Kutti
kadhai
35
என் வேலை புரிகிறதா?
சென்னை நகரத்திலும்
கொஞ்சம் அமைதியான ஒரு சிறு குடியிருப்பு கண்ணனூர்.
அதில் ஒரு புராதன
அழகான ஒரு சின்ன அமைதியான கிருஷ்ணன் கோவிலில் ராமானுஜாச்சாரி வெகுநாளாக பட்டாச்சாரியார். இந்த உலகில் அவரும் அந்த கோயிலின் கிருஷ்ணனும் தான் இணைபிரியா நண்பர்கள்.. .ராமானுஜசாரிக்கு ஏன் கிருஷ்ணன் யாருடனும் பேசுவதில்லை. எது சொன்னாலும், செய்தாலும் கிருஷ்ணன் கோயிலில் சிலையாகவே சிரித்து கொண்டே தான் பார்த்து கொண்டிருக்கிறான். இது ஏன்?
இந்த கேள்வி கிருஷ்ணமாச்சாரிக்கு மண்டைக்குள் குடைந்தது. பக்தர்கள் நாள்தோறும் வந்து எத்தனையோ குறைகள் சொல்லி, நன்றி சொல்லி, சிரித்து அழுது, கோபித்து, வருந்தி என்னென்னவோ உணர்சிகளை கிருஷ்ணனிடம் பரிமாறிக்கொள்கிறார்கள். அனைத்தையும் சிரித்துகொண்டே, நாள் முழுதும் நின்றுகொண்டே, களைப்பை காட்டாமல் இந்த கிருஷ்ணன் கேட்டுக் கொண்டு பொறுமையாக வாய் திறக்காமல் வெறுமே பார்த்துக்கொண்டே உணர்ச்சி காட்டாமல் இருக்கிறாரே. எவ்வளவு ஆயாசமாக
இருக்கும்? எனவே பட்டர்
"கிருஷ்ணா!, :இவ்வளவு பொறுமையோடு கால் கடுக்க தினமும் நிற்கிறாயே, உனக்கு ஒய்வு வேண்டாமா? ""ஆமாம் அப்பா, ஒய்வு தேவைதான், என்ன செய்ய?"
நான் வேண்டுமானால் உனக்காக ஒருநாள் நிற்கட்டுமா?"
"ரொம்ப சந்தோஷம், நான் உன்னை என்போல் சிலையாக்குகிறேன், ஒரு கண்டிஷன். எந்த காரணம் கொண்டும் நீ உன் உணர்சிகளை காட்டவோ, பேசவோ, எந்த பக்தர் விஷயத்திலும் தலையிடவோ கூடாது.
புன்னகையோடு அனைவருக்கும் பாரபட்சமின்றி அருளும் ஆசியும், தர்சனமும் வழங்கவேண்டும். செய்வாயா?"
"அவ்வாறே செய்கிறேன் கிருஷ்ணா. பாவம் , ஒருநாளாவது நீ ஓய்வேடுத்துக் கொள் ".
மறுநாள் பட்டர் கடவுள் சிலையாக நின்றார், முதலில் அன்று கோவிந்த ராவ், கவுன்சிலர், பணக்கார பில்டிங் கன்டிராக்டர் வந்தார். கிருஷ்ணனை வேண்டிக்கொண்டு, பெரும் தொகையை நன்கொடையாக கோயிலுக்கும் வழங்கினார். போகும்போது தன்னுடைய கை பையை ஞாபக
மறதியோடு (நிறைய பணம் அதில் இருந்தது) விட்டு விட்டு சென்று விட்டார்.கடவுளாக நின்ற பட்டருக்கோ " ஓய் , உம்முடைய மணிபர்ஸ் இங்கே இருக்கு, எடுத்து கொண்டு போம் " என்று சொல்ல நா எழும்பியது. ஆனால் கிருஷ்ணன் வாயே திறக்க கூடாது என கட்டளையிட்டது நினைவுக்கு வர, பேசாமல் பார்த்து கொண்டே நின்றார். சிறிது நேரம் கழிந்து கிராம கணக்குபிள்ளை கண்ணப்பன்-- நேர்மையானவர் ரொம்ப ஏழையும் தான் கிருஷ்ணன் முன்னால் நின்று தன்னிடமிருந்த ஒரு ரூபாயை மனமார காணிக்கையாக செலுத்தி விட்டு பிரார்த்தனை செய்தான்." கடவுளே, என் குடும்பம் நிர்கதியாய் நிற்கிறது. பெண்ணுக்கு மணம் செய்ய வழியில்லை கடன் தொல்லை வாட்டுகிறது. எவ்வளவு உழைத்தாலும் ஊதியம் போதவில்லை. நீயே கதி"
என வேண்டிக்கொண்டு கண்ணை திறந்தான். என்ன ஆச்சர்யம். விண்ணென்று பணம் நிரம்பி ஒரு பை எதிரில் தென்பட்டது “கடவுளே, இதுவும் உன் மாயா லீலை தானோ? இது தான் உன் கட்டளை
என்றால் அவ்வாறே ஆகட்டும். மகிழ்ச்சியோடும் நன்றியோடும் கண்ணப்பன் பணப்பையை எடுத்து சென்றுவிட்டான். பட்டருக்கு
"ஏலே, அது அந்த கண்டிராக்டர் விட்டுப்போனதையா. வைத்து
விட்டு போ!!" என கத்தவேண்டும்போல தோன்றியது ஆனால் கிருஷ்ணன் கட்டளை நினைவுக்கு வர வாய் கப் சிப். கொஞ்ச நேரத்தில் ஒரு துபாய் கப்பலில் மாலுமியான மணவாளன் வந்தான். அவன் வெகுநாளாக கிருஷ்ணனின் பக்தன். "கடவுளே, இன்று இரவு என் கப்பலில் வெளிநாடு சென்று மீண்டும் குடும்பத்தை பார்க்க ஒரு வருடம் ஆகுமே, நீ தான் என்னையும், என் கப்பலையும், அனைத்து சிப்பந்திகளையும், என் குடும்பத்தையும் காத்தருள வேண்டும்" என வேண்டி நின்று கொண்டிருந்த போது அங்கு திடீரென்று பணம் கோட்டை விட்ட கண்டிராக்டரும் கூட ஒரு போலீஸ்காரனும் வந்தனர். பணக்காரன் வேக வேகமாக சந்நிதியருகில் வந்து தன் கைப்பையை தேடினான். அங்கு நின்றுகொண்டிருந்த
கப்பல் மாலுமி மணவாளனை கண்டதும் அவன் சந்தேகம் வலுக்கவே போலீஸ் காரனிடம்
"இதோ நிற்கிறானே இவன் தான் என் பணத்தை அபேஸ் பண்ணியிருக்கிறான். இவனை கைது செய்து
உதை திங்க வைத்தால் உண்மையை கக்கி விடுவான்" என்று முறையிட்டான்.
