Monday, August 7, 2017

​ மஹா பெரியவாளின் அபூர்வ விளக்கம் ​


​               ​


​        மஹா பெரியவாளின்  அபூர்வ விளக்கம் ​


​கோவிலுக்குள் செல்கிறோம்.   அங்கே  ஆகம சாஸ்திர  விதியின் படி  எங்கெங்கே  என்னென்ன  விகிரஹங்கள் பிரதிஷ்டை பண்ண வேண்டுமோ அங்கே தான்  அந்தந்த  சுவாமி சந்நிதி இருக்கும்.   எல்லா கோவில்களிலும் இதை காண்கிறோம்.  

உதாரணமாக,   சிவன் கோயில்களில் கர்ப்ப க்ருஹத்தில் உள்ள லிங்கத்தை மஹாலிங்கம் என்கிறோம். எந்தக் கோயிலிலும் மஹாலிங்கத்திற்குக் கபாலீச்வரர் என்றோ வன்மீகநாதர் என்றோ பல பெயர்கள் உண்டு. ஆனால் ஒரு மஹாலிங்கத்துக்கு மாத்திரம் மஹாலிங்கம் என்றே பெயர் மட்டுமே  இருக்கிறது.

அந்த மஹாலிங்கம் மத்தியார்ஜுனத்தில் இருக்கிறது. மத்தியார்ஜுனம் என்பது திருவிடைமருதூர். அங்குள்ள லிங்கத்தை மஹாலிங்கம் என்று விசேஷமாகச் சொல்லுகிறோம். 

இன்னுமொரு  அதிசயம் உங்களுக்கு தெரியுமா?

நமது  சோழதேசமே ஒரு கோயிலாக இருக்கிறது.    “சிவ: சோளே” என்று சொல்வதுண்டு. சைவத்திற்குச் சோழதேசம் பிரசித்தம் என்பது அதன் அர்த்தம். எப்படி என்று மகா பெரியவா விளக்கி இருக்கிறார்.  

மேலே  சொன்னதை நினைவில் கொள்ளுங்கள். கோவிலில் எங்கெங்கே என்னென்ன விக்ரஹ  சந்நிதி விஷயம்:  எந்தச் சிவன் கோயிலிலும் 

கன்னி மூலையில் விக்நேச்வரரும், 
மேற்கில் சுப்பிரமணியரும்,
 வடக்கில் 
​சண்டிகேஸ்வரர் 
 தெற்கில் தக்ஷிணாமூர்த்தியும்,
 அக்கினி மூலையில் சோமாஸ்கந்தரும்,
 ஈசானததில் நடராஜரும் இருப்பார்கள்.

​இது தான் வழக்கம் அல்லவா?   இதை  அப்படியே ஒரு பெரிய   தேசமாக மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மேலே சொன்ன சந்நிதியும்  ஒவ்வொரு  ஊர்  அந்த தேசத்தில்.   எப்படி?



 மத்தியார்ஜுனத்திற்கு 
​ (திருவிடை மருதூர்)  ​
நேர்மேற்கில் பத்துமைல் தூரத்திலுள்ள
​து ​
 ஸ்வாமிமலை சுப்பிரமணிய க்ஷேத்திரம். 

அதற்குச் சிறிது தெற்கில் கன்னி மூலையிலுள்ள
​து ​
 திருவலஞ்சுழிக் கோயில் திருவிடைமருதூர் மஹாலிங்கத்துக்கு விக்நேச்வரர் சந்நிதி. 

திருவிடைமருதூருக்குப் பத்துமைல் தெற்கில் ஆலங்குடி என்ற ஊர் இருக்கிறது. அது தக்ஷிணாமூர்த்தி க்ஷேத்திரம். 
​திருவிடை மருதூருக்கு 
நேர் வடக்கிலுள்ள திருச்சேய்ஞலூர் என்பது சண்டேச்வரர் கோயில். 

திருவிடைமருதூருக்கு நேர் கிழக்கிலுள்ளது திருவாவடுதுறை. அது நந்திகேசுவரர் சந்நிதி. திருவாரூரில் சோமாஸ்கந்தர், தில்லையில் நடராஜர், சீர்காழியில் பைரவர். இப்படிச் சோழ தேசமே ஒரு சிவாலயமாக இருக்கிறது.

​இன்னொரு  கேள்வி. 


''​
ஸ்வாமி இருக்கிறாரா? இருந்தால் அவர் எப்படி இருக்கிறார்? என்ன பண்ணுகிறார்?
​''​

கேள்விக்குப் பதிலாகக் கண்ணன் கீதையில் அர்ஜுனனுக்கு
​ என்ன  
உபதேசம் பண்ணுகிறார்
​?

“அப்பா, ஈச்வரன் தான் ஒவ்வொருத்தருடைய இருதயத்திற்குள்ளும் இருந்து அவர்களை ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறான்” என்று சொல்கிறார். நீங்கள் பொம்மலாட்டம் என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா? உள்ளே ஒருத்தன் இருந்துகொண்டு பொம்மைகளை உள்ளேயிருந்தே அனேகம் கயிறுகளைக் கட்டிக்கொண்டு அவற்றை இழுப்பதன் மூலம் ஆடவைப்பான். அந்தப் பொம்மைகள்போல் இருக்கிற தேகத்தையுடைய எல்லாப் பிராணிகளையும் உள்ளேயிருந்து ஒருத்தன் ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறான். அவன் ஆட்டுகிறதனால் தான் இவை ஆடுகின்றன. அந்த ஈச்வரன் தான் எல்லாப் பிராணிகளுடைய ஹ்ரு
​தயத்திலேயும் 
 இருக்கிறான் என்று கண்ணபிரான் உபதேசம் செய்கிறார்.



 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...