Monday, December 24, 2012

moral story 63 லக்ஷ்மி கடாக்ஷம்



குட்டி கதை  63    லக்ஷ்மி கடாக்ஷம்

"இன்னிக்கு  வீட்டில்  என்ன விசேஷம்?  ஏதோ  பூஜை எல்லாம்  பண்றே
"லக்ஷ்மி  கடாக்ஷம் வேணும் என்று ருக்மணிக்கு  லக்ஷ்மி பூஜை ?
"புரியல்லை,  எதுக்காக திடீர்னு இப்படி  ஒரு  பூஜை?
"நீங்க  கிருஷ்ணனை, பாண்டுரங்கனை  எப்பவும்  பாடறேள், ஆடறேள்,  அதுபோல தான் இதுவும்"
 "பூஜை பண்றது  நல்லது தான். ஆனால்  காம்யார்த்தமா  எதையாவது கிடைக்கணுனு வேண்டிக்கறது  சரியில்லை. நமக்கு  எது தேவை என்று  விட்டலனுக்கு தெரியும்.   தானே  அதை  நமக்கு  கொடுத்து கொண்டு தானே  இருக்கான். ". 
கொஞ்சநாள் கழித்து  வீட்டில்  ஜீஜாவுக்கு கொஞ்சம்  பணம்  கிடைத்தது. புதிய  துணிமணிகள்  எல்லாம் தனக்கும்  குழந்தைகளுக்கும்  வாங்கினாள். அடகு வைத்திருந்த  நகைகளை மீட்டு  அணிந்து கொண்டிருந்தாள்
அவர்  சாப்பிட  உட்காரும்போது தான்  கவனித்தார்.  ஜீஜா  குழந்தைகள்  எல்லாம்  புது  துணிமணிகளோடு. இருப்பதை கவனித்தார்.  ஏது இதெல்லாம்?"
"ருக்மணிக்கு  லக்ஷ்மி பூஜை பண்ணதாலே  வீட்டிலே  இப்போ  கொஞ்சம்  சுபிக்ஷம்"   
அவள்  உள்ளே  சென்று  அவருக்கு  உணவு கொண்டு  வருவதற்குள்  அவர் வெளியே சென்று விட்டார்.
எதோ கோபம்.  தானே  திரும்பி வருவார்  என்று காத்திருந்தாள்.  ஒருநாள்,  இரண்டுநாள்,  மூன்றுநாள்வர் வரவே இல்லை.வழக்கமாக  அவர் செல்லும்  பாண்டுரங்க  பக்தர்கள் நண்பர்கள் கடைத்தெரு எங்கு தேடியும்  "அவர் இங்கு வரவே இல்லையே"  என்ற  சேதி  தான்.  ஒருக்கால்  அடிக்கடி சொல்வாரே  பந்தர்பூர் போகவேண்டும் என்று, அங்கே போயிருக்கலாம் என்று  பந்தர்பூர் சென்று விசாரித்தாள். விவரம் கிடைக்கவில்லை. விட்டலன் முன்  நின்று  ஜீஜா அழுது கொண்டு "  நீ தான்  எனக்கு  அவரை திரும்ப தரவேண்டும்" என்று  பிரார்த்தித்தாள். அவள்  மனத்தில் யாரோ உன் வீட்டுக்கு அருகே இருக்கும்  ஒரு  சிறு  குன்றில் சென்று பார் என்று சொல்வது போல் இருக்கவே  உடனே  தனது ஊரா  தேஹூவுக்கு  திரும்பி  அந்த குன்றில் சென்று பார்த்தபோது  இளைத்து வாடி  விட்டலன்  மேல் அபங்கங்கள் பாடிக்கொண்டு துக்காராம் அமர்ந்திருப்பதை கண்டாள். வீட்டை விட்டு  கிளம்பியவர்  அன்ன ஆகாரமே உட்கொள்ளவில்லை.

கண்ணை திறந்து பார்த்த  துக்காராம்  " ஜீஜா,  இங்கு எதற்கு  வந்தாய்?  நான்  இங்கு  சுகமாக  என் விட்டலன் மேல் அபங்கங்கள் பாடிக்கொண்டு  இருக்கிறேனே?"  என்றார்.    
"நீங்கள்  இல்லாமல்  நானும்  குழந்தைகளும்  எப்படி வாழ்வது?"
"அம்மா,  நீ தான் லக்ஷ்மி பூஜை செய்து  குடும்பம்  நடக்க  தேவையான  பொருள் பண்டம்  எல்லாம் பெற்றுக்கொண்டு இருக்கும்போது  நான்  எதற்குதேவை இல்லையே
"இல்லை,  நீங்கள்  தான்  எனக்கு  வேண்டும்"
"சரி, அப்படியே ஆகட்டும்,  தயவு செய்து  அந்த  நகை நட்டு  எல்லாம்  ஏழைகளுக்கு  தானம் செய்து விடேன். பழையபடியே இருப்போம்"
அவ்வாறே செய்தாள் ஜீஜா.  அவரோடு  சேர்ந்து  தானும்  விட்டலன் ஸ்மரணையில்  ஆழ்ந்தாள்.    
விட்டலன் புன்முறுவலுடன்  ன் ஆசை குழந்தைகளை  ரசித்தான்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...