Saturday, August 5, 2017

கொஞ்சூண்டு கிருஷ்ண கர்ணாம்ருதம்

கொஞ்சூண்டு கிருஷ்ண கர்ணாம்ருதம் .
J.K. SIVAN

ஒரு அபூர்வ பக்தி ரசம் சொட்டும் காவியம் ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம். யாருடைய கரணத்தில் (செவியில்) அம்ருதமாக பாய்கிறது? . ''தேன் வந்து பாயுதே'' பக்தன் காதிலா, பக்தனின் பரிசுத்த பக்தி பாடல் -தேனாக பகவான் காதிலா? எப்படி எடுத்துக்கொண்டாலும் சரியாகவே உள்ளது. என்னை மிகவும் ஈர்த்தது இந்த ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்.
உங்களுக்கு மீண்டும் ஞாபக படுத்த --- லீலா சுகர் இதை எழுதுமுன் ஒரு சைவர். பில்வமங்கள் என்று பெயர். சமாதி வடக்கே மதுராவில் இருந்த போதிலும் அவர் கேரளக் காரர் தான். எப்படியாம்? அவர் வர்ணிக்கும் குழந்தை கிருஷ்ணன் புலி நகம் தரித்திருக்கிறான். இது மலையாள தேச வழக்கம். பால முகுந்தாஷ்டகம் எழுதியிருக்கிறார். ஏதோ ஒரு பக்கமோ இரண்டு பக்கமோ தான் சைதன்யர் கையில் எங்கோ ஆந்திராவில் கிடைத்தது.

சில சமயம் வேற் கடலை மடித்து வரும் காகிதத்தை விரும்பி படிப்போம். காசு கொடுத்து வாங்கும் புத்தகத்தில் இல்லாத அலாதி விஷயங்கள் கிழிந்த அந்த அரைபக்கத்தில் இருப்பதாக சந்தோஷம் பொங்கும். சைதன்யர் இந்த துண்டு காகிதத்தை படித்து ''அடடா, இது அதி அற்புதம், இதை யார் எழுதியது?. முழுபுத்தகமும் எனக்கு வேண்டுமே'' என்று சொல்ல சிஷ்யர்கள் எங்கெங்கோ ஓடி கேரளாவில் முழு ஓலைச் சுவடியும் கிடைத்தது. இந்த புத்தகம் சைதன்ய மகா பிரபு கையில் கிடைத்ததால் நம் அதிர்ஷ்டம் இன்று இதை புத்தகமாக படிக்கிறோம்.

பில்வமங்கள் நிறையவே எழுதியிருக்கிறார். குருவாயூரப்பன் மீது அலாதி பிரேமை.'' உன்னி கிருஷ்ணா நீ வாடா'' என்றால் அவர் முன் வந்து நிற்பான்.

चिन्तामणिर्जयतु सोमगिरिर्गुरुर्मे
शिक्षागुरुश्च भगवान् शिखिपिञ्छमौलिः।
यत्पादकल्पतरुपल्लवशेखरेषु
लीलास्वयंवररसम् लभते जयश्रीः॥ १-१

cintāmaṇirjayatu somagirirgururme
śikṣāguruśca bhagavān śikhipiñchamauliḥ |
yatpādakalpatarupallavaśekhareṣu
līlāsvayaṁvararasam labhate jayaśrīḥ ||

ஏற்கனவே ஹரிதாஸ் படம் (MKT பாகவதர் நடித்தது) பற்றி சொல்லியிருக்கிறேன்.'' கிருஷ்ணா முகுந்தா'' பாடல் நாலரை -ஐந்து கட்டையில் இன்றும் எங்கும் எதிரொலிக்கிறது. அவர் பில்வமங்களாக நடித்த படம். ஹரிதாஸ் கதையில் பில்வ மங்கள் வேசி லோலன். அவனை கிருஷ்ணன் பக்கம் சேர்த்தவள் வேசி சிந்தாமணி. அவளைப் பற்றியே முதல் ஸ்லோகம் அமைந்ததை எதிர்த்தாலும், யார் ஒருவனை கிருஷ்ணனை மனதால் நாட உபதேசித்தாலும் அவர் உயர்ந்தவர் என்ற தகுதியில் முதல் ஸ்லோகத்தில் அவரை வணங்குவது மிகவும் சரி.

''இந்த சுட்டிப் பயல் கிருஷ்ணன் ஒரு அவதாரம் என்றே வைத்துக்கொண்டாலும் மற்ற பகவானின் அவதாரங்களை விட சிறந்தவன். எப்படி?

