Tuesday, August 29, 2017

விவேக சூடாமணி - VIVEKA CHOODAMANI - 2



விவேக சூடாமணி - VIVEKA CHOODAMANI - 2
J.K. SIVAN

सम्यग्विचारतः सिद्धा रज्जुतत्त्वावधारणा।
भ्रान्त्योदितमहासर्पभयदुःखविनाशिनी ॥१२॥

The fear and sorrow arising from the delusory serpent superimposed on a piece of rope can be destroyed only by fully understanding the truth of the rope through contemplation and enquiry.

ஐயோ பாம்பு என்று ஐந்தடி உயரம் குதித்தாயே பிறகு தானே தெரிந்தது யாரோ கட்சிக்காரன் கட்டிய தோரண பிளாஸ்டிக் தான் பளபள வென மின்னிய அந்த பாம்பு என்று! அதே போல் தான் ஆத்ம விசாரம், த்யானம், ஞானம் எது உண்மை எது மாயை என்று விளக்கும். பழகிக் கொள்.

अर्थस्य निश्चयो दृष्टो विचारेण हितोक्तितः।
न स्नानेन न दानेन प्राणायामशतेन वा ॥१३॥

The knowledge about the nature of the Self cannot be obtained by ablutions, charities or even by hundreds of pranayamas. It can only be obtained by enquiry, contemplation and reflection and by listening to the sage advice of men of wisdom and realization.

ஆன்மாவைப் புரிந்துகொள்ள, மூன்று வேளை குளித்தாலோ, ஏழைகளுக்கு கொஞ்சூண்டு தானமோ, விடாமல் மணி பார்த்துக்கொண்டு மூக்கைப் பிடித்துக்கொண்டு காயத்ரி ஜெபமோ போதாது. அதை ஞானிகள் உபதேசம், சுயசிந்தனை, மனம் குவிந்த த்யானம், ஆத்ம விசாரம் மூலம் தான் பெற முடியும். எளிமை அவசியம் தேவை.

मोक्षकारणसामग्र्यां भक्तिरेव गरीयसी।
स्वस्वरूपानुसन्धानं भक्तिरित्यभिधीयते ॥३१॥

Among the instruments for attaining liberation bhakti alone carries more weight. Constant contemplation on the one’s own Real (Divine) Nature is called bhakti or devotion.

முக்தி பெற என்ன வழி என்று எத்தனையோ விஷயங்களை தேடி அலையவேண்டாம். பக்தி ஒன்று தான் சரியான பாதை. ஆத்மாவில் மனம் செலுத்தி உள்ளே அந்த சுகானுபவ ஒளி யைக் காண பக்தி ஒன்றே சாதனம்.

वेदान्तार्थविचारेण जायते ज्ञानमुत्तमम्।
तेनात्यन्तिकसंसारदुःखनाशो भवत्यनु॥४५॥

The highest knowledge arises from the contemplation and reflection upon the meaning of the Upanishadic mantras. From this one gets release from the sorrows and sufferings of the illusory phenomenal world.

உபநிஷத் வேதாந்த வார்த்தைகளை நெட்டுரு பண்ணினால், மனப்பாடம் செய்தால் ஞானம் கிடைக்காது. சில வார்த்தைகள் தான் சேரும். அந்த மந்திரங்களை ஒவ்வொரு வார்த்தையாக ஆராய்ந்து சிந்தனை செயது அதன் அர்த்தங்கள் மனதில் குடி புகுந்தால் தான் அதன் தனி ருசி தெரியும். அதுவே நம்மை சூழ்ந்துள்ள துக்கம் துன்பங்களை, இதெல்லாம் வெறும் மாயை தான் என்று புரிந்து கொள்ள உதவும். உலகே மாயம் வாழ்வே மாயம்.

श्रद्धाभक्तिध्यानयोगान्मुमुक्षॊः
मुक्तेर्हेतून्वक्ति साक्षाच्छ्रुतेर्गीः।
यो वा एतेष्वेव तिष्ठत्यमुष्य
मोक्षोऽविद्याकल्पिताद्देहबन्धात् ॥४६॥

Shruti herself says that shraddha, bhakti and dhyanayoga (faith, devotion and the practice of meditation) are the means by which liberation can be attained. Whosoever pursues this path is liberated from the bondages of the body created as a result of ignorance of the real nature of the Self.

ஸ்ருதி ஸ்ம்ரிதி என்று வாயால் சொல்லுகிறோமே அந்த சுருதி என்ன சொல்கிறது? ஸ்ரத்தை, பக்தி, தியான, யோகப்பயிற்சி, ஆகியவை மூலம் தான் முக்தி பெற தேவையான வைராக்கியத்தை கொடுக்கும். நமக்கு நேரும் துன்பங்கள் துக்கங்கள் எதனால் என்று முதலில் புரிந்து கொள்வோம். ஐம்புலன்கள் ஆட்டிவைக்கும் இந்த தேகத்தால் உண்டாகும் பந்தத்தினால் தான். இப்படி உண்மையான ஆத்மாவை புரிந்து கொள்ளாமல் நாம் தடுமாறுவதை தான் அஞ்ஞானம் என்பார்கள்.

अज्ञानयोगात्परमात्मनस्तव
ह्यनात्मबन्धस्तत एव संसृतिः।
तयोर्विवेकोदितबोधवह्नि-
रज्ञानकार्यं प्रदहेत्समूलम् ॥४७॥

It is only because of ignorance that you, who are the supreme self, have the experience of bondage to the not-self. This bondage, created by ignorance, will be rooted out by the fire of knowledge which arises from discrimination between the self and the not-self.

மேலே சொன்ன அஞ்ஞானத்தால் தான் நாம் மிக உயர்ந்த பரமாத்மாவை நம்முள் காண தவறுகிறோம். நிழலை நிஜமென்று தேடி ஓடி பிடிக்கமுடியாமல் வாடுகிறோம். இதில் இருந்து எப்படி தப்புவது? சுலப வழி ஒன்று இருக்கிறதே. காட்டுச்செடி, கள்ளிச்செடி முள் செடி எல்லாம் தீயிட்டு வேரோடு பிடுங்கி அப்புறப்படுத்துகிறோமே அது போல் மனதிலிருந்து இப்படிப்பட்ட நம்மை தவறான வழியில் இட்டுச் செல்லும் பந்தங்களை வேரோடு வெளியேற்றவேண்டும்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...