः कुर्वन्नस्मिंल्लोके विरोचते।
अब्रुवं परुषं कश्चित् असतोऽनर्चयंस्तथा ॥
Dwe karmanee narah kurvannasminloke virochate
Abruvan parusham kashchit asatonarchayamstathaa
இதோபார் திருதராஷ்டிரா, ரெண்டு காரியம் பண்பவன் எல்லோராலும் போற்றப்பட்டு ஜொலிப்பான். ஒன்று யாரையும் கடிந்து பேசக்கூடாது. மனதை புண்படுத்தக்கூடாது. இன்னொன்று தீய குணம் படைத்தவன் என்று தெரிந்தும் ஒருவனை ஊக்குவிப்பது , முகஸ்துதி செய்வதோ கூடாது.
No comments:
Post a Comment