விவேக சூடாமணி - VIVEKA CHOODAMANI - 1 J.K. SIVAN
நமக்கு ஏராளமான சொத்து வைத்து விட்டுப்போன முன்னோருக்கு எப்படி நன்றி சொல்வது?எங்கோ பூர்வீக சொத்து வைத்து விட்டுப்போன பாட்டன் பூட்டனை தெரியாமலேயே நிறைய பேர் ஏழையாக செத்துவிட்டார்கள். சிலர் சொத்து விவரம் தெரியாமல் விழிக்கிறார்கள். சிலர் வேறு எவரோ அந்த சொத்தை அனுபவிக்கிறார்கள் அவர்களை அப்புறப்படுத்த வழி தெரியாமல், சண்டை போட பணமோ பலமோ இல்லாமல் கண் எதிரே தனது சொத்தை மற்றவை அனுபவிப்பதை பார்த்து பொருமுகிறார்கள். சிலர் எனக்கு எவன் சொத்தும் வேண்டாம் நான் சம்பாதித்ததே போதும் எனும் ராசிக்காரர்கள்.
நாம் கேட்காமலேயே எந்த வில்லங்கமும் இல்லாமல் நிறைய சொத்து நம் எல்லோருக்குமே அள்ள அள்ள குறையாமல் நிறைய நிறைய பொதுவில் விட்டு வைத்துவிட்டுப்போன ஒரு முன்னோர் தான் ஆதி சங்கரர்.
அதில் ஒரு விலையுயர்ந்த, விலையில்லாத மாணிக்கம் தான் விவேக சூடாமணி. அதில் சில ஸ்லோகங்களை உங்களோடு பரிமாற ஒரு எண்ணம் எழுந்தது. அதன் விளைவே இது.
நமது புத்தி கூர்மையால் எது நமக்கு உகந்தது, நல்லது, சிறந்தது, பின் பற்ற தக்கது, நல் வழி காட்டுவது என்று பாகுபாடு செயது அதை விடாமல் கெட்டியாக பிடித்துக்கொள்ள சில ஸ்லோகங்கள் உள்ளன. மொத்தம் 581 இது புரிந்தால் வேதாந்தம் நன்றாக காக்கா நரி வடை கதை மாதிரி எளிதில் புரியும்.
சின்மயானந்தா ஸ்வாமிகள் அற்புதமாக இதை விளக்கி சொல்வதை கேட்டிருக்கிறேன்.
जन्तूनां नरजन्म दुर्लभमतः पुंस्त्वं ततो विप्रता
तस्माद्वैदिकधर्ममार्गपरता विद्वत्त्वमस्मात्परम्।
आत्मानात्मविवेचनं स्वनुभवो ब्रह्मात्मना संस्थितिः
मुक्तिर्नो शतजन्मकोटि सुकृतैः पुण्यैर्विना लभ्यते ॥१॥
For all living beings, a human birth is indeed rare; much more difficult is manhood; rarer than this is a sattwic attitude in life; still rarer is steadfastness on the spiritual path propounded in the Vedas; more so is a profound knowledge in the scriptures and the capacity to distinguish between the real and the unreal. A step above this is the personal experience of spiritual Glory and a state of being fully established in the consciousness of the individual Self as the Self in all. Mukti, liberation, cannot be attained without merits earned in a hundred crores of births.
அரிதான நமது மனிஷப் பிறவிக்கு எப்போதோ நாம் பாக்கியம் செய்தவர்கள். அரிது அரிது மானுடராகப் பிறத்தல் அரிது அல்லவா. அப்படி மனிதனாக இருந்தும் அவர்களில் சாத்விக குணம் படைத்தவன் உன்னதமானவன். இதோடு அவனுக்கு பக்தியும் ஆன்மீக சிந்தனையும் வேறு சேர்ந்திருந்தால் வேதவழியில் நடப்பவனாக இருந்தால் அவன் கடவுளே தான். அவனுக்கு எது சாஸ்வதம் அநித்தியம் என்று தெரியும். ஆன்மசக்தி உணர்வு வேறு இருப்பதால் மோக்ஷபாதையில் செல்பவன். ஆயிரங்கோடி பிறவிகளில் கிடைக்கும் புண்யத்தை எளிதில் பெற்றவன்.
