Monday, December 24, 2012

MORAL STORY 62 பூனை குட்டி



குட்டி கதை 62        பூனை குட்டி 
கோரா கும்பர் என்றும்  ராகா கும்பர் என்றும் அழைக்க பட்டாலும் நாம் நம் குட்டி கதைக்காக  அவரை கும்பர்  என்றே  அழைக்க போகிறோம்.கும்பர் ஒரு  குயவர் மண் பாண்டங்கள்  செய்து  விற்று  அதில் கிடைக்கும்  சொல்ப வருமானத்தில்  பாண்டு ரங்க பக்தர்களுக்கு  அன்னதானம்  செய்பவர் அவருக்கேற்ற  மனைவி  பாகா.கும்பர்  பாண்டு ரங்கனையே   மூச்சாக கொண்டவர். மண்  தோண்டும் போது, சேறு மிதித்து உழை மண்ணாக்கி  பாண்டம்  செய்யும்போது, உலர  வைக்கும் போது   சூளையில் சூடேற்றி  பாண்டத்தை உறுதிப் படுத்தும்போது, தலையில் சுமந்து  சாவடியில்  விற்கும் போது, விற்ற பணத்தை  எண்ணும் போது, எப்போதுமே "பாண்டுரங்கா, விட்டலா" ஒன்றே  ஸ்மரணை.  
முட்டாள்,  பைத்தியம், பிழைக்க தெரியாதவன் என்றெல்லாம்  பேர் நிறைய கிடைத்தது,   இதை யெல்லாம்  லட்சியம்  செய்ய அவருக்கு  நேரமில்லை. ஒரு நாள்  மண் பாண்டங்களை சூளையில் அடுக்கி  தீ மூட்டியபோது  ஒரு  பூனை  அவரை சுற்றி சுற்றி வந்து  வாய் ஓயாமல்  கத்தியது.  சூளையின்  அருகில் சென்று தீயின் அனல் சூடு  பொருக்க முடியாமல் கத்தியது. ஆனால் இடத்தை விட்டு  நகரவில்லை.  இதை  கவனித்த  பாகா கணவரிடம் "ஐயோ, இந்த பூனையின் 3 குட்டிகள் ஒரு மண் சட்டியில் தூங்கிக் கொண்டிருந்ததே பார்க்கவில்லையா?அந்த  சட்டியையும் தீ மூட்டத்தில் வைத்து விட்டீர்களா என்று அவரை கேட்டபோது தான் அந்த பூனையின்  தாய்ப்பாசமும் குட்டிகளுக்காக அது படும் வேதனையும் கும்பருக்கு புரிந்தது.  
"கிருஷ்ணா, பாண்டுரங்கா,நான் செய்த பெரிய பாபத்திற்கு எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும்  கொடு.தயவு செய்து அந்த நிரபராதி பூனைக் குட்டிகளை காப்பாற்று உன்மீது நான் வைத்திருக்கும் பக்தி உண்மை யென்றால்  தயவு செய்து  அவற்றை மீட்டு கொடு" என்று வேண்டினார். மறு நாள்  சாயங்காலம் தீ  மூட்டம் சூடு குறைந்து ஒவ்வொரு மண் பாண்டமாக வெளியே எடுக்கும்போது ஒரு சட்டியில் 3  பூனைக்குட்டிகள் எந்த வித ஆபத்தும் இன்றி இருந்ததை கண்டார். தாய்ப் பூனை அன்று மாலை வரை  அங்கேயே சுற்றிகொண்டிருந்தது.அந்த சட்டியை வெளியே எடுத்ததை பார்த்ததும் ஒரே ஓட்டமாக அவரிடம் வந்து அந்த சட்டியை எட்டி பார்த்தது. மூன்று குட்டிகளும் தூங்கிக்கொண்டிருந்ததைக் கண்டு மகிழ்ந்தது. "பாண்டுரங்கா, உன் கருணையே கருணை" என்று சொல்லிக் கொண்டு அந்த பூனைக்குட்டிகளை சட்டியிலிருந்து எடுத்து பூனையிடம் விட்டார். அது அவற்றை ஒவ்வொன்றாக வேறு பாதுகாப்பான இடத்துக்கு  மாற்றிகொண்டிருந்தது. பாண்டுரங்கன் தன் தவறை மன்னித்து அந்த பூனைக்குட்டிகளை காப்பாற்றிய நன்றியில் கும்பரின் வாய் வழக்கம் போல் "பாண்டுரங்கா விட்டலா" என்று மனமார வாழ்த்திக் கொண்டிருந்தது.

உண்மையான பக்தி இருப்பின் இறைவன்  வேண்டியதை எல்லாம் தருவான் அல்லவா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...