மற்ற அவதாரங்களில் அவர் கையில் ஏதாவது ஒரு ஆயுதம் இருக்கும், நிறைய ஆபரணங்கள், கிரீடம், எல்லாம் இருக்கும். பெரிய ராஜ, பிராமண குடும்பத்தில் பிறந்தவராக இருப்பார். குதிரை யானை, அரண்மனை .... இப்படி ஏதாவது ஒன்று இருக்கும். ஆனால் இந்த கிருஷ்ணன் பயலைப் பாருங்கள். ஏதோ ஒரு மயில் இறகை தலையில் செருகி, அதுவே அவன் கிரீடம். சாதாரண மக்கள் வீட்டில் வளர்ந்து, பழகி, மண்ணில் விளையாடி, நீரில் குதித்து, வெண்ணை திருடி....... சாதாரணமானவனாகவே இருக்கிறான். பாமரர்க்குள் பரமன்.
பில்வமங்கள் ஆசார்யன் சோமகிரி தனக்கு கோபால மந்த்ரம் உபதேசித்ததால் கிருஷ்ணன் பிரத்யக்ஷமாக தோன்றினான் என்கிறார்.

अस्ति स्वस्तरुणीकराग्रविगलत्कल्पप्रसूनाप्लुतम्
वस्तु प्रस्तुतवेणुनादलहरीनिर्वाणनिर्व्याकुलम्।
स्रस्त स्रस्त निरुद्धनीवीविलसद्गोपीसहस्रावृतम्
हस्तन्यस्तनतापवर्गमखिलोदारम् किशोराकृति॥ १-२

asti svaḥ taruṇī kara agra vigalat kalpa prasūna āplutam
vastu prastuta veṇu nāda laharī nirvāṇa nirvyākulam
srasta srasta niruddha nīvī vilasat gopī sahasra āvṛtam
hasta nyasta nata apavargam akhila udāraṁ kiśora ākṛti

இந்த காட்சியை ரசியுங்கள்.
ஒரு சிங்கக் குட்டி அழகாக தனது புல்லாங்குழலை தாமரை இதழ்களில் வைத்து ப்ரணவத்தையே ஜீவனாக கொண்ட மனதை வருடும் மெல்லிய இனிய கீதம் பாடுகிறது. அசையும் எதுவும் அசையாமல் அதில் கட்டுண்டு மயங்கி நிற்கிறது. இடுப்பு துணி அவிழ்ந்தது கூட சரி செய்ய நேரமில்லாமல் எண்ணற்ற கோபியர் நறுமண மலர்களை கைநிறைய ஏந்தி வந்து அவன் மீது விரல் நுனியாக மலர் மாரி பொழிகி றார்கள். அவன் தேவாதி தேவனல்லவா. அவனிடம் முக்தி பெறப்போகிறவர்களாயிற்றே!

चातुर्यैकनिधानसीमचपलापाङ्गच्छटामन्थरम्
लावण्यामृतवीचिलालितदृशं लक्ष्मीकटाक्षादृतम्।
कालिन्दीपुलिनाङ्गणप्रणयिनङ्कामावताराङ्कुरम्
बालम् नीलममी वयम् मधुरिमस्वाराज्यमाराध्नुमः॥ १-३

cāturyaikanidhānasīmacapalāpāṅgacchaṭāmantharam
lāvaṇyāmṛtavīcilālitadṛśaṁ lakṣmīkaṭākṣādṛtam |
kālindīpulināṅgaṇapraṇayinaṅkāmāvatārāṅkuram
bālam nīlamamī vayam madhurimasvārājyamārādhnumaḥ || 1-3

எப்படி இவ்வளவு கொள்ளை அழகு அவனிடம்? தன்னைப் போல் மற்றொருருவர் இல்லாதவன். பக்தர்களுக்கு சாயுஜ்யம் அளிப்பவன். குழல் ஊதிக்கொண்டே அப்படி ஒரு தினுசாக திரும்பி ஒரு கோணல் பார்வை பார்த்தாலே போதும். அமிர்த மழையில் நனைந்து அந்த கோபியர்கள் அனைவருமே அவன் கண் வீச்சில் மயங்கி திக்கு முக்காடுவார்களே. எங்கெல்லாம் அவன் பார்வை படுகிறதோ அங்கெல்லாம் சுபிக்ஷம், யாரெல்லாம் அவன் கடை விழிப் பார்வையில் பட்டார்களோ அவர்கள் எப்போவோ முக்தி அடைந்தாகி விட்டது. சாதாரண சிறுவனாக அந்த சர்வஞன் யமுனை நதிக் கரையில் மற்ற சிறுவர்களோடு மணலில் நீரில் விளையா டினான். கோபியர் வீட்டில் வெண்ணையும் ஏன் அவர்கள் மனதையும் திருடியவன் அல்லவா அவன்.

