Tuesday, December 4, 2012

moral story 27 ச்யாமந்தகம்




KUTTI KADHAI   27                                 ச்யாமந்தகம்
"அப்பா,  முதலில்  யாரை  சந்தேகப்பட்டீர்களோ, அவரே உங்களுக்கு  மிகவும்  வேண்டிய வராகி விட்டாரே !"
 "வேண்டியவர்  மட்டுமல்ல,  என்  அருமை பெண்ணை!.  உன்னை மணக்கபோகும்  மாப்பிள்ளையும்  கூட!" 
"போங்கப்பா,   உங்களுக்கு வேறே  வேலையே இல்லை!".  முகம்  சிவந்தாள்  வெட்கத்தில்  பாமா.
"அப்படி  என்ன  உங்களிடம்  மாற்றம்  ஏற்படுத்தினார்  அந்த  மாயா ஜாலக்காரர்?".
"அவன்  ஒரு  சுத்த  வீரனம்மா.  நீ  கொடுத்து  வைத்தவள் !" 
"என்ன பண்ணினார்  அப்படி?" 
"என்னிடம்  உலகில் எவரிடமும்  இல்லாத  ச்யாமந்தக  மணிமகுடம்  இருந்தது. சூர்யனிடம்   இருந்து  நான்  அதை பெற்றவன்.   அதை ஒருநாள்  கிருஷ்ணன் பார்த்தான்இந்த  ச்யாமந்தகம் என்னிடம் இருக்கட்டும் . இது  வெகு  ஜாக்ரதையாக இருக்கவேண்டியது".  என்றான்.  
என்னவோ  நான்  மழுப்பிவிட்டேன்.  கொடுக்கவில்லை.   உன் சித்தப்பன்  ப்ரசேனன்  எனக்கு தெரியாமல் அதை அணிந்து  காட்டிற்கு வேட்டையாட போயிருக்கிறான்.  அசடன்!..  ஒரு  சிங்கக் குகையில்  நுழைந்தபோது  ஒளிந்திருந்த  ஒரு  சிங்கத்தால்  கொல்லப்பட்டான்.  அந்த காட்டில் ஜாம்பவான்  ஒருநாள்  வந்து  சிங்கத்துடன் மோதி  அதை கொன்று  அதன்  குகையில் இருந்த  ச்யாமந்தகத்தை  தன்  குகைக்கு எடுத்து சென்று  தன்  பிள்ளையிடம் விளையாட கொடுத்தான்
இது  அறியாத  நான்  வீணாக  கிருஷ்ணனை சந்தேகித்தேன். எப்போதோ  அவன்  "என்னிடம் கொடுஎன்றதற்கும்  இப்போது  ப்ரசேனன்  அத்துடன்  மறைந்ததற்கும்  முட்டாள் தனமாக  நான் 
கிருஷ்ணன் தான்  ச்யாமந்தகத்துக்காக  ப்ரசேனனைகொன்றிருக்க வேண்டும்  என்று  முழங்காலுக்கும்  மொட்டைத்தலைக்கும்  முடிச்சு போட்டு விட்டேன்?.  பாவம்!  கிருஷ்ணன்  அலைந்து தேடி விசாரித்து  கடைசியில்  ச்யாமந்தகம்  ஜம்பவானிடம் இருப்பது தெரிந்து  28 
நாள்  ஜம்பவானுடன் யுத்தம்  செய்து  அதை கைப்பற்றி  என்னிடம்  கொண்டு கொடுத்தான்  அவன் உடலெல்லாம்  காயம்,  ரத்தம்." 
"என்னை மன்னித்து விடு,  கிருஷ்ணா!"   என  வேண்டிக்கொண்டு   "இது உனக்கே"   என  ச்யாமந்தகத்தை அவனிடம் கொடுத்தபோது  "இது  எனக்கு வேண்டாம்:   என்று சென்றான்  
நான்  ஓடிப்போய்  அவனை  "என் பெண்ணையாவது ஏற்றுக்கொள்"  என்றபோது  அவன் உன்னை பற்றி என்ன சொன்னான் தெரியுமா'
"என்ன சொன்னார்?".
"நீதான்  அவனுக்கு  ச்யாமந்தகமாம்"  என்று சொல்லி உன்னை ஏற்றுகொண்டான்.  
உங்களுக்கு  வெகு  விமரிசையாக திருமண  ஏற்பாடுகள்  செய்து கொண்டிருக்கிறேன்.  
இது தான் கதை என்றான்  சத்ரஜித் 
மனிதனின்  குறை  எப்போதுமே    "  பழி ஓரிடம்  பாவம்  ஓரிடம்


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...