Tuesday, August 22, 2017

சூர் சாகரம் 3



சூர் சாகரம் 3 J.K. SIVAN
நீ உண்மை சொல்றே கிருஷ்ணா....

மய்யா மோரி என்கிற பாடல் என்னை மிகவும் கவர்ந்த ஒரு செவிக்கினிய பாட்டு. இதை MS பாடியிருக்கிறார் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இதை ரசிக்காதவர்கள் கிடையாது என்றும் சொல்லலாம். ஆனால் இது சூர்தாஸ் எழுதியது என்பது என்னைப்போல பலருக்கு இதுவரை தெரியாமல் இருக்க நிறைய வாய்ப்புண்டு.

o maiyyā morī, maiń nahiń mākhan khāyo
bhor bhayo gaiyana ke pāche
(tune) madhubana mohi paṭhāyo
cāra prahara vaḿśī vaṭa bhaṭakyo
sāñjha paḍe ghara āyo

(maiyyā, maiń kab mākhan khāyo)

maiń bālaka vahi yan ko choṭo
yeh chīko vidhī pāyo
gvāla bāla sab bair paḍe haiń
bar-bas mukha lapaṭāyo

yeh le apani lakuṭa kamarīya
bahuta hī nāca nacāyo
jiye tere kachu bheda upaj hai
jāni parāyo jāñyo

sūra dāsa tab hasī yaśodā
le ura kaṇṭha lagāyo
(naina nīra bharī āyo)
(tai nahin mākhan khāyo)

டேய் கிருஷ்ணா இங்கே வா. ?
........
எங்கேடா இருக்கே, கூப்பிடறேனே காதில் விழலை. வா இங்கே உடனே.
....
உன்னை விட்டேனா பார்? யசோதை ஒளிந்து கொண்டிருக்கும் கண்ணனை பிடித்து விட்டாள் . தரதர வென்று கூடத்துக்கு வெளிச்சத்தில் இழுத்துக் கொண்டு வருகிறாள்.

எங்கே இப்போ சொல்லு ? வெண்ணை எடுத்து திருட்டுத்தனமாக தின்றாயா?
அம்மா அம்மா என் ஆசை அம்மா இல்லை நீ. நான் பொய் சொல்வேனா? நான் வெண்ணையை தொடவே இல்லை. அப்புறம் தானே சாப்பிடமுடியும்?

நீ சொன்ன மாதிறியே தான் நான் செய்தேன். காலம்பற எழுந்தேன். பசுக்களை கட்டி அணைச்சுண்டேன். அதுகளோடு மதுவனம் போனேன். அங்கே அதெல்லாம் மேயும்போது மரத்தடியில் உட்கார்ந்து இடுப்பிலே இருந்த புல்லாங்குழலை எடுத்து ஊத்தினேன். பொழுது போச்சு. அந்தப்பக்கமெல்லாம் சுத்தினேன். சாயந்திரம் ஆச்சு. பசுக்களை அழைச்சுண்டு வந்துட்டேன்.. நான் எப்போ வெண்ணை எடுத்து தின்பதற்கு நேரம்? நீயே சொல்லு?
நான் வெண்ணையை மேலே ஏறி எங்கேயோ எடுத்தேன் என்கிறியே. நான் என்ன உயரமானவனா? எப்படி எனக்கு மேலே வச்சிருக்கிற வெண்ணை பானை எட்டும்? இந்த கன்னுக்குட்டிகள் எல்லாம் அம்மா கிட்டே பால் குடிக்கிறதில்லையா. வாய் நிறைய வெள்ளை நுரையோடு என்னை வாயிலே முகத்திலே, வாய்லே,உதடுலே எல்லாம் அதுகள் நக்கும். அதனாலே என் மேலே பால் வாசனை. அது என் தப்பா?.

இந்த என்கிட்டே இருக்கிற கொம்பு கம்பளி எல்லாம். போதும் இது. நீ என் அம்மா இல்லை ? இல்லாததும் பொல்லாததும் சொல்றே. நீ யாரோ. என்னை பெத்தவ இல்லை ?

ஐயோ கிருஷ்ணா அப்படி எல்லாம் பேசாதேடா. கிருஷ்ணனின் வாயை பொத்துகிறாள் யசோதா. கண்களில் நீர் துளிர்க்கிறது.

என் கண்ணப்பா நீ நல்லவன். உண்மை தான் சொல்றே. நீ வெண்ணை எடுத்து திங்கவில்லை ஆமாம் நீ வெண்ணையை தொடவே இல்லை ஒப்புக்கொள்கிறேன்.....'' என்கிறாள் யசோதை.

கண்ணில்லாத சூர்தாஸ் எப்படி கண் முன்னால் மேலே சொன்ன காட்சியை கொண்டு நிறுத்துகிறார் பார்த்தீர்களா? கண் எதற்கு. அது டிவி பார்ப்பதற்கும் பத்திரிகை படிப்பதற்கும் தேவையானவர்களுக்கும் உபயோகப்படட்டும் . மனக்கண் தான் வேணும் எனக்கு.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...