KUTTI KADHAI 20
பசுவும் பன்றியும்
பரசுராம நகர் 3 வது தெருவில் உள்ள ஒரு சின்ன பார்த்தசாரதி
சுவாமி கோவிலில் ஏறக்குறைய இருபது முப்பது பேர் தன்னுடைய
கதையை கேட்க வந்திருப்பதில் ஸ்வரபூஷண சங்கீத ஸ்லோக
கதா காலக்ஷேப சிம்மம் சுப்பு சாஸ்திரிக்கு பரம சந்தோஷம். கர்ணனின் தான தர்மங்களை விஸ்தாரமாக சொல்லி முடித்தார்.
வெகு நன்றாக பிரசங்கம் செய்து முடித்து சபையை பெருமிதத்துடன் நோக்கியபோது செம்பு பாத்திரக்கடை
சோமசுந்தரம் தலை குனிந்து விசனத்துடன் இருப்பதை கண்டார்.
" என்ன சோமு, எதையோ பறி கொடுத்தமாதிரி..!!
எல்லோருக்கும் நல்லதையே செய்யும் நாராயணன் உன்னை சந்தோஷமாக வாழ வைத்திருக்கும்போது ஏன் கவலை?? என்றார்.
"சாமி, என்னை எல்லோரும் கஞ்ச பிரபு கருமி என்கிறார்களே, என் சொத்து பூரா இந்த கோயிலுக்கு தானே எழுதி வச்சிருக்கேன். ??
"சாமி, என்னை எல்லோரும் கஞ்ச பிரபு கருமி என்கிறார்களே, என் சொத்து பூரா இந்த கோயிலுக்கு தானே எழுதி வச்சிருக்கேன். ??
இதுக்கா கவலை? உனக்கு பசுவும் பன்றியும் என்கிற கதை சொல்றேன் கேள். பசுவை பார்த்து பன்றி கேட்டது. "உன்னை மட்டும் எல்லோரும் கொண்டாடறாங்களே, என்னை திட்றாங்களே.??!!
நீ பால்,மட்டும் தான் கொடுக்கிறே.நான் என்னுடைய உடல் இறைச்சியையே கொடுக்கிறேன்
விதவிதமாக தின்னுட்டும் இளக்காரமா பேசுறது ஏன்??
பசு சொன்னது: "தம்பி நான் உயிரோடிருக்கும்போதே எல்லோருக்கும் பால் தினமும் தரேன்.நீ செத்தப்புறம் தான் உன் சதையை திங்கிறாங்க.
புரிஞ்சுதா? .
இந்த கதை அர்த்தம் சோமசுந்தரத்துக்கு புரியாவிட்டாலும் நாம் புரிந்து கொள்ளவேண்டிய
நீதி:
"வாழும்போதே உன்னாலான உதவியை எப்போதும் இடைவிடாமல் செய்.
பசுவாக உன்னை போற்றுவார்கள். "
No comments:
Post a Comment