Monday, December 31, 2018

MARGAZHI VIRUNDHU


மார்கழி விருந்து J.K. SIVAN

மார்கழி 17வது நாள்

கொழுந்தே குலவிளக்கே

ஆண்டாளுக்கு இந்த விஷயம் தெரியாது. ஆங்கில புத்தாண்டு நாள். ஒருவரை ஒருவர் போனில் கூப்பிட்டோ, வாட்சப்பில் பட்டாசு வெடித்தோ,எல்லா நலனும் பெற்று பரம சந்தோஷத்தோடு வாழுங்கள் என்று ராத்திரி பன்னிரண்டு மணிக்கு எழுப்பி சொல்லத் தெரியாது. ஏனென்றால் ஆண்டாள் காலத்தில் ஜனவரி இல்லை. எங்கோஅது இருந்திருந்தாலும் அதன் மேற்சொன்ன மகத்துவம் கோபியர் வரை செல்லவில்லை. ஒருவேளை பசுக்களுக்கு தெரிந்தாலும் வாய் திறந்து அம்மா என்று தமிழில் தான் கூப்பிட்டன. இந்த வருஷம் இன்று ஆங்கில புத்தாண்டு ஜனவரி 1 மார்கழி 17ம் நாள். ஒவ்வொரு வருஷமும் முக்கால்வாசி புது காலண்டரில் 1-17 நம்பர்கள் தான் கலரில், கருப்பில், கொட்டையாக
பெரிதாக மறுநாள் காலையில் கிழிக்க காத்திருக்கும்.

பேசிக்கொண்டே ஆயர்பாடிக்கு வந்து விட்டோமே. மிகத் துணிச்சலானவள் ஆண்டாள். நினைத்ததை சாதிப்பவள். ஆண்டாள் மற்ற பெண்களை அழைத்துக்கொண்டு நந்தகோபன் அரண்மனைக்குள் சென்றாளல்லவா? எல்லோரும் குதூகலத்தோடு நந்தகோபனை சந்தித்தனர். இந்த துயிலெழுப்பும் பாசுரம் நமது குட்டிக் கதையில் மார்கழி 17வது நாளன்று இடம் பெறுகிறது. உள்ளே சென்ற ஆண்டாளும் மற்ற சிறுமிகளும் நேராக நந்தகோபன் அறைக்கே சென்றார்கள்.

தனது சப்ரமஞ்ச கட்டிலில் சாய்ந்திருந்த நந்தகோபன் திடீரென்று சில பெண்கள் தன்னெதிரே வந்து நிற்பது எதற்கு என்று யோசித்தவாறு முதலில் நின்ற அழகிய பெண் ஆண்டாளை பார்க்க ஆண்டாள் அவரை வணங்கி நின்றாள் :

''என்ன விஷயமாக நீங்கள் இந்த அதிகாலையில் வந்திருக்கிறீர்கள்?''

''ஐயா மகானுபாவரே, நந்தகோப பிரபுவே, நீங்களல்லவோ எங்கள்அனைவருக்கும்
எல்லா நன்மைகளும் செய்பவர், உம்மாலல்லவோ நாங்கள் குடி நீர் பெறுகிறோம், உங்கள் தயவால் அல்லவோ எங்களுக்கு உடுக்க உடை கிடைக்கிறது. உலகில் வாழத் தேவையான அனைத்தும் எங்களுக்கு வாரி அளிக்கும் பெருந்தகையே! உங்களை துயிலெழுப்ப முகமன் பாட நாங்கள் பாக்கியம் செய்தவர்கள்.'' என்றாள் ஆண்டாள்.

நந்தகோபன் அருகில் இருந்து கொண்டு அவர்களை அன்பாக வரவேற்ற யசோதையைக்கண்டதும் ஆண்டாள்

''எங்களின் தாய், அம்மா யசோதை! நீ அல்லவோ எங்கள் இல்லங்களின் ஒளி விளக்கு. எங்கள் பசுக்கூட்டம் அவற்றை கண்காணிக்கும் இந்த ஆயர் பாடி கோப கோபியர்கள் எல்லோருமே உங்கள் அன்பாலும் பாசத்தாலும் அன்றோ கட்டுண்டு இருக்கிறோம். துயில் எழுந்திரு தாயே. எங்களை ஆசிர்வதிப்பாயாக.''

