Monday, August 21, 2017

சூர் சாகரம் 2



சூர் சாகரம் 2 J.K. SIVAN
ஹே கோவிந்தா...!
சூர் தாசரை ஊத்துக்காடு என்பதா, குருவாயூரப்பனை நேரில் கண்டு பேசிய மேல்பத்தூர் நாராயண பட்டாத்ரி என்பதா, பில்வமங்களா, சைதன்யரா, ஆம் இல்லை. இவர்களைப்போலவே கண்ணனை மனதால் கண்டவர்.விழியில்லையே, சிந்தையிலே அந்த சின்னக்கண்ணனை நிலை நிறுத்திக் கொண்ட அற்புத மஹான்.
அவரின் ஒரு பிரபல பாடலிலிருந்து சூர்தாசரை அனுபவிப்போம்
ஹே கோவிந்தா, ஹே கோபாலா, ரகோ சரண ஹமாரே,
அப் தோ ஜீவன ஹரே,
நிர் பிவனு ஹேது தரணு கையோ சிந்து கே கினாரே (ஹே கோவிந்தா)
சிந்து பிச்சா பஸது க்ராஹ சரண தரித பச்சறே (ஹே கோவிந்தா)
துவாரக்கு மேம் சபது கையோ சோறு பியோ பாரே,
சங்கு சக்ர கதை பத்ம கருதலே சிதரே (ஹே கோவிந்தா)
சூர் கஹே ஷ்யாம் சுனோ ஷரனே திஹாரே
அப் கி பார் பார் கரோ நண்டு கே துலாரே (ஹே கோவிந்தா)
`He gOvinda hE gOpAla rAkhO sharaNa hamare
ab tO jIvana hArE
nIr pivanu hEtu(dharanu) gayO sindhu kE kinArE
sindhu bIcha basatu grAha charaNa dharitha pacArE (hE gOvinda)
dwaruka mem sapatu gayo choru bio bhare
sangu chakra gatha padma karutale cithare (he govinda)
sUr kahE shyAm sunO sharNE tihArE
ab kI bAr pAr karo nandu kE dulArE (hE gOvinda)
அடே குட்டி கிருஷ்ணா, ஒண்ணு மட்டும் செய்யேன். என்னை எப்போவும் உன்கிட்டேயே வச்சுக்கோ! நீ தானே என்னை ரக்ஷிக்கணும். உனக்கு தெரியாதா, நான் இதோ இப்பவோ இன்னும் கொஞ்சநாளோ ! வாழ்க்கை முடியப்போறதே.),
அன்னிக்கு சிந்து நதிக்கரையில் என்னாச்சு மறந்து போச்சா? தாகத்திற்கு நீர் அருந்த கஜேந்திரன் ஆற்றில் காலை வைத்து இறங்கினான்.
எதை சாப்பிட்டு இன்று பசியாறலாம் என்று ஒரு முதலையும் அப்போது அந்த நதியில் காத்திருந்ததே. வரப்பிரசாதம் என்று யானையின் காலை பிடித்து கவ்வியது. உயிர் காத்துக்கொள்ள கஜேந்திரன் அதை எதிர்த்தான். வந்த ஆகாரத்தை விடுவேனா என்று முதலை விடவில்லை. உயிரா, பசியா? எது வெல்லும். அதுவும் நீரில் முதலை பல யானைகளுக்கு சமம். பன்னிரண்டு மணி நேர போராட்டம். முதலையின் கை ஓங்கி யானையை இன்னும் ஆழத்திற்கு இழுத்துக்கொண்டு போகிறது.
யானைக்கு தெரிந்து விட்டது. நம் சக்தி விரயமாகிக்கொண்டு வருகிறதே. இனி உதவி வெளியேயிருந்து தான் வரவேண்டும். யார் உதவுவார்கள்? கிருஷ்ணா, கிருஷ்ணா, துவாரகா நாதா .... யானையின் சோக ஒலி துவாரகை சென்று அரண்மனை கதவை படார் படார் என்று இடித்தது.
கிருஷ்ணா உனக்கு அவசரம் புரிந்து விட்டது. எங்கே கருடன்? நொடியில் கருடாவாகனனாக சங்கை ஒலித்துக் கொண்டு (''நான் வந்துவிட்டேன் '' என்று தைரியம் சொல்ல ) கதாயுதத்தோடு பறந்தாயே. இதோபார் இதைக் கேள். உன்னை அண்டி வந்தேன். என்னை காப்பாய் என்று கதறுகிறேன். முதலையை காத்ததுபோல் இந்த பவ சாகரத்திலிருந்து, உலக வாழ்க்கை கடலிலிருந்து மீட்பாய். நந்த குமாரா !

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...