KUTTI KADHAI
29
ப்ரேமையின் உச்சம்
நந்தவனத்தில் ஒருநாள்
"ஏன் உங்கள் தலை எதையோ ரசித்தவாறு அசைந்து கொண்டிருக்கிறது?"
“..........”
"நான் கேட்பது உங்கள் காதில் விழவில்லையா?"
".........”
" என்ன அப்படி ரொம்ப ரசித்து கேட்டுகொண்டிருக்கிரீர்கள் என்று கிருஷ்ணன் தோளை அசைத்து
ராதை கேட்டாள்?"
" ஆஹா! என்னமா பாடறார் அவர். என்னை எப்போதும் கட்டிபோட்டே வைத்து விடுகிறார். விடுபட முடியவில்லையே?"
என்றான் கண்ணன்.
" எப்பவும் சூர்தாஸ் சூர்தாஸ் என்று அவரை பற்றியே சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே அப்படி என்ன
சூர்தாஸ் உங்களை மயக்கி வைத்திருக்கிறார்?
நானே சென்று பார்க்கிறேன் என்று ராதை
சொல்ல “நீ அவர் கிட்டே போகாதே, போகாதே” என்று கிருஷ்ணன் தடுத்தான்
“ஏன் அவர் கிட்டே போக கூடாது கண்டிப்பாக போகபோகிறேன்” என்று சூர்தாஸ் பாடிக்கொண்டிருந்த கோவிலுக்கு சென்றாள். பிறவி குருடரான சூர்தாஸ் அருகில் அவள் போய் நின்றதும் அவளது கொலுசு சப்தம் தெய்வீக சப்தம் எழுப்பியதும் உணர்ந்த சூர்தாஸ் கையை நீட்டி அவள் கொலுசை பிடித்துகொண்டார்.
“விடுங்கள் என் காலை” என்ற போதும் கொலுசை விடவில்லை அவர்.
“நான் ராதை கிருஷ்ணனை சேர்ந்தவள்” என்றாள்.
“எனக்கு நீ யார் என்று தெரியாது. பார்க்கவும் முடியாது. போய் கிருஷ்ணனை வரச்சொல்”
என்று கொலுசை காலிலிருந்து உருவி எடுத்து வைத்துகொண்டார். ராதை கூப்பிட கிருஷ்ணன் வந்தான். சூர்தாஸ் பக்தியை மெச்சி பார்வை அளித்தான். சூர்தாஸ் உங்களுக்கு வேண்டிய வரம் கேளுங்கள் என்றான்.
" கிருஷ்ணா, உன்னை பார்த்ததே இல்லை. காது நிறைய உன்னை பற்றி கேட்டிருக்கிறேன் வாய் நிறைய உன்னை பாடிக்கொண்டே இருக்கிறேன் கண் கொடுத்த உன்னை கண் நிறைய பார்த்து விட்டேன் எனக்கு வேண்டியது கிடைத்து விட்டது கண்ணின்றியே வாழ பழகிவிட்டேன். தயவு செய்து என்னை மீண்டும் குருடனாக்கிவிடு. உன்னை பார்த்த கண்ணால் வேறு எதையும் நான் பார்க்க விரும்பவில்லை"
“இந்தா தாயே ராதை உன் கொலுசு" கண்ணனும்
இதையும் திரும்பும்போது ராதை சூர்தாஸ்
பற்றியே அவனிடம் பேசிகொண்டிருந்தாள் வாய் ஓயாமல். இதற்கு தான் சொன்னேன் சூர்தாசை போய் பார்க்காதே என்று. புரிகிறதா என்றான் கண்ணன்.!”
ப்ரேமையின் உச்சம் ராதையா சூர்தாஸா?? நீங்களே சொல்லுங்களேன்?
No comments:
Post a Comment