Monday, August 28, 2017

ஹரனா ஹரியா?



யாத்ரா விபரம் - J.K. SIVAN

ஹரனா ஹரியா?

நமது தேசத்தில் ஆதி காலம் தொட்டு சிவ - விஷ்ணு அபேதத்தைக் காட்டும் ஸ்தலங்கள் பல உள்ளன. திருநெல்வேலிச் சீமையில் சங்கர நாராயணன் கோவிலும், ('சங்கர நயினார் கோயில்' சங்கரன் கோயில் என்று வழக்கில் சுருக்கி சொல்கிறார்கள்.) மேற்கே ஹரிஹர க்ஷேத்திரத்திலும் இவ்விரண்டு மூர்த்திகளும் ஒன்றாக இணைந்த பிம்பங்கள் உள்ளன. குற்றாலத்தில் விஷ்ணு மூர்த்தியை அகஸ்திய மஹரிஷி சிவலிங்கமாக மாற்றியிருக்கிறார். குற்றாலநாதர் சித்ரசபை க்ஷேத்ரத்தில் பார்த்தேன். இவை பிரபலமான ஸ்தலங்கள். இவ்வளவு பிரபலமில்லாத எத்தனையோ அந்தந்த ஊர்களில் சிவ விஷ்ணு ஆலயங்களாக இன்றும் வழிபாட்டில் இருக்கின்றன.சென்னை தியகராய நகர் சிவ விஷ்ணு ஆலயம் இப்படி பெருமை வாய்ந்த ஓர் ஆலயம்.

இன்னொன்று விசேஷமானது.

திருப்பாற்கடல் என்று ஒரு ஊர் இருக்கிறது. காஞ்சிபுரத்திலிருந்து வேலூருக்குப் போகிற வழியில் இருபது மைலில் இருக்கிறது. முதலில் அந்த க்ஷேத்திரத்தில் ஒரு பெருமாள் கோயில்கூடக் கிடையாதாம். ஈஸ்வரன் கோயில்தான் இருந்ததாம்.

புண்டரீக ரிஷி என்பவர் தொண்டு கிழவாரானாலும் ஒவ்வொரு ஏகாதசி அன்றும் பெருமாளை தரிசித்த பிறகுதான் உணவு உண்பார். ஒரு ஏகாதசி நாளில் அவணி நாராயண சதுர்வேதிமங்கலம் என்ற கிராமத்தில் இருந்த ஆலயத்திற்கு சென்றார். இப்போது திருப்பாற்கடல் என்ற ஊர் அப்போது அந்த பெயரில் இருந்தது.

ஒரு ஸ்ரீவைஷ்ணவர் அநேக க்ஷேத்திரங்களுக்குச் சென்று விஷ்ணு தரிசனம் பண்ணிக் கொண்டு வருகிற காலத்தில் அந்த ஊருக்கு வந்தாராம்.


ஒவ்வொரு நாளும் ஊருக்குப் போகிற போது விஷ்ணு தரிசனம் பண்ணாமல், அவர் ஆகாரம் பண்ணுவதில்லை என்ற நியமத்தை வைத்துக் கொண்டிருந்தார்.

அவர் திருப்பாற்கடலுக்கு வந்து "எங்கே விஷ்ணு ஆலயம் இருக்கிறது? தேடு தேடு என்று தேறினார். கண்ணில் பட்ட ஒவ்வொரு கோயிலாகப் போனார். எல்லாம் சிவன் கோயிலாகவே இருந்தன. கடைசியில் விஷ்ணு ஆலயமாகத்தான் இருக்கும் என்று நினைத்து ஒரு கோவிலுக்குள் நுழைந்தார். உள்ளே போனால் ஈசுவரன் இருந்தார். உடனே வெளியே ஒடிவந்து விட்டார். ஆகாரம் பண்ணவில்லை. வயிறு பசியில் துடித்தது. அதைவிட மனஸிலே 'இன்றைக்கு விஷ்ணு தரிசனம் பண்ணவில்லையே!' என்ற ஏக்கத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு கிழவர் அவருக்கு முன்னால். "என்ன ஸ்வாமி! ஏன் இப்படி விசனமாக உள்ளீர்? என்கிறார்.

''எங்காவது ஒரு சின்ன விஷ்ணு கோவிலாவது இந்த ஊரில் இருக்கா?

ஓ விஷ்ணு தரிசனம் பண்ண வந்தவரோ நீங்கள்?"

"இந்தப் பிரயோஜனமில்லாத ஊரில் எங்கே ஐயா விஷ்ணு கோயில் இருக்கிறது?" என்றார் கோபமாக அந்த வைஷ்ணவர்.

"அதோ தெரிகிறதே, அது சாக்ஷாத் விஷ்ணு கோயில்தான்" -- கிழவர்.

''என்னய்யா உளருகிறீர் நீர்? அங்கே இருந்து தானே வருகிறேன். உள்ளே நுழைந்த பிறகு தான் சிவன் கண்ணில் பட்டார். ஒடி வந்துவிட்டேன். ஏன் அய்யா பொய் சொல்கிறீர்?

''இல்லை நீர் சரியாக பார்க்கவில்லை. அது சிவனல்ல . விஷ்ணுவே தான். சரியாக பார்க்காமல் வந்துவிட்டீர். என்று தான் நான் சொல்வேன்?''

