Monday, December 3, 2012

MORAL STORY 23 அதிசய குழந்தை



Kutti kadhai 23


அதிசய  குழந்தை 

"அடியே,   விசாலாக்ஷி இந்த ஆச்சர்யத்தை  கேள்விபட்டியோ?
எதை சொல்றே  நீ சத்யா, ,    நம்ப யசோதை வீட்டில்  நேற்று  நடந்ததைபத்தி தானே?
"வேறே  என்ன விஷயம் இருக்கு  பேச??
"ஆமாம்.  கேள்விபட்டதும்  நானும்  ஓடினேன் அவ வீட்டுக்கு. ஒரே  கூட்டம். முண்டியடிச்சு  உள்ளே போய்  யசோதையை கேட்டேன்  அழுதுண்டே  சொன்னாள்"    
"என்ன" .
"யாரோ  ஒரு  சின்ன  அழகான  பெண் காலம்பற  வந்தாளாம்.  உங்க வீட்டு  குழந்தை   ரொம்ப அழகாக இருப்பானாமே  நான் பார்க்கலாமா  என்று கேட்டதாலே, இந்த  அசடு  யசோதா  குழந்தையை தூக்கி அவள் கையிலே  தந்திருக்கு.  அவள்  சப்பளிக்க  உட்கார்ந்து  மடியிலே  போட்டு  கொஞ்சியிருக்கா. நான்  இந்த குழந்தைக்கு  பால் குடுக்க ஆசையா இருக்குன்னு  கெஞ்சியிருக்காஇந்த பேக்கு சரின்னு தலையாட்டியிருக்கு!".
"அப்புறம்?" 
"விழுப்புரம்!"  என்ன  அவசரம்  கதையா சொல்றேன் இப்போ?" 
"சரி, சரி,  நீயே  சொல்லுடி"     
"என்ன ஆச்சோ தெரியல்லை.  குழந்தை  அவள் மார்பகத்தில்  வாய் வச்சு குடிக்க முயற்சித்தபோதே  அந்த  பெண்  அலறிண்டே  அப்படியே  சாஞ்சுட்டாளாம்அவ இருந்த  இடத்திலே ஒரு பெரிய  ராக்ஷசி   கோரமாக செத்து கிடந்தாளாம்குழந்தை அவ மேலே  விளயாடிண்டிருந்ததை பாத்துட்டு  நந்தகோபனும்  மற்ற கோபர்களும்  ஓடி வந்து  குழந்தையை  அப்புறபடுத்திட்டு   அந்த  ராக்ஷசி யாருன்னு கண்டுபிடிச்சிருக்காஅப்பறம் அவளை  தூக்கிகொண்டு போய்  ஊருக்கு வெளியே  எரிச்சாளாம்".   
"யாராம்?"
"பூதனை  என்று  பேராம். குழந்தையை கொல்ல வந்திருக்கலாம்  என்று சொல்றா.  ஏதோ யசோதை பண்ணின புண்யம்  கடவுள் காப்பாத்தியிருக்கார். இல்லேன்னா குழந்தைக்கல்லவோ  ஆபத்து  ஏற்பட்டிருக்கும்."
"ஐயோ.  குழந்தை  எப்படி இருக்கு?" 
"அந்த  கரிகுண்டன் எப்போதும்போல  சிரிச்சுண்டே  தான்  இருக்கான்  எல்லாரையும்  பார்த்து  மயக்கறான்.யசோதை கையை பிடிச்சுண்டு  தூக்கு  என்கிறான்"
"என்னமோ போடி,  அந்த  பயலை பத்தி  ஒவ்வொருநாளும்  ஒவ்வொரு சேதி வந்துண்டே இருக்கு."
"சரியா சொன்னே.  கிருஷ்ணன்  ஒரு  அதிசய குழந்தை தான்  சந்தேகமில்லை ".  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...