“சார் எனக்கு ஒன்றும் தெரியாது நான் எந்த பணப்பையையும் பார்க்க வில்லையே" என்று மாலுமி கதற, அவனை போலீஸ்காரன் அழைத்து செல்லும் நேரத்தில், கடவுளாக நின்று காட்சியளிக்கும் பட்டருக்கு கோபம் வந்து விட்டது.
"அய்யா போலீஸ்காரரே இது அக்ரமம் இந்த மனிதர் திருடனில்லை. பணப் பையை அந்த கிழட்டு கணக்க பிள்ளை கண்ணப்பனல்லவோ இங்கு வந்தபோது எடுத்து சென்றுவிட்டதை நான் பார்த்தேன். இவரை
விட்டு விடுங்கள்" என திருவாய் மலர்ந்தார்." மாலுமிக்கு மிக்க சந்தோஷம். "கலியுகத்தில் கண் கண்ட தெய்வமே, நீயே பேசி உண்மையை உணர்த்தி என்னை காப்பாற்றினாய் " என வணங்கினார். காண்டிராக்டருக்குஆச்சர்யம்.சந்தோஷம். ஏழை பக்தன் கண்ணப்பன் எங்குள்ளான் என்று தேடி அவனிடத்திலிருந்து பணத்தைப் பெற போலீஸ்காரன் உதவியுடன் சென்றார். கடவுளே பேசிய அதிர்ச்சியில் ஓட்டமாய் ஓடி போலீஸ்காரர் பொன்னுசாமி கண்ணப்பனை தேடி ஓட்டமாய் ஓடி னார்.
ராமனுஜாச்சாரிக்கு தான் ஒரு நீதிமானாக நடந்ததில் தலை கால் புரியாத சந்தோஷம். அன்றிரவு கிருஷ்ணன் பட்டர் முன் தோன்றி " நண்பா! போதும் உன் உதவி. என் வேலையை
நானே பார்க்கிறேன். நீ உன் வேலையை மட்டும் இனி பார் என அதிருப்தியுடன் சொன்னார்."
"ஏன் நான் என்ன தப்பு செய்தேன்??
“கேள் சொல்கிறேன் கவுன்சிலர் பணக்காரன் கொடுத்த நன்கொடையும், கை பையில் இருந்த பணமும் அராஜக வழியில் சம்பாதித்தது. கோவிலுக்கு நன்கொடை என்கிற நல்ல காரியத்தில் அப்பணம் ஈடுபடும்போது பாவத்தின் சம்பளமாக விலையாக கொஞ்சம் பணம் ஒரு உண்மையான ஏழைக்கு
உதவினால் அந்த புண்யமாவது பணக்காரனின் பாவத்தை குறைக்கட்டுமே என ஏற்பாடு செய்தேன். உன்னாலான உதவி அதை கெடுத்தாய்
மாலுமியை போலீஸ் காரன் சிறை செய்து கப்பலில் வெளிநாடு செல்லாமல் செய்வதற்காக நான் போட்ட பிளானை நீ ரத்து செய்தாய். இன்றிரவு கடலில் பிரயாணம் செய்யும் அவன் கப்பல் சுனாமியில் மூழ்கபோகிறது. அவனையும், கப்பலில் இருக்கும் மற்றவரையும், மாலுமியின்
குடும்பத்தையும் காப்பாற்ற நான் செய்ய நினைத்ததை நீ மாற்றி அமைத்தாய். "ஒரு நாளில் இவ்வளவு செய்து விட்டாயே. பேசாமல் பார்த்து கொண்டிருந்தால் இது நடந்திருக்குமா? என கிருஷ்ணன் கேட்டதும் பட்டருக்கு வெலவெலத்தது.
இறைவனின் ஒவ்வொரு சங்கல்பமும் செயலும், அருளும், நம் சிற்றறிவுக்கு எட்டாதவை அல்லவா?
No comments:
Post a Comment