मधुर तर स्मित अमृत विमुग्ध मुख अम्बु रुहम्
मद शिखि पिङ्छि लाङ्छित मनोज्ञ कच प्रचयम्
विषय विष आमिष ग्रसन गृध्नुनि चेतसि मे
विपुल विलोचनम् किम् अपि धाम चकास्ति चिरम्

madhuratarasmitA.amR^itavimugdhamukhAm.hburuham
madashikhipi~nChilA~NChitamanoj~nakacapracayam |
viShayaviShAmiShagrasanagR^idhnunicetasime
vipula vilocanam kimapi dhAma cakAsti ciram || 1-5
(kokilam; prAkR^ita= charcharI; some say: narkuTa)

ஒரு நிமிஷம் என்னைப்பற்றி சிந்திக்கிறேன். இதுவரை உலக விஷயங்கள் என்னை ஈர்த்தன. கண்ணுக்கு விருந்தாக, பார்ப்பதற்கு நேர்த்தியாக இருக்கும் தின்பண்டம் உண்மையில் விஷம் கலந்த ஒரு பக்ஷணம். என்னைக் கொல்லக்கூடியது. இதோ அதற்கு மாற்று கிடைத்து விட்டது. எந்த விஷயமும் (விஷமும்) என்னை அணுகாது. பால கிருஷ்ணன் என்ற அந்த துக்குணியூண்டு அழகன் என் மனதை முழுதும் வியாபித்து விட்டான். அவன் தாமரை முகம், சிறிய அவன் சிரத்தில் அழகழகான மயில் இறகுகள். அவனது காந்த பார்வை. சுண்டியிழுக்கும் அமிர்த சக்தி வாய்ந்த புன்னகை. என்னைப்போல் கோடானுகோடியரை தன் வசப் படுத்தும் அழகு திருமேனி.

இது தான் பாலக்ருஷ்ணன்.

मुकुलायमान नयन अम्बुजम् विभोः मुरली निनाद मकरन्द निर्भरम्
मुकुरायमाण मृदु गण्ड मण्डलम् मुख पंकजम् मनसि मे विजृम्भताम्

mukulAyamAnanayanAmbujam vibhoH
muraliininAdamakarandanirbharam |
mukurAyamANamR^idugaNDamaNDalam
mukhapa~Nkajam manasi me vijR^imbhatAm || 1-6
(ma~nju-bhAhiNi)

அழகு பிம்பம். கஷ்கு முஷ்க் பையன். பளபள என்று ஜொலிக்கும் மேனி. எல்லா கோபிகளும் தம்மை மறந்து அவனையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவனது சதைப்பற்றுள்ள கன்னம் சற்று வீங்குகிறது. ஏன்? புல்லாங்குழலுக்கு காற்றை ''தம்'' பிடித்து அனுப்புகிறான். அவன் இதய, நுரையீரலி லிருந்து ஜீவ நாதம் குழல் வழியாக வருகிறதே. அந்த சுகானுபவத்தில் அவனது பெரிய நீண்ட அழகிய விழிகள் அரை வாசி மூடி பாதி திறந்து மனம் லயித்து அந்த பிரதேசமே அவன் கானத்தில் கட்டுண்டு பிரமிக்கிறதே. உப்பிய கன்னங்கள் கண்ணாடி போல் மின்னுகிறதே. இந்த கிருஷ்ணனை யாராவது இப்படி பார்த்துக்கொண்டிருக்கும்போது அங்கே இங்கே நகருவார்களா?

पल्लव अरुण पाणि पङ्कज सङ्गि वेणु रव आकुलम्
फुल्ल पाटल पाटली परिवादि पाद सरो रुहम्
उल्लसत् मधुर अधर द्युति मञ्जरी सरस आननम्
वल्लवी कुच कुम्भ कुङ्कुम पङ्किलम् प्रभुम् आश्रये

pallavAruNapANipa~Nkajasa~NgiveNuravAkulam
phullapATalapATalIparivAdipAdasaroruham |
ullasanmadhurAdharadyutima~njarIsarasAnanam
vallavIkucakumbhaku~Nkumapa~Nkilam prabhumAshraye ||

அவனது அழகை என்னால் சொல்ல முடியவில்லை. சிறு குழந்தை. நீலமேக சியாமள வண்ணன். ஒரு முறை சுற்று முற்றிலும் பார்க்கிறான். வம்சி என்ற அவனது புல்லாங்குழல் இடுப்பிலிருந்து கைக்கு தாவுகிறது. அந்த உள்ளங்கைகளும் இதழ்களும் அன்றலர்ந்த தாமரை மொட்டுபோல் இளஞ்சிவப்பு நிறம். இதழ்கள் குவிகிறது. குழல் உதட்டில் பதிகிறது. மார்பு காற்றை இழுத்து விடுகிறது. காற்று அவனிடமிருந்து இசையாக வெளியே மெதுவாக வந்து பிரபஞ்சத்தையே ஆளுமை செய்கிறது. தேன் துளிகளாக வானிலிருந்து பொழிவது போல் எங்கும் அவன் கானமழை. கோபியர்கள் மனதில் ஆசை பொங்க அந்தக் குழந்தையை ஓடி வந்து அணைக்கிறார்கள். அவர்கள் அணிந்துள்ள குங்குமத்தின் சிவப்பு அவன் கருநீல உடலெங்கும் சிவப்பு திட்டுகளாக வண்ணம் சேர்த்து அவன் மேலும் மயக்குகிறான். வ்ரஜ பூமிக்காரர்கள் புண்யசாலிகள்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...