நந்தகோபன் யசோதைக்கு நடுவில் ஒரு கட்டிலில் கிருஷ்ணனும் பலராமனும் அழகிய கட்டிலில் இருப்பதை கண்டு ஆனந்தம் கொண்டாள் ஆண்டாள். கிருஷ்ணன் அரைத்தூக்கத்தில் இருந்தான். ' யார் அவனை தூங்க விட்டார் தாலேலோ'' என்ற அழகான வரிகள் மனதில் ஓடுகிறது.

''எங்கள் உயிராய் விளங்கும் ''ஹே, கிருஷ்ணா, கடவுளுக்கெல்லாம் கடவுளே, தெய்வமே துயிலெழு. நீ உறங்கினால் உலகமே உறங்கிவிடுமே.! எங்கள் தலைவனின் சகோதரா அழகிய வீரா பலதேவா நீயும் உன் சகோதரனும் எழுந்திருங்கள்.எங்களை ஆசிர்வதியுங்கள். எங்கள் நோன்பு சிறக்க உங்கள் அருள் வேண்டும் ''

இவ்வாறு வேண்டி ஆண்டாளும் சிறுமிகளும் பல துதிப்பாடல்களை ப் பாடினர். (அந்த பாடல்களின் பெயர்கள் எனக்கு மறந்து போய் விட்டது!!) இந்த நந்தகோபன் குமரன் கதையில் அந்த ஆயர்பாடிப் பெண்கள் போற்றிப்பாடும் அந்த நாராயணனின் கலியுக தோற்றமாகிய திருப்பதி வெங்கடேசனுக்கு இந்த நன்னாளில் ஸஹஸ்ர கலசாபிஷேகம் விமரிசையாக நடைபெறும். ''கலியுக தெய்வமே, கண்கண்ட வரதா'' என நாமும் அவனைப் பணிவோம்.

ஆண்டாள் கண்ணனைக்கண்ட ஆனந்தத்தில் கடல் மடை யென பாசுரம் ஒன்று பாடுகிறாள். இல்லை இல்லை ஆண்டாள் உருவில் வில்லிப்புத்தூரில் இருந்த மற்றொரு இளம்பெண் கோதை ஆண்டாளாகி இதைப் புனைகிறாள். ஏட்டில் எழுத்தாணி விரைகிறது. வார்த்தைகள் மனசிலிருந்து பொங்கி மதியைநிரப்பி கண்வழியே கைக்குத் தாவி ஏட்டில் படைக்கப்பட்டது. பனை ஓலை ஏடு நிறைகிறது.

இனி காலம் காலமாக அந்தக் காவியம் திருப்பாவையாகி நமக்கு மகிழ்ச்சியூட்டி என்றும் நம் மனத்திலும் நிற்கச் செய்த ஆண்டாளே, கோதையே, உன்னை சாஷ்டாங்கமாக வணங்குகிறோம்.

வில்லிப்புத்தூர் வட பத்ர சாயீ கோவிலில் பட்டாச்சார்யர் தான் அந்த விடிகாலையில் மற்ற பக்தர்களுக்கு விஷ்ணுசித்தர் வீட்டிலிருந்து எழுதிக்கொண்டு வந்த கோதையின் அன்றைய பாசுரத்தை படித்துக்காட்டிக் கொண்டிருந்தார்: அவரைச்சுற்றி உள்ளூர் வைஷ்ணவர்கள் ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தார்கள். இது தான் கோதை எழுதிய அந்த பாசுரம்.

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல குலவிளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உளகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம் பொற் கழலடிச் செல்வா பலதே உம்பியும் நீயுன்
உறங்கேலோர் எம்பாவாய்

அன்று நந்தவன ஆஸ்ரமத்தில் திண்ணையில் தூணில் சாய்ந்தவாறு விஷ்ணுசித்தர் இதுவரை இருபது தடவையாவது மேற்கண்ட பாசுரத்தை வாயாரச் சொல்லி மகிழ்ந்திருப்பார்.

இன்னும் அவருக்கு அந்த ஓலைச்சுவடியில் படித்த பாசுரத்தை மனதிலிருந்து நகர வைக்க அவர் மனம் இடம் கொடுக்க வில்லை. எதிரே மலர்களைத் தொடுத்துக்
கொண்டே அவரைப்பார்த்து பாசத்தோடு கோதை அமர்ந்திருக்கிறாள்.

'கோதையின் பாமாலையில் மகிழ்ந்த அரங்கா, உனக்கு ரெட்டிப்பு சந்தோஷம் இன்று, கோதை படைத்த பாமாலையோடு கோதை தொடுத்த பூமாலையும் இந்தா சூடிக்கொள்.''