இருவரும் வாக்குவாதத்தில் சிறிது நேரம் ஈடுபட்ட பிறகு

''நீரா நானா யார் பொய் சொன்னது என்று பார்த்துவிட வேண்டும்" என்று அந்த ஊர் கிழவர் வீம்பு பண்ண, வைணவரும் விடமாட்டேன் என்று மல்லுக்கு நிற்க ரெண்டு பேர் மத்யஸ்தம் பண்ணி '' வாருங்கள் நாங்களும் உங்களோடு உள்ளே போய் பார்த்து சொல்கிறோம்'' என்று சமாதானப் படுத்தி எல்லோருமாக உள்ளே சென்றார்கள்..

வாஸ்தவத்தில் அங்கே போய்ப் பார்த்தால் சிவலிங்கம் மாதிரி இருந்தது. கீழ் பிரம்ம பீடமாக ஆவுடையார் இருந்தது. ஆவுடையாருக்கு நடுவிலிருந்து ஒரு மூர்த்தி எழும்பியதால் அசப்பில் சிவலிங்கம் மாதிரியே தோன்றிற்று. ஆனால் வாஸ்தவத்திலோ ஆவுடையாருக்கு மேலே தெரிந்தது லிங்கமல்ல. லிங்கத்தின் ஸ்தானத்தில் பெருமாள் நின்று கொண்டிருந்தார்.

''யாவராய் நிற்கின்றதெல்லாம் நெடுமால் என்று ஓராதார் கற்கின்றதெல்லாம் கடை'' என்று திருமழிசையாழ்வார் கூறியதை உணர்ந்தார் அந்த வைணவர்.

'அடடா! நாம் ஏமாந்து போய்விட்டோமே - மஹாவிஷ்ணு அல்லவா இங்கே இருக்கிறார்? என்று அந்த விஷ்ணு பக்தர் மிகவும் மனம் உருகி, அநேக ஸ்தோத்திரங்கள் பண்ணினாராம். கிழவரிடம் மன்னிப்புக் கேட்கத் திரும்பினால், அந்தக் கிழவரே விஷ்ணு மூர்த்திக்குள் கலந்து விட்டார். பெருமாளே கிழவராய் வந்திருக்கிறார்!

திருப்பாற்கடல் என்னும் ஊருக்குப் போனால் இப்போதும் பார்க்கலாம். ஆவுடையார் இருக்கும்; அதற்கு மேல் லிங்கம் இருக்கிற இடத்தில் பெருமாள் நின்றுகொண்டிருக்கிறார். இந்த க்ஷேத்திரமும் நமக்கு ஈஸ்வரன் வேறு மஹா விஷ்ணு வேறு இல்லை என்ற தத்துவத்தை விளக்குகிறதல்லவா?

வேலூர் மாவட்டம் காவேரிபாக்கத்தை அடுத்து இந்த திருப்பாற்கடல் கிராமம் உள்ளது

அவர் முகத்தில் இருந்த வருத்தத்தை பார்த்த ஒரு முதியவர், அதுபற்றி விசாரித்தார். மகரிஷியும், தான் பெருமாளை தரிசிக்க வந்தது பற்றியும், உள்ளே சிவலிங்கம் இருப்பது பற்றியும் கூறியதும், பெருமாளை வழிபட்டு விரதத்தை முடிக்க முடியாத வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

உடனே அந்த முதியவர், ‘உள்ளே பெருமாள் தானே இருக்கிறார். நீங்கள் சரியாக கவனிக்கவில்லையா?’ என்றபடி மகரிஷியை மீண்டும் ஆலயத்திற்குள் அழைத்துச் சென்றார்.

கருவறையில் இப்போது ஆவுடையாரின் மீது நின்ற கோலத்தில் வெங்கடேசப் பெருமாள் காட்சி தந்தார். இதைக்கண்டு மகிழ்ந்த மகரிஷி, தன் அருகில் நின்ற முதியவரை தேடியபோது அவரைக் காணவில்லை. அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ‘மகரிஷியே! சிவனும், விஷ்ணுவும் வேறு வேறு அல்ல. பேதம் எதுவும் தேவையில்லை. திருப்பாற்கடலில் உள்ள என்னை வழிபட்ட பலன் இத்தலத்திற்கு வந்து வழிபட்டாலே கிடைக்கும். இந்த திருத்தலம் இனி திருப்பாற்கடல் என்றே அழைக்கப்படும்’ என்று அருளினார். அதைத் தொடர்ந்து மகிரிஷிக்கு அமர்ந்த கோலத்திலும், கிடந்த கோலத்திலும் பெருமாள் காட்சி கொடுத்தார்.

ஆலயத்தின் தல விருட்சம் வில்வமும், துளசியும் ஆகும். ஆலயத்தில் பா
மா- ருக்மணியுடன் நவநீதகிருஷ்ணன், பக்த ஆஞ்சநேயர், ஒன்பது நாக தேவதைகள், அஷ்ட நாக கருடாழ்வார் ஆகியோர் சன்னிதிகள் உள்ளன

வேலூரில் இருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கத்தின் தெற்கே மூன்று கிலோமீட்டர் தூரத்தில் திருப்பாற்கடல் திருத்தலம் அமைந்துள்ளது. காஞ்சீபுரத்தில் இருந்து வருபவர்கள் வேலூர் செல்லும் பஸ்சில் ஏறி, காவேரிபாக்கத்தில் இறங்கி ஆட்டோவில் கோவிலுக்கு போகலாம்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...