ஒரு ஐம்பெரும் விழா
தமிழ் நாடு பிராமண சங்கம் காரைக்குடியில் சுதந்திர தினத்தை கொண்டாட 15.8.2017 ஒரு ஐம்பெரும் விழாவாக கொண்டாடினார்கள். 2017-18 மாணவர்களுக்கு கல்வித்தொகை அளிிப்பு, தியாக வீர வாஞ்சி நினைவு விழா, மஹா கவி பாரதியார் விழா,1001ம் ஆண்டு ராமானுஜர் விழா, சுதந்திர தின விழாஆகியவை அவை. அதில் ராமானுஜரை பற்றி பேசுவதற்கு கிருஷ்ணார்ப்பணம் சேவா சொசைட்டி நங்கநல்லூரிலிருந்து என்னை அழைத்திருந்தார்கள். மிகச்சிறப்பாக அந்த விழா அமைந்தது. மூன்று நான்கு மணிநேரம் மக்கள் மெய்ம்மறந்து வீர வாஞ்சிி, , பாரதியார், ராமானுஜர் ஆகியோரை பற்றிய அரிய தகவல்களை அறிந்து வியந்தனர்.
சங்க கட்டிடம் உயர, பல நல்லிதயங்கள் முன்வந்து ஒரு மண்டபம் தற்போது உருவாகி அதில் இந்த விழா நடைபெற்றது. பல விழாக்கள் நூற்றுக்கும் மேலாக மக்கள் அமர்ந்து பங்குகொள்ள இங்கு இனி நடைபெறும் என்பதை ஐயமில்லை.
மேலே இன்னொரு கட்டிடம் உருவாகி அனைவருக்கும் உணவு அருந்த வசதியோடு தயாராகிறது. இதற்கும், வருடா வருடம் பள்ளி மாணவ மாணவியருக்கு கல்வித்தொகை உதவி அளிக்கவும் காரைக்குடி பிராமண சமூகம் ஆர்வமாக உள்ளதை அறிந்து மனமகிழ்ந்தேன்.
நமது குழு அன்பர் காரைக்குடியில் வசிக்கும் ஒய்வு ஏற்ற டெபுடி கலக்டர் ஸ்ரீ நிவாஸன் தம்பதிகள் நான் இந்த விழாவில் பங்குகொள்ள என்னை அழைத்து உபசரித்து உணவளித்து பல ஆலயங்களை தரிசிக்கவும் உதவியதை மறக்க முடியாது. அவர்களோடு நான் சென்ற ஆலயங்கள் பற்றி தனியாக யாத்ரா விபரம் என்ற தொடரில் எழுத உத்தேசம்.
No comments:
Post a Comment