கிருஷ்ணன் பிறந்த நாளை தான் ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி ஸ்ரீ ஜெயந்தி என்றெல்லாம் கொண்டாடுகிறோம்.
கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்று வடமொழியில் தேவநாகரியில் இதை சொல்வோம். இது அனைத்து ஹிந்துக்களாலும் வருஷாவருஷம் ஆவலாக எதிர்பார்த்து கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. அதிலும் வைஷ்ணவர்கள் கொண்டாடும் ஆனந்தத்தை சொல்ல வேண்டுமா?
கிருஷ்ணன் யார்? மஹா விஷ்ணுவின் எட்டாவது அவதாரம்.
உலகத்தில் எந்த குழந்தையும் படாத, நினைத்துக்கூட பார்க்கமுடியாத பயங்கர ஆபத்துகளை சந்தித்த எனக்கு தெரிந்த ஒரே குழந்தை கிருஷ்ணன் தான். யார் உதவியும் இன்றி தன்னை அணுகிய அத்தனை ஆபத்துகளையும் எந்த ஆயுதமும் இல்லாமல் தானே தவிர்த்துக் கொண்ட ஒரே அதிசய குழந்தையும் அவனே தான். அவன் நம்மைக் காக்கும் கடவுள், அவனைக் காத்துக்கொள்ள அவனுக்குத் தெரியாதா என்ன?
ஆவணியில், கிருஷ்ண பக்ஷத்தில் அதாவது பௌர்ணமி வெளிச்சத்திலிருந்து அமாவாசை இருளுக்கு செல்லும் பாதி மாசத்தில் (கிருஷ்ண என்றால் கருப்பு, இருட்டு என்று அர்த்தம்) எட்டாவது நாளான அஷ்டமியில் பிறந்தவன். அதனால் கருப்பன் என்ற பொருள் படும் கிருஷ்ணன் என்ற பெயர் கொண்டவன்.
கிருஷ்ணனின் பால்ய லீலா விநோதங்களை பாகவத புராணம் அற்புதமாக சொல்கிறது. அதற்கு ராச லீலா, கிருஷ்ண லீலா என்று பெயர். இரவு பகல் பாராமல் அனைவரும் ஆடி பாடி மகிழ்வார்கள். அதுவும் கிருஷ்ணன் பிறந்த நடுராத்திரி இன்னும் விசேஷமாக கொண்டாடப் படும். அநேக பக்தர்கள் உபவாசம் இருப்பார்கள். பஜனை, மஹோத்சவங்கள் கொண்டாடப்படும். அதுவும் கிருஷ்ணன் பிறந்த மதுரா, பிருந்தாவன க்ஷேத்ரங்களில் கோலாகலத்தை சொல்லி முடியாது. இந்திய கண்டத்தில் எங்கெல்லாம் வைஷ்ணவர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் குட்டி குட்டி பிரிந்தாவனங்கள் மதுரா கோகுல உத்சவங்கள் தான். மணிப்பூர், அஸம், வங்காளம், ஒடிஷா, மத்திய பிரதேஷ், ராகஸ்திஜாம். குஜராத், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் இன்னும் விட்டுப்போன அனைத்து பிரதேசங்களிலும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடாதவர்களே கிடையாது.
ஜென்மாஷ்டமி விழா எப்போதும் வடக்கே நந்தோத்சவம் என்ற ஒரு பண்டிகையை ஒட்டி கொண்டாடப்படும். கிருஷ்ணன் பிறந்த ஆனந்தத்தில் நந்தகோபன் ஊரில் அனைத்து கோப கோபியர்களுக்கு எண்ணற்ற பரிசுகள் கொடுத்த விழா தான் நந்த உத்சவம்.
மதுராவில் சிறையில் தேவகி வசுதேவர் தம்பதிகளுக்கு எட்டாவது பிள்ளையாக அஷ்டமி அன்று நடுராத்தரியில் பிறந்தவர் கிருஷ்ணன். கிருஷ்ணன் பிறந்த சமயம் எங்கும் அநீதி அக்கிரமம் நிரம்பி வலிமை மிக்க அரக்க குணம் படைத்தவர்களால் எண்ணற்ற துன்பங்களை மக்கள் அனுபவித்து வாடிய காலம். அதர்மமும் அநீதி, அக்கிரமம் என்றும் நிலைத்திருக்க முடியாது அல்லவா. தக்க நேரத்தில் அவை நீக்கப்படும். அதற்கென்று ஒருவர் வருவாரே. அவர் தான் கிருஷ்ணன் துவாபர யுகத்தில்.
TO CONTINUE......
No comments:
Post a Comment