Tuesday, December 4, 2012

moral story 28 கிருஷ்ண கானம்




Kutti kadhai 28

                                    
கிருஷ்ண கானம் 

அந்த  வயோதிகருக்கு  இனிய குரல்.  சர்க்கரை  பந்தலில்  தேன் மழை  என்பார்களே  அது  அவர்  இனிமையான குரலில் கிருஷ்ணா கிருஷ்ணா  கிருஷ்ணா என்று தனக்கு   தோன்றியவாறெல்லாம்  அனுபவித்து  பாடும்  பதங்கள் தானோ?  தட்டு  தடுமாறி  
காட்டு வழியில்   தனியே போய்கொண்டிருக்கிறாரே -  எந்த பக்கம் போனாலும்  அது  பிருந்தாவனத்தில் கொண்டு சேர்க்குமா?   கண் பார்வையில்லை  பிறவியிலிருந்தே.   இந்த குறையே அவரை  உடன் பிறந்தோர்,  தாய்  தந்தை  அனைவரிடமிருந்தும் அவரை  ஒதுக்கி  வைத்தது.  எனவே  தான் மனத்தின்  முழு இடத்தையும்  கிருஷ்ணன் பிடித்துக் கொண்டுவிட்டான்  போலிருக்கிறது.  
“ஐயோ!   இதென்ன  அந்த  மனிதர்  கண் தெரியாதவர் பாடிக்கொண்டே தரையோடு தரையாய் இருக்கும்  அந்த  கிணற்றில் விழுந்து விட்டாரே?”   சற்றும் கலங்கவில்லை.  கிருஷ்ண கானம்
தடைபட வில்லை.  தட்டு தடுமாறி  கிணற்றில் ஒரு  படிக்கட்டை பிடித்துக்கொண்டுவிட்டார்.
மேலே ஏற முடியவில்லை.    திக்கற்றவருக்கு தெய்வமே  துணை அல்லவா?    எங்கோ   தூரத்தில்   மாடு  மேய்க்கும் சிறுவன்  ஒருவனுக்கு  அவர்  குரல்  கேட்டது  யார்  என்று அருகில் வந்தான்  குரல்  ஏதோ  கிணற்றிலிருந்து  வருகிறதே  என்று  ஆச்சர்யமாய்  எட்டி பார்த்து விஷயம் புரிந்து கொண்டான்.  பாவம்  கண்ணில்லாதவர்.    கிணற்றில் இறங்கி  ஒரு கை நீட்டி
" என் கையை  பிடித்துகொள்ளுங்கள்”  என்று  அவர் கையை  பிடித்து மெது மெதுவாக  அவரை  கரையேற்றினான்

 “அப்பா!, தேனினும் இனிய  குரல்  கொண்டவனே நீ யாரப்பா?” 
 “நான்  இங்கு  வசிப்பவன் மாடு மேய்ப்பவன்!” 
 “எப்படியப்பா தக்க நேரத்தில்  இங்கு வந்து என்னை காப்பாற்றினாய்?” 
உங்கள் குரல் கேட்டது.  உங்கள்  பாட்டு  எனக்கு  பிடித்தது!”.
“நான்   யாரையும் உதவிக்கு அழைக்கவில்லையே.  நீ  எப்படி வந்தாய்?”  
“என்  பெயரை சொல்லி கூப்பிட்டீர்களே!” 
“கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா,  இதுவா உன் பெயர்?” 
“ஆமையா!”
“நான்   உங்களை  பிருந்தாவனத்துக்கு அழைத்து போகிறேன்   நீங்கள்  பாடிக்கொண்டே வாருங்கள்” 
சூர்தாஸ் புளகாங்கிதம் அடைந்தார்.  கிருஷ்ணன்  அவர்  பாட்டில் தன்னை இழந்தான்.
  உண்மையான பக்தி  இறைவனை கட்டி போடும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...