2019

நேரம் நல்ல நேரம் J.K.SIVAN
ஐம்பத்தைந்து அறுபது வருஷங்கள் ஓடி ஓடி ஓடாய் தேய்ந்து உழைத்தாகி விட்டது. திரும்பிப் பார்த்தால் ஓடிய இடங்கள் ஓடிய நேரங்கள், மலையாக, கடலாக விரிந்து மலைப்பாக இருக்கிறது. எப்படி என்னை இயந்திரமாக்கினான் இறைவன். உழைப்புக்கு நல்ல ஊதியமும் கொடுத்தான். உயர்வும் கொடுத்தான். இனி ஓட்டப்பந்தயத்தில் கயிற்றை தொட்டாகி விட்டது. வாழ்க்கைப் பந்தயத்தில் ஓட்டம் முடிந்து விட்டது. கைதட்டல் பரிசு முதன்மையாக ஓடியதற்கும் கிடைத்து விட்டது. இனி கால்கள் மெதுவாக நடக்கும் ஓடாது. கப்பல் கரை சேர்ந்து விட்டது. பல தேசங்கள் பல கடல்கள் சுற்றிய கப்பல் கரையில் நங்கூரம் பாய்ச்சி நின்று ஒய்வு பெற்றுவிட்டது. கரை தொட்டதே தவிர தரை தட்டவில்லை. இன்னும் மிதந்து கொண்டு தான் இருக்கிறது. இனி அசைவெல்லாம் ஒரே இடத்திலிருந்து கொண்டு தான்.

இனி என்ன செய்யலாம்? . உழைத்த உடம்பு ஒய்வு ஏற்காதே. கிருஷ்ணன் கண்ணில் பட்டான். நான் இருக்கிறேனே வா நாம் இருவரும் இணைவோம். உனக்கு நான் எனக்கு நீ. அட இந்த பந்தம் ஐந்து வருஷங்களாக வலுத்து விட்டது. ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவை அதே பழைய ஓ ட்ட வேகத்தில் இப்போது கப்பலுக்கு பதிலாக, கம்ப்யூட்டரில் நகர்கிறது. ஒரு நாளைக்கு பதினெட்டு இருபது மணி நேரம் எண்ணற்ற நண்பர்களை, முகம் தெரியா லக்ஷக்கணக்கான அன்பர்களோடு உலகளவில் உறவு கொண்டு அன்புடன் மகிழ்ந்து என்னால் முடிந்த எளிய சேவை செய்ய மனம் ஈடுபட்டு அதில் இப்போது காணும் உற்சாகம், ஊதியம் தேடிய உத்யோகத்தில் ஏனோ காணவில்லையே .

''அடாடா ஒரு வேளை அரிய சந்தர்ப்பத்தை வாழ்வில் இழந்து விட்டோமோ?'' என்று ஒரு கணம் கவலை.

''இல்லேடா பையா, (அவனுக்கு தான் 125 வயதாச்சே, 80 அவனுக்கு பையன் தானே!) உனக்கும் உன்னை சார்ந்தவருக்கும் நீ ஆற்றவேண்டிய கடமையை தானே செய்தாய். அதை நன்றாகவே செய்தவன் நீ என்பதால் உன்னை விட்டு வைத்தேன். அது நிறைவேறி இப்போது நீ என் கட்டுப்பாட்டில் எனக்கு உழைக்கிறாய். உன் நேரம் வீணாக வில்லை. உள்ளே சேர்த்து வைத்துக்கொள்ள அனுமதித்தேன் இவ்வளவு காலம். அதை வெளிக்கொணர்வது இனி உன் வேலை என உன்னை விட்டு வைத்திருக்கிறேன் '' என்கிறான் எதிரே சுவற்றில் கிருஷ்ணன்.

''புரிகிறது கிருஷ்ணா. உனக்கும் உன் அன்பர்கள், என் வாசகர்களுக்கும் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். ஆம் இன்று 1.1.2019 மற்றும் இன்னும் எத்தனையோ ஜனவரி 1க்கும் சேர்த்து என் மனம் கனிந்த வாழ்த்துக்கள். உழைப்பே உள்ளத்திற்கும் உடலுக்கும் உற்சாகம் - என் எழுத்துக்கள் என் எண்ணங்களின் பிரதிபலிப்பு. அதை அப்படியே வெளிப்படுத்த முடிந்தால் நான் பாக்கியசாலி. பல அன்பர்கள் நண்பர்களை நான் எழுத்தால் மகிழ்வித்தால் அதன் காரணன் நீ தானே கிருஷ்ணா. நீ ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா !


GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...