लब्ध्वा कथंचिन्नरजन्म दुर्लभं
तत्रापि पुंस्त्वं श्रुतिपारदर्शनम्।
यस्त्वात्ममुक्तौ न यतेत मूढधीः
स ह्यात्महा स्वं विनिहन्त्यसद्ग्रहात्॥४॥
Having obtained human birth which is rare, having attained manhood and acquired a deep knowledge of the scriptures, if a person is foolish enough not to strive for self-realization, he commits suicide, holding on to unreal things.

தற்கொலை என்பது கயிற்றில் தொங்குவதோ, விஷத்தை குடிப்பதோ, நீரில் விழுந்து மிதப்பதோ அல்ல. அரிய மானுடப் பிறவி எடுத்தும் அதன் அருமை தெரியாமல், வேத சாஸ்திர ஞானம் இன்றி, ''தான்'' யார் என்றே தெரியாமல் அறியாமல் நிழலை நிஜம் என்று தேடி ஓடி ஆடி மிருகமாக வாழ்வது. நிறைய பேர் நாம் மிருக வாழ்க்கையா, மெஷின் வாழ்க்கையா எதை வாழ்கிறோம்? வேதம் சாஸ்திரம் ஞானம் இதற்கெல்லாம் அர்த்தம் கூட தெரியாத போது அதை எப்போது எப்படி அறிவது? அறியவேண்டும் என்ற எண்ணமாவது மனதில் உண்டாகுமா? அது போதுமே.
अतो विमुक्त्यै प्रयतेत विद्वान्
सन्यस्तबाह्यार्थसुखस्पृहःसन्।
सन्तं महान्तं समुपेत्य देशिकं
तेनोपदिष्टार्थसमाहितात्मा ॥८॥
Therefore, the learned seeker should abandon his desire for pleasures from external objects and strive to gain liberation (from the cycle of births and deaths). To this end he must approach a saintly and generous Master and must lead a life reflecting and contemplating on the words of advice given by his spiritual guru
எனவே மானுடர்காள், மாயையில் உழன்று அழியும் உலக விவகார வஸ்துகளில் மனம் செலுத்தாமல், பிறவிப் பெருங்கடலை கடக்க , நல்ல ஒரு குருவை அடைந்து மோக்ஷ மார்கத்தை அறிந்து பிரழாமல் அதை கடைப் பிடித்து வாழ்வீர். நல்லதும் கெட்டதும் நம் கையிலே தானே.
उद्धरेदात्मनात्मानं मग्नं संसारवारिधौ
योगारूढत्वमासाद्य सम्यग्दर्शननिष्ठया ॥९॥
One should lift oneself out of the ocean of this samasara by attaining the status of a yogaarooDha by the constant practice of self-control and discrimination.
எழுந்திரு,ஓடு,நேரம் வீணாக்காதே. உன்னைப் பிடித்து இழுக்கும் சம்சார சாகரத்திலிருந்து வெளியே வா. ஐம்புலன் வசம் சிக்காமல், தன்னடக்கம் கொள். நித்ய அநித்தியம் எது என்று உணர்ந்துவிடாமல் அதன் படி நடப்பாய். யோகியாகி விடுவாயே. விவேகானந்தரின் அற்புத வாக்கியத்தை நினைவு கூறலாமா? ARISE AWAKE AND STOP NOT TILL THE GOAL IS REACHED!
चित्तस्य शुद्धये कर्म न तु वस्तूपलब्धये।
वस्तुसिद्धिर्विचारेण न किंचित्कर्मकोटिभिः॥११॥
Selfless action done without expectation of the fruits thereof purifies the heart but does not lead to Self-realization which is obtained only by contemplation and discrimination, not by any number of actions.
தன்னலமின்றி செய்யும் செயல் பலன் எதிர் நோக்காமல் செய்யும் கர்மம் சித்த சுத்தி தரும். ஆனால் ஜீவன் முக்தனாக வேண்டும் என்றால் த்யானம், நித்யாநித்ய ஞானம், மாயப் பிரபஞ்சம் வசம் அகப்படாமல் ஒதுங்கும் பழக்கம் வரவேண்டுமே.நாம் ஜீவன் முக்தனாக முயற்சிக்க வேண்டாம் சார். கொஞ்சம் கொஞ்சமாக பலன் எதிர்நோக்காது பிறர்க்கு உதவுவோம். படிப்படியாகத்தானே முன்னேறவேண்டும். இருக்கவே இருக்கிறது இன்னும் எத்தனை பிறவி.!!

No comments:
Post a Comment