KUTTI KADHAI மனைவியின் அக்கறை
வள்ளுவன் வாசுகி கணவன் மனைவி.
இருவரும்ஒரு மன நலமருத்துவ மனையில் .நோயாளிகள். தனித்தனியாக பக்கத்து பக்கத்து அறையில் அனுமதிக்கபட்டிருந்தனர்.
அன்று பௌர்ணமி. கணவனும் மனைவியும் மருத்துவ மனை வளாகத்தில் இருந்த நீச்சல்குளம் அருகே நடந்துகொண்டிருந்தபோது கணவன் திடீரென்று பெரிதாக சிரித்து
கொண்டு குளத்தில் குதித்துவிட்டான்.அருகிலேயே நடந்துகொண்டிருந்த
வாசுகி தானும் உடனே குளத்தில் குதித்து விட்டாள்.கணவனை
மெதுவாக மேலே தூக்கி கொண்டு வந்துவிட்டாள்.
விஷயம் காவலாளிகள் மூலம் டாக்டர்களை எட்டி உடனே இருவருக்கும் தக்க சிகிச்சை செய்து அறைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் டாக்டர்கள்
விஷயம் காவலாளிகள் மூலம் டாக்டர்களை எட்டி உடனே இருவருக்கும் தக்க சிகிச்சை செய்து அறைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் டாக்டர்கள்
கூட்டத்தில் அன்று இரவே வெகுவாக பரிசீலிக்கப்பட்டு ஏகமனதாக ஒரு முடிவுக்கு
வந்தனர்
"எப்போது கணவன் நீரில் மூழ்கிவிட்டான் என அறிந்து அவனை காப்பாற்ற முயற்சி செய்து அவன் உயிரை காப்பாற்றினாளோ அந்த பெண்மணி மனநிலை நோயாளி அல்ல. அவளை மனநிலை மருத்துவ நிலையத்தில்
இனியும் வைத்திருப்பது சரியல்ல. இன்றே அவளை வீட்டுக்கு
அனுப்பி வைப்பதுவே முறை" தலைமை அதிகாரி
மறுநாள் காலையில்
தம்பதிகள்
இருந்த அறைகளுக்கு விசிட் செய்து கடைசியில் அந்த பெண்மணியின் அறைக்கு வந்து அவளிடம் சொன்னார்
"அம்மா
உங்களுக்கு இரண்டு செய்திகள் சொல்லப்போகிறேன்.ஒன்று நல்லசெய்தி.மற்றது கெட்டசெய்தி""
“என்ன செய்திகள் சொல்லுங்கள்" என்றாள் மனைவி.
"நல்ல செய்தி, நீங்கள் எல்லோரையும் போல நல்ல மனநிலையில் தான் உள்ளீர்கள் எனவே உங்களை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்புகிறோம்.
"கெட்ட செய்தி என்னவென்றால் நேற்றிரவு உங்கள் கணவர் பாத்ரூமில் தன் இடுப்பு பெல்டை எடுத்து கழுத்தில் சுற்றிக்கொண்டு தூக்கு போட்டுகொண்டு தற்கொலை செய்துகொண்டு விட்டார்"
“அட பாவமே நான் அவர் அறைக்கு நேற்று இரவுசென்று இருந்தபோது அவர் தண்ணீரில்
விழுந்து விட்டதால் உடலில் உடையில் எல்லாம் ஈரம் கொஞ்சம் இருந்தது அவரை காற்றில் உலர வைப்பதற்கு மின்
விசிறியில் பெல்ட் கட்டி தொங்க விட்டிருந்தேனே எப்படி இறந்தார் என்று கவலையுடன் கேட்டாள்"
தலைமை அதிகாரி தடால் என்று கீழே விழுந்தார். அந்த பெண்மணி அவருக்கு வைத்தியம் செய்வதற்குள்
உதவியாளர்கள் அவரை தூக்கிக்கொண்டு போயினர்
சிலரது உபகாரம் உபத்திரமாவதும் உண்டு
No comments:
Post a Comment