Monday, December 3, 2012

MORAL STORY நாங்க ஒரு ஜோடி



  KUTTI KADHAI                                                                 நாங்க  ஒரு  ஜோடி 
கிருஷ்ணாபுரம் ஒரு கிராமம்அதில் ஒரு விவசாயி கோவர்தனன். தன் பண்ணையில் காவலுக்கு  சில  நல்ல  ஜாதி நாய்களை வளர்த்து வந்தான்.  அவை குட்டி போட்டு நாய்கள் அளவுக்கு மீறி இருந்தன.  என்ன செய்வது என்று தலையை சொரிந்து கொண்டிருந்தபோது  ஒரு நாய்  6  குட்டிகளை போட்டுவிட்டது
இனியும்  பொறுக்கமுடியாதுஒன்று நாய்கள் குறையவேண்டும்  இல்லை  நீ  வெளியேற வேண்டும் " என்று  அவன் மனைவி கூச்சலிட்டாள்.  தோட்டத்தின் வாயிலில்  ஒரு விளம்பரம் தொங்கியது.  "நல்ல ஜாதி நாய்குட்டிகள் விற்பனைக்கு விலை ஐம்பது ரூபாய் மட்டுமேஎன்று.  அண்டை அயலில் இருந்து அநேகம் பேர் வந்து குட்டிகளை பார்த்து செலக்ட் பண்ணி  விற்றாகி விட்டது.  ஒன்றிரண்டு நாய்கள் மட்டுமே இருந்தது

அப்போது ஒருநாள்  ஒரு சிறு பையன் வந்து எனக்கு ஒரு நாய் தர முடியுமா  என்று கேட்டான்.  விவசாயி அவனை  ஏற இறங்க பார்த்தான்.  உன்னிடம்  ஐம்பது ரூபாய் உள்ளதா  என்றான்.  அந்த  ஒன்பது வயது சிறுவன்   தன்னிடமிருந்த  காசுகளை  எல்லாம்  சேர்த்து எண்ணினான்.  முப்பது ரூபாய்  தேறும்.  என்றான்.  விவசாயிக்கு அந்த சிறுவனின்  ஆசையை புறக்கணிக்க மனமில்லை.  வந்த விலைக்கு ஒரு குட்டியை  தள்ளிவிடலாம்  என நினைத்தான்.  சரி  இப்போது  நாய் குட்டிகளை அழைக்கிறேன்.  எந்த குட்டி வேணுமோ  அதை எடுத்துக் கொண்டு போ  என்று சொல்லி  ஒரு  விசில் அடித்தான்.  பண்ணையிலிருந்து   ஒரு  தாய் நாய்குட்டிகள்  புடை சூழ  ஓடிவந்தது.  இரண்டு  குட்டிகள்  வேகமாக ஓடி வர   ஒரு குட்டி  விழுந்து புரண்டு மெதுவாக  பின்னால்  வந்தது.  இதில் எது வேண்டும்  என்று இரண்டு குட்டிகளை காட்டிய போது  பையனின்  கவனம்  பூரா பின்னால்  ஓடிவந்த  மன்றாவது நாய் குட்டிமேலேயே இருந்தது.   அது வேண்டும்  என்றான்.  "பையா,   அந்த குட்டி கொஞ்சம்  கால்  ஊனம்.  வேகமாக ஓடி உன்னோடு விளையாட முடியாது.  எனவே  இந்த இரண்டிலே  ஒன்றை எடுத்துக்கோ."   
பையன்,  முப்பது ரூபாய் எடுத்து கொடுத்தான்.   குறைச்ச விலை  என்பதற்காக  ஏன்  ஊனமான  நாய்க்குட்டியை  கேட்கிறாய்.  நான் தான்  வேறு தருகிறேன்  என்றேனே என்றான் விவசாயி.   பையன் சொன்னான்: " எனக்கு  வேகமாக  ஓடும்  நாய் வேண்டாம்அந்த குட்டியே   எனக்கு  தேவைஏனென்றால்  நான்  தான்  வேகமாக  ஒடமுடியாதே " என்று பையன்  தன  இடது காலை காட்டியபோது  முட்டிக்கு  கீழே  ஒரு  மரத்தில் செய்த  கால்  தோன்றியது.
நீதி:: ஊனம் உடலில் இல்லை.மனத்திலே தான் உள்